Latest News Tamil

Huawei தற்போது பரந்துபட்ட ஸ்மார்ட் அணிகலன் வகைகளை நுகர்வோருக்கு வழங்குகிறது

முன்னணி தொழில்நுட்ப தீர்வு வழங்குநரான Huawei, மேம்படுத்தப்பட்ட தொடர்பாடல், அனைத்து சூழ்நிலைகளுக்கும் ஏற்ற வகையிலான, விருப்பத்திற்கேற்ப, சுதந்திரம் கொண்ட இணைப்பு ஆகியவற்றின் மூலம் மிகவும் வசதியான ஸ்மார்ட் வாழ்க்கை அனுபவத்தை கொண்டு வந்து, நுகர்வோரின் பல்வேறு தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையிலான ஸ்மார்ட் அணிகலன் வகைகளை தற்போது இலங்கையில் வழங்குகிறது. இதுவொரு புத்திசாலித்தனமான வாழ்க்கையை வாழ்வதற்கான எளிய வழியாகும். சந்தையில் பலவிதமான ஸ்மார்ட் அணிகலன் வகைகளை Huawei அறிமுகப்படுத்தியுள்ளது. Huawei Watch 3, Huawei Band 6, Huawei […]

Latest News Tamil

Daraz.lk மூலம் vivo V, Y தொடர் ஸ்மார்ட்போன் கொள்வனவு செய்து அற்புதமான பரிசுகள், வெகுமதிகளை வெல்லுங்கள்

vivo தனது வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகள் மற்றும் விசேட பரிசுகளை வழங்கும் நோக்கில், இலங்கையின் முதலிடத்தில் உள்ள மிகப் பாரிய ஒன்லைன் சந்தையான Daraz.lk உடன் கூட்டுச் சேர்ந்துள்ளது இலங்கை, நவம்பர் XX, 2021: உலகளாவிய ரீதியில் ஸ்மார்ட்போன் தொழிற்துறையில் முன்னணியில் உள்ள vivo ஆனது, Daraz.lk உடன் இணைந்து Daraz இனது, மிகப்பாரிய நவம்பர் 11ஆம் திகதி விற்பனை நிகழ்வான ‘11.11’ நிகழ்வில் இணைந்துள்ளது. ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கடந்த 3 மாத கால கூட்டிணைவின் ஒரு அங்கமாக, V மற்றும் Y தொடர் ஸ்மார்ட்போன்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு vivo மற்றும் Daraz ஆகியன தங்கள் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குதூகலமூட்டும் பரிசுகளை வழங்குகின்றன. இந்த கூட்டு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, நவம்பர் 11 முதல் நவம்பர் 17 வரையான 7 நாட்களுக்கு vivo ஸ்மார்ட்போன்கள் விசேட கழிவு விலையில் வழங்கப்படுகின்றது. இப்பிரசாரத்தின் போது, Daraz.lk இலிருந்து vivo தயாரிப்புகளை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள், earbuds, earphones, pen drives, vivo T-shirts ஆகியவற்றை வெல்லும் வாய்ப்பை பெறுவதுடன், அவற்றின் விநியோக (shipping) சேவையை இலவசமாகப் பெற முடியும். இவ்விற்பனையின் போது கொள்வனவு செய்யக்கூடிய பல்வேறு அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன்களைப் பற்றி பேசும்போது, vivo இனது சமீபத்திய நேர்த்தியான, அழகிய V21 5G ஸ்மார்ட் போன் ஆனது 44MP OIS Night Selfie தொகுதியை கொண்டுள்ளது. V21e ஆனது, முற்புறமாக அமைந்த 44MP Eye Autofocus கெமராவை கொண்டுள்ளது. அது மாத்திரமன்றி, Y1s, Y12s, Y20s மற்றும் சமீபத்திய 64MP பின்புற கெமரா, 5,000mAh மின்கலம், 33W Flash Charge வசதிகளைக் கொண்ட Y53s போன்ற Y தொடர் ஸ்மார்ட்போன்களில் இருந்தும் வாடிக்கையாளர்கள் தமது தெரிவுகளை மேற்கொள்ளலாம். அத்துடன் vivo Y1s ஆனது, சிறந்த பார்வையிடல் அனுபவத்திற்காக 6.22 அங்குல Halo Full View™ திரையைக் கொண்டுள்ளது. மிகச் சிறந்த மற்றும் நீண்ட நேர பயனர் அனுபவத்தை வழங்கும் பொருட்டு, vivo Y12s ஆனது 3GB RAM உடன் 5,000mAh சக்தி கொண்ட மின்கலத்தையும் கொண்டுள்ளது. vivo Y20s ஆனது, G80 Gaming Processor, 4GB RAM, 128GB ROM உடன் வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவ்விற்பனையில், ஒவ்வொரு வகையான பயனர்களுக்கும் அவரவர் விரும்பும் வகையிலான கையடக்கத் தொலைபேசிகள் உள்ளன. அது மாத்திரமன்றி, முன்னணி கடனட்டைகள் மூலம் புதிய vivo ஸ்மார்ட்போன்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, பிரத்தியேகமான வவுச்சர்கள் மற்றும் இலகுவான வகையிலான பணம் செலுத்தும் திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இச்சலுகைகள் பற்றிய மேலதி விபரங்களுக்கு, https://click.daraz.lk/e/_7E4qH இற்கு அல்லது Daraz Mall இல் உள்ள vivo பிரத்தியேக கூடத்தை பார்வையிடவும் அல்லது vivo Sri Lanka இன் Facebook பக்கத்தைப் பார்வையிடவும். vivo பற்றி vivo ஆனது, ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் அறிவார்ந்த சேவைகளை மையமாகக் கொண்டு, வடிவமைப்பு சார்ந்த மதிப்பின் அடிப்படையில் சிறந்த தயாரிப்புகளை உருவாக்கும் தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்நிறுவனம் மனிதர்களுக்கும் டிஜிட்டல் உலகத்திற்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தனித்துவமான படைப்பாற்றல் மூலமான வழிகளில் தொழில்நுட்பத்தையும் நவநாகரிகத்தையும் ஒருங்கிணைக்கும் அற்புதமான, புதிய போக்கினை உருவாக்கும் ஸ்மார்ட் மொபைல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வடிவமைப்பதன் மூலம் பாவனையாளர்களை டிஜிட்டல் உலகத்துடன் இணைக்க vivo உறுதிபூண்டுள்ளது. Benfen*, வடிவமைப்பு சார்ந்த மதிப்பு, நுகர்வோர் சார்ந்த நிலை, தொடர்ச்சியான கற்றல் மற்றும் குழு மனப்பான்மை ஆகியவற்றை உள்ளடக்கிய நிறுவனத்தின் முக்கிய மதிப்புகளைப் பின்பற்றி, vivo ஒரு முன்னணி, நீண்டகால, உலகத் தரம் வாய்ந்த நிறுவனமாக மாறுவதற்கான தனது தொலைநோக்கினை அடைய நிலைபேறான அபிவிருத்தி மூலோபாயத்தை செயல்படுத்தியுள்ளது.  சிறந்த உள்ளூர் திறமையாளர்களை ஒன்றிணைத்து மேம்படுத்தும் அதே வேளையில், vivo வின் தலைமையகம் சீனாவின் Dongguanஇல் அமைந்துள்ளதுடன் Shenzhen, Dongguan, Nanjing, […]

Latest News Tamil

Huaweiஇலங்கையில் பல்வேறு வகையான தொழில்நுட்ப தயாரிப்புகளை நுகர்வோருக்கு வழங்குகிறது

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (ICT) உள்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி உலகளாவிய வழங்குநரான Huawei, உலகளாவிய ஸ்மார்ட்போன் பிராண்ட் என அறியப்படுவதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு நபருக்கும், வீடு மற்றும் நிறுவனத்திற்கும் டிஜிட்டலைக் கொண்டுவர உறுதிபூண்டுள்ள பல்வேறு தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநராகவும் உள்ளது. முழுமையாக இணைக்கப்பட்ட, அறிவார்ந்த உலகம். Huawei ஆனது நுகர்வோருக்குக் கிடைக்கும் பரந்த அளவிலான தொழில்நுட்பத் தயாரிப்புகளைக் கொண்டுள்ளது, இது ஸ்மார்ட்போன்களைத் தாண்டி டெப்கள், மானிட்டர்கள், மடிக்கணினிகள், கைக்கடிகாரங்கள் மற்றும் ஓடியோ தயாரிப்புகளை […]

Latest News Tamil

My Huawei App இலங்கையில் வெளியீடு

உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei, My Huawei App மூலம் அதன் பயனர்களுக்கு புதிய, ஸ்மார்ட் பயணத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறது. இந்த செயலியானது, வாடிக்கையாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் உரிய சேவைகளை அவர்கள் கண்டறிவதற்குமான உத்தியோகாபூர்வ, ஒரே இடத்தில் அனைத்தும் ஒருங்கிணைந்த தளமாகும். My Huawei App என்பது Huawei ஸ்மார்ட் போன்களில் முற்கூட்டியே நிறுவப்பட்ட Huawei Support App இனது புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும் என்பதுடன், இது Huawei நிறுவனத்தின் உத்தியோகபூர்வ உதவிக் குழுவுடன் நேரடியாக இணைவதற்கான […]

Latest News Tamil

DIMO விடமிருந்து TATA LPK 1618 டிப்பர்களை கொள்வனவு செய்யும் Edward & Christie குழுமம்

நாட்டின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றும் இலங்கையில் TATA வாகனங்களுக்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தருமான DIMO, அண்மையில் இருபத்தைந்து (25) TATA LPK 1618 டிப்பர்களை Edward & Christie குழுமத்திற்கு விநியோகித்துள்ளது. அத்துடன் மேலும் 15 டிப்பர்களை அந்நிறுவனம் கொள்வனவுக்காக கோரியுள்ளது. Edward & Christie குழுமத்திற்கு வழங்கப்பட்ட 25 டிப்பர் வாகனங்களும் பிரதானமாக கட்டுமானம் மற்றும் சுரங்கத் தொழிலுக்காக வழங்கப்பட்டுள்ளன. இது Cummins ISBe 5.9 180 40 எஞ்சினைக் கொண்டுள்ளதுடன், இது […]

Latest News Tamil

இலங்கையில் 4 வருட பூர்த்தியை கொண்டாடும் VIVO; வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததை வழங்க அர்ப்பணிக்கிறது

உலகளாவிய முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, இலங்கையில் தனது 4ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது. இந்த புதிய மைல்கல்லை எட்டுவதற்கும், vivoவை இலங்கையின் சமூகத்தின் ஒரு அங்கமாக மாற்றுவதற்கும், தொடர்ந்து ஆதரவளித்து, உதவி வரும், இலங்கையின் அனைத்து பங்காளிகள், ஊழியர்கள், விநியோகத்தர்கள், விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு vivo தனது நன்றிகளை தெரிவிக்கிறது. நான்கே ஆண்டுகளில், vivo இலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையில் கணிசமான இடத்தை பிடித்துள்ளதுடன், நாட்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்களில் ஒன்றாகவும் வளர்ந்துள்ளது. வாடிக்கையாளரை மையமாகக் […]

Latest News Tamil

உலக அரங்கிற்கு செல்லும் இலங்கையின் பாரம்பரிய அரிசி அடிப்படையிலான, முதலாவது சருமப் பராமரிப்பு தயாரிப்பு Vivya

உலகில் முதன்முதலாக இலங்கை பாரம்பரிய அரிசி உள்ளடங்கிய சருமப் பராமரிப்பு தீர்வு வகையான விவ்யா (Vivya), தெற்காசிய சந்தையிற்கும் அதனைத் தாண்டியும் செல்ல தயாராகியுள்ளது. முற்றுமுழுதாக இலங்கையில் தயாரிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட விவ்யா, இலங்கையின் வீடுகள் மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands குழுமத்தின் புத்தாக்க கண்டுபிடிப்பாகும். விவ்யா தயாரிப்பு வகைகளானவை, தனித்துவமான, முற்றிலும் புரட்சிகரமான, சருமப் பராமரிப்பு தீர்வாகும். காரணம், விவ்யா பெண்கள் விரும்பும் சருமத்தின் இளமைப் பொலிவை உருவாக்குகின்ற, இலங்கையின் […]

Latest News Tamil

சிறந்த பால், சிறந்த விலையில்; குறைந்த விலையில் வழங்கவும் தயார்; பெல்வத்தவின் வாக்குறுதி

நாட்டின் பெறுமதியான அந்நியச் செலாவணியைச் சேமித்து பல்வேறு வகையான பால் உற்பத்திகளை உற்பத்தி செய்யும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமங்களில் ஒன்றான Pelwatte Dairy, அண்மையில் சந்தையில் ஏற்பட்ட விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் அதன் தொழிற்சாலைகளில் இருந்து எவ்வித தடங்கலுமின்றி பால் விநியோகத்தை மேற்கொள்வதை உறுதி செய்துள்ளது. Pelwatte தயாரிப்பு வரிசையில், Pelwatte முழு ஆடைப் பால்மா, Pelwatte வெண்ணெய், Pelwatte யோகட், Pelwatte நெய் ஆகியன பிரபலமானவை. Pelwatte பால் விநியோகச் […]

Latest News Tamil

இலங்கையின் தனது 4ஆவது ஆண்டு பூர்த்தியை கொண்டாட விசேட நுகர்வோர் ஊக்குவிப்பு பிரசாரத்தை முன்னெடுக்கும் vivo

முன்னணி உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, இலங்கையில் தனது 4வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் முக்கிய ஒன்லைன் பங்குதாரர்களான BuyAbans.com மற்றும் Singhagiri  ஊடாக விசேட நுகர்வோர் ஊக்குவிப்பு பிரசாரமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒக்டோபர் 28 முதல் நவம்பர் 7, 2021 வரையிலான இந்த ஊக்குவிப்புக் காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு இந்த வர்த்தகநாமமானது உற்சாகமான பரிசுகளை வழங்குகின்றது. இந்த ஊக்குவிப்பு பிரசார காலத்தில் Y1s, Y12s, Y20, Y20s, Y53s, V21e மற்றும் V21 5G போன்ற தெரிவு […]

Latest News Tamil

காத்திரமான அறிக்கையை வெளியிடும் British Council – ‘காலநிலை மாற்றம் தொடர்பில் இளைஞர்கள்: ஒரு கருத்தாய்வு’

எதிர்வரும் வருடங்களில் காலநிலை மாற்றமானது இலங்கைக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக அமையுமென 66% பங்கேற்பாளர்கள் கருதுகின்றனர் குறிப்பாக, காலநிலை மாற்றமானது வரவிருக்கும் மிகப் பெரிய ஆபத்து என, இலங்கையின் கிராமப்புறங்களில் உள்ள பத்தில் ஆறு பேர் கருதுகிறார்கள் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாத்திரத்தை தம்மால் வகிக்க முடியுமென பங்கேற்பாளர்களில் 70% ஆனோர் நம்புகிறார்கள்; இது ஒரு ஊக்கமளிக்கும் கருத்தாகும் இது தொடர்பாக அறியும் வளங்களை அணுகுவது மிகக் குறைவாக அல்லது முற்றாக இல்லையென்பது ஒரு […]