ஸ்மார்ட் அணிகலன் தொழில்நுட்பத்தின் விரிவாக்கத்துடன் ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் மிகவும் பொதுவானதாகிவிட்டன. உயர் இசைவாக்கத் தன்மை, பயன்பாட்டு அம்சங்கள், வடிவில் சிறியது உள்ளிட்ட இயல்புகளுடன் ஸ்மார்ட் வாட்ச்களில் தூக்கம், இதயத் துடிப்பு, இரத்த அழுத்த கண்காணிப்பு போன்ற பல ஸ்மார்ட் அம்சங்கள் காணப்படுகின்றமையானது, ஆரோக்கியம் தொடர்பில் அக்கறை கொண்டுள்ள பல்லாயிரக்கணக்கானோரை ஈர்த்துள்ளது. ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வின் அடிப்படையிலான ஒரு புதிய கட்டுப்பாட்டு நிலையை அது அவர்களுக்கு அளிக்கிறது. ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியாளர்கள் உயர்தர அம்சங்களில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், பாரம்பரிய […]
Latest News Tamil
கமட்ட சன்னிவேதன’ திட்டத்தை ஆரம்பித்த Hutch – 1000 இற்கும் அதிக பின் தங்கிய பிரதேச மாணவர்களுக்கு இணைய இணைப்பை வழங்கும் வெனிவெல்- ஆர கோபுரம்
மொபைல் புரேட்பேண்ட் சேவைகளுக்கான இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் தெரிவான HUTCH, புவியியல் சவால்களை மீறி முழு நாட்டிற்கும் புரோட்பேண்ட் கவரேஜை வழங்கும் நோக்கத்துடன் இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) ஆரம்பித்த ‘கமட்ட சன்னிவேதனய’ திட்டத்துடன் கைகோர்த்துள்ளது. TRCSL இன் வழிகாட்டல் மற்றும் ஆதரவுடன், வெனிவெல் ஆர கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கும் மக்களுக்கும் அத்தியாவசிய இணைய இணைப்பை வழங்குவதற்கான முக்கிய நோக்கத்துடன் வெனிவெல் ஆர கோபுரத்தை HUTCH அறிமுகப்படுத்தியது. வெனிவெல் ஆர, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள […]
சுதேசி கோஹோம்ப 13ஆவது ஆண்டாக தெவுந்தர உத்பலாவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தையும் அலுத்நுவர ஸ்ரீ தெடிமுண்ட மகா தேவாலயத்துடன் ஒளியூட்டுகிறது
தெவுந்தர உத்பலாவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயம் மற்றும் அலுத்நுவர ஸ்ரீ தெடிமுண்ட மகா தேவாலயம் ஆகியன, முன்னணி மூலிகை – தனிநபர் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தியாளரான, சுதேசி இன்டஸ்ட்ரியல் வேர்க்ஸ் பி.எல்.சி.யினால் ஒளிரூட்டப்படுகின்றது. வருடாந்திர எசலா திருவிழாவின் போது, ”சுதேசி கோஹோம்ப ஆலோக பூஜா சத்காரய” எனும் கருப்பொருளின் கீழ், இந்த ஒளியூட்டும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. சுதேசியினால், அலுத்நுவர ஸ்ரீ தெடிமுண்ட மகா தேவாலயம் தொடச்சியாக ஒளியூட்டப்படும் இரண்டாவவது வருடம் இதுவாகும். இந்நிகழ்வு தொடர்பில் கருத்து […]
பெல்வத்த பால்பொருள் நிறுவனம் கொவிட் சவால்களைக் கடந்து தன் வரிக்கு முந்தைய இலாபத்தினை 148 வீதத்தினால் அதிகரித்துள்ளது
அத்தோடு, பால் பண்ணையாளர்களுக்கான வருடத்திற்கு வருட கொடுப்பனவை 70 வீதத்தால் அதிகரித்துள்ளது. உள்நாட்டில் பல்வேறு வகையான பால்பொருட்களை உற்பத்தி செய்து, நாட்டின் அந்நிய செலாவணியையும் சேமிக்கும் இலங்கையின் முன்னணி பால்பொருள் நிறுவனமான பெல்வத்த பால்பொருள் நிறுவனமானது, வருடத்திற்கு வருட வரிக்கு முந்தைய இலாபத்தை (PBT) 148 வீதத்தால் அதிகரித்து 2020/2021இல் குறிப்பிடத்தக்க நிதியியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நிதியொதுக்கீட்டின்போது எதிர்பார்க்கப்பட்ட இலாப இலக்கைவிட சற்று குறைந்த இலாபத்தையே இந்த நிறுவனம் 2020/2021இல் பெற்றுள்ளது. நிறுவனத்தின் மொத்த இலாபம் 180 […]
சிறந்த எதிர்காலத்திற்காக உள்ளூர்மய நிலைபேறான அபிவிருத்திக்கான பிரசாரம் #ActionToImpact
தற்போது உலகம் மிகப் பாரிய சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. கொவிட்-19 தொற்றானது, இயற்கை, மனிதர்கள், பொருளாதாரம், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (SDG) ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பை நிரூபித்துள்ளது. 2030 இற்குள் இந்த உலகளாவிய இலக்குகளை அடைவதில் ஏதேனும் தாமதத்தை ஏற்படுத்துமாயின், இத்தொற்றுநோயானது உலகின் முன் ஒரு பெரிய சவாலை முன்வைத்துள்ளதுடன் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியதையும் வெளிப்படுத்தியுள்ளது. வறுமையானது நீண்ட காலமாக உலகம் முழுவதும் ஒரு முக்கியமான பிரச்சினையாக காணப்பட்டு வருகின்றது. கொவிட்-19 […]
மீண்டும் ஒரு முறை வெற்றியை சுவைத்த IIT இன் மெய்நிகர் Careers Week 2021
இலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் முன்னோடியாகவும், நாட்டிலுள்ள முதன்மையான தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறை பல்கலைக்கழகமாகவும் திகழும் Informatics Institute of Technology (IIT), தனது 30 ஆவது ஆண்டு கல்வி மேன்மையை கொண்டாடியதுடன்,கொவிட் 19 தொற்றுநோயை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டிய தேவையின் பொருட்டு தனது முதலாவது IIT Careers Day 2021 நிகழ்வை ஒன்லைன் தளத்தின் ஊடாக நடாத்தியிருந்தது. தொடர்ச்சியாக இரண்டாவது […]
வினைத்திறனான வாழ்க்கைக்கு Huawei Nova 7 SE உடன் இணைக்கக்கூடிய மூன்று Huawei ஸ்மார்ட் சாதனங்கள்
உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, உலகின் முதலவாது மத்திய ரக 5G ஸ்மார்ட்போனை கடந்த வருடம் அறிமுகப்படுத்தியதன் மூலம் 5G தொழில்நுட்பத்துக்கான அணுகலை ஒவ்வொருவருக்கும் வழங்கியது. இந்த ஸ்மார்ட்போன் 5G மற்றும் அதன் திறன்களைப் பற்றி அதிக எதிர்பார்ப்பு ஏற்பட் நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. Huawei Nova 7 SE ஏற்கனவே மத்திய ரக ஸ்மார்ட்போன் பிரிவில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. Nova 7 SE இன் மிக முக்கியமான அம்சம் அதன் 5G […]
NAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு
தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (NAITA) மற்றும் முன்னணி ICT தீர்வு வழங்குநரான Huawei உடன் இணைந்து, கடந்த ஜூலை 16, வெள்ளிக்கிழமையன்று, தொழில் பயிற்சிக்கான NAITA-HUAWEI ICT Academy இனை திறந்துள்ளது. இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் – பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல, NAITA நிறுவன தலைவர், தரங்க நலீன் கம்லத், Huawei Sri Lanka நிறுவன பிரதான […]
Huawei Y6p மற்றும் Band 4e (Active) உடன் இணையற்ற நன்மைகளை வழங்கும் Huawei
Huawei Y6p என்பது Y தொடரில் முன்னணி ஸ்மார்ட்போன் என்பதுடன் இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலமானதாகும். பல தொழில்நுட்ப ஆர்வலர்கள் சிறப்பம்சங்களால் நிரம்பிய Y6p இனைப் பாராட்டுகையில், புதிய Y6p ஸ்மார்ட்போனை கொள்வனவு செய்யும் போது 5GB இலவச Huawei மொபைல் கிளவுட் ஸ்டோரேஜ் சலுகை வழங்கப்படுமென ஹவாய் அறிவித்துள்ளது. புதிதாக கொள்வனவு செய்த Y6p சாதனத்துடன் இலவச கிளவுட் ஸ்டோரேஜினைப் பெற, பயனர் முதலில் Huawei ID உடன் பதிவு செய்ய வேண்டும். எதிர்கால அணுகலுக்காக […]
Sri Lanka Unites வழங்கும் ஷார்க் டேங்க்: இலங்கையின் இளம் தொழில் முனைவோர் உணர்வை தட்டியெழுப்பும் ஓர் செயற்திட்டம்
Sri Lanka Unites அமைப்பு தனது பேஸ்புக் பக்கம் மற்றும் யூடியூப் சேனல் வழியாக ஷார்க் டேங்க் நிகழ்வை கடந்த ஏப்ரல் 24, 2021 அன்று நேரடியாக வழங்கியது. Sri Lanka Unites நல்லிணக்கம் மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டுக்கான இலங்கையின் மிகப்பெரிய இளைஞர் இயக்கமாக காணப்படுகின்றது. Sri Lanka Unites அமைப்பானது நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சேவையாற்றுவது மட்டுமல்லாமல், 9 நல்லிணக்க நிலையங்களை நிறுவியுள்ளது. இந்த நல்லிணக்க நிலையங்களில் வணிக முயற்சியாண்மை ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டு […]