HUTCH தனது புதிய வர்த்தகநாம பெறுமான நிலைத்தோற்றமான “Be. Anywhere.” இனை அறிமுகப்படுத்தும், புத்துணர்வான நிகழ்வினை அதன் ஊழியர்கள் முன்னிலையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த முழு அளவிலான – வலையமைப்பு பிரச்சாரமானது, HUTCH தற்போது எவ்வாறு ஒரு பாரிய மற்றும் சிறந்த வலையமைப்பு வழங்குநராக உருமாறியுள்ளது என்பதனை எடுத்துக்காட்டியது. விரிவாக்கப்பட்ட 2G, 3G மற்றும் புத்தம் புதிய 4G வலையமைப்பு செயற்படுத்தலை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர், HUTCH இப்போது நாட்டின் 25 மாவட்டங்களிலும் 95% வலையமைப்பை வழங்குவதுடன், வாடிக்கையாளர்களை “எங்கும் இருக்க” (be anywhere) வலுவூட்டுவது மட்டுமன்றி, HUTCH இன் தனித்துவமான சலுகைகளை அணுகக்கூடியதாக இருக்க வழிசெய்கின்றது. இந்த நடவடிக்கைகளுக்கு HUTCH நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி, திருக்குமார் நடராசா, அவரது சிரேஷ்ட முகாமைத்துவத்தினருடன் இணைந்து தலைமை தாங்கினார். நாடு முழுவதும் 4G வலையமைப்பை விரிவுபடுத்தியதன் மூலம், HUTCH நிறுவனமானது வாடிக்கையாளர்கள் தங்களது சிக்கல்களை தீர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை, சிக்கனமான கட்டணங்களில் பெறும் வகையில் வலுவாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. இந் நிறுவனமானது, வெறும் 12 மாதங்களுக்குள் அடைந்த சாதனைகளை பணியாளர்களுடன் தொடர்புகொள்வதிலும், இலங்கையின் மிக வேகமாக வளர்ந்து வரும் மொபைல் புரோட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றின் எதிர்காலத் திட்டங்களில் ஈடுபட, அறிவினைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பளிப்பதிலும் இந்த நிகழ்வு வெற்றிகரமாக அமைந்தது.
Related Articles
இலங்கையில் ZenBook 14 (UX435EG) இனை அறிமுகப்படுத்தியுள்ள ASUS
சிறப்பான செயல்திறன் மட்டுமன்றி இலகுவாக கொண்டு செல்ல வசதியாக மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள ZenBook 14 UX435EG மடிக்கணினியை ASUS Sri Lanka அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் நிறை வெறும் 1.19 கிலோ கிராம் என்பதுடன், கச்சிதமான ZenBook 14 பயணத்திற்கு மிகவும் ஏற்றது. இது சிறந்த மின்கல ஆயுளை வழங்குவதானது பாவனையாளரை பணிகளில் முழுமையாக கவனம் செலுத்த உதவுகின்றது. இந்த மொடலானது புரட்சிகர ASUS ScreenPad இனைக் கொண்டுள்ளது. இதுவொரு இரண்டாவது 5.65 அங்குல வண்ண தொடுதிரையென்பதுடன், […]
மீண்டும் ஒரு முறை வெற்றியை சுவைத்த IIT இன் மெய்நிகர் Careers Week 2021
இலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் முன்னோடியாகவும், நாட்டிலுள்ள முதன்மையான தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறை பல்கலைக்கழகமாகவும் திகழும் Informatics Institute of Technology (IIT), தனது 30 ஆவது ஆண்டு கல்வி மேன்மையை கொண்டாடியதுடன்,கொவிட் 19 தொற்றுநோயை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டிய தேவையின் பொருட்டு தனது முதலாவது IIT Careers Day 2021 நிகழ்வை ஒன்லைன் தளத்தின் ஊடாக நடாத்தியிருந்தது. தொடர்ச்சியாக இரண்டாவது […]
SLIM DIGIS 2.0 விருதினை வென்ற ஒரேயொரு தொலைத்தொடர்பு வர்த்தகநாமம் என்ற கௌரவத்தை பெற்றுக்கொண்ட Hutch
இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவை வழங்குனரான Hutch, தொலைத்தொடர்பு துறையில் அதன் நன்மதிப்பை புதிய உயரத்திற்கு கொண்டு சென்ற புதுமையான 360 பாகை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பிரசாரங்களுக்காக SLIM DIGIS 2.0 வருடாந்த விருது வழங்கும் விழாவில் விருதொன்றை தனதாக்கிக் கொண்டது. கடுமையாக அமைந்த போட்டியையும் மீறி “Digital Campaigns Excellence 2019” பிரிவில் வெண்கல விருதினை Hutch வெற்றி கொண்டதுடன், மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்வில் வெற்றியை தனதாக்கிக் கொண்ட […]