Latest News Tamil

கடினமான காலப்பகுதியில் ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு தொடர்பில் கவனம் செலுத்தும் Pelwatte Dairy

தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை ஆதரிக்கவும், இலவச தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சுத்திகரிப்புப் பொருட்ளை வழங்கவும், வாராந்த எழுமாறான RAPID ANTIGEN பரிசோதனைளை மேற்கொள்ளவும் Pelwatte Dairy நடவடிக்கை எடுத்துள்ளது.

உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy, கோவிட் – 19 தொற்றுநோயின் போது அதன் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பாற்பண்ணையாளர்கள் மற்றும் பல்வேறு பங்காளர்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் தங்கள் பொறுப்பை வலியுறுத்தும் விதமாக விவேகமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியாவது வழங்கப்பட்டுள்ளதுடன், அனைத்து சுகாதார விதிமுறைகளும் அனைத்து இடங்களிலும் கடைபிடிக்கப்படுகின்றன. வாராந்த எழுமாறான ரெபிட் என்டிஜென் சோதனைகள் மற்றும் தொழில் பாதுகாப்பானது ஊழியர்களுக்கு மன அமைதியுடன் வேலைக்கு சமூகம் அளிக்க உதவியுள்ளன.

இது குறித்து Pelwatte Dairy இன் மனிதவள முகாமையாளர், ஹர்ஷன் ஜீவகுமார கருத்து தெரிவிக்கையில், “தேவையான அனைத்து சுகாதார விதிமுறைகளும் எல்லா நேரங்களிலும் பூர்த்தி கடைபிடிக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்து வருகிறோம். தொழிற்சாலையில் உள்ள ஊழியர்களுக்கு செனிடைசர், முகக்கவசங்கள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகளை இலவசமாக வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஊழியர்களின் உள ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்த நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.”

இக் காலப்பகுதியில்  நிறுவனத்தின் மீட்டெழுச்சியானது, Pelwatte அதன் உற்பத்தி செயல்முறைகளை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய ஆண்டை விட இருமடங்கு வளர முடியும் என்பதையும் உறுதி செய்துள்ளது. மார்ச் 2020 இல் இலங்கையில் தொற்றுநோய் பரவ ஆரம்பித்தமை முதல் கடுமையான மற்றும் காலத்துக்கு ஏற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந் நிறுவனமானது தனது அனைத்து செயல்முறைகளும் அதிகாரிகளால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின் படி முன்னெடுக்கப்படுவதையும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பாற்பண்ணையாளர்கள் மற்றும் அனைத்து பங்காளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தது.

ஹர்ஷன் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “எங்கள் ஊழியர்கள் அனைவரும் இப்போது குறைந்தபட்சம் முதல் தடுப்பூசியையாவது பெற்றுள்ளனர். ஒரு முன்னணி மருத்துவமனையுடன் நாங்கள் கைகோர்த்துள்ளமையானது ஒவ்வொரு வாரமும் எம்மால் குறைந்தது 50% ஊழியர்களை என்டிஜென் பரிசோதனை கருவிகளைப் பயன்படுத்தி பரிசோதிக்க முடிந்துள்ளது. அனைத்து ஊழியர்களும் மாதத்திற்கு இரண்டு முறை பரிசோதனை செய்யப்படுவதை இது உறுதி செய்கிறது. அவர்களில் எவருக்கேனும் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், பி.சி.ஆர் பரிசோதனைக்காக சுகாதார மருத்துவ அதிகாரியிடம் அனுப்பப்படுவார்கள். அவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டு, அவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டால், ரூபா 5000 பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி, அவசியமான விட்டமின்கள் மற்றும் மூலிகை மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”

இது மட்டுமன்றி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரிகள் தொடர்ச்சியாக நிறுவனம் மற்றும் அதன் முழுமையான சுழற்சியையும் பரிசோதிக்க Pelwatte ஏற்பாடு செய்துள்ளது. தொழிற்சாலையின் முழுமையான வளாகங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொற்றுநீக்கம் செய்யப்படும் நிறுவனத்தால் வாரந்தோறும் கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன. நோய்த்தொற்றுக்குள்ளாகும் அதிக ஆபத்து கொண்ட முக்கியமான பணியாளர்களுக்கு பயனுள்ள உயிரியல் குமிழி முறைமை செயற்படுத்தப்படுகின்றது. சிற்றுண்டிச்சாலை, கழிப்பறைகள்  போன்ற பொது இடங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது தொற்றுநீக்கம் செய்யப்படுகின்றன. நிறுவனம் தனது ஊழியர்களை மட்டுமே தொழிற்சாலை நுழைவாயுளுக்குள் அனுமதிக்க முடிவு செய்துள்ளது.

டிரக்குகள் மற்றும் வாகனங்கள் வழக்கமாக கிருமி நீக்கம் செய்யப்படுவதுடன் வகைப்படுத்தலுக்குப் பயன்படுத்தப்படும் கொள்கலன்கள் மற்றும் பாண்டங்கள் அடிக்கடி சுத்தம் செய்யப்படுவதுடன், தொற்று நீக்கம் செய்யப்படுகின்றன. அதேபோல் சாரதிகளும் வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு கட்டாயமாக தம்மை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Pelwatte அதன் ஊழியர்களதும், இத்துறைக்கு துணை மற்றும்   உதவிச் சேவைகளை வழங்கும் 10,000 + பாற்பண்ணையாளர்கள் மற்றும் மேலும் பல குடும்பங்களினதும் தொழிற்பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. இந் நிறுவனம் தொழிற்துறை மற்றும் சமூகத்தை வலுப்படுத்தி வருகிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *