HUTCH தனது புதிய வர்த்தகநாம பெறுமான நிலைத்தோற்றமான “Be. Anywhere.” இனை அறிமுகப்படுத்தும், புத்துணர்வான நிகழ்வினை அதன் ஊழியர்கள் முன்னிலையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த முழு அளவிலான – வலையமைப்பு பிரச்சாரமானது, HUTCH தற்போது எவ்வாறு ஒரு பாரிய மற்றும் சிறந்த வலையமைப்பு வழங்குநராக உருமாறியுள்ளது என்பதனை எடுத்துக்காட்டியது. விரிவாக்கப்பட்ட 2G, 3G மற்றும் புத்தம் புதிய 4G வலையமைப்பு செயற்படுத்தலை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர், HUTCH இப்போது நாட்டின் 25 மாவட்டங்களிலும் 95% வலையமைப்பை வழங்குவதுடன், வாடிக்கையாளர்களை “எங்கும் இருக்க” (be anywhere) வலுவூட்டுவது மட்டுமன்றி, HUTCH இன் தனித்துவமான சலுகைகளை அணுகக்கூடியதாக இருக்க வழிசெய்கின்றது. இந்த நடவடிக்கைகளுக்கு HUTCH நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி, திருக்குமார் நடராசா, அவரது சிரேஷ்ட முகாமைத்துவத்தினருடன் இணைந்து தலைமை தாங்கினார். நாடு முழுவதும் 4G வலையமைப்பை விரிவுபடுத்தியதன் மூலம், HUTCH நிறுவனமானது வாடிக்கையாளர்கள் தங்களது சிக்கல்களை தீர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை, சிக்கனமான கட்டணங்களில் பெறும் வகையில் வலுவாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. இந் நிறுவனமானது, வெறும் 12 மாதங்களுக்குள் அடைந்த சாதனைகளை பணியாளர்களுடன் தொடர்புகொள்வதிலும், இலங்கையின் மிக வேகமாக வளர்ந்து வரும் மொபைல் புரோட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றின் எதிர்காலத் திட்டங்களில் ஈடுபட, அறிவினைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பளிப்பதிலும் இந்த நிகழ்வு வெற்றிகரமாக அமைந்தது.
Related Articles
பிரம்மாண்ட ஒன்லைன் அறிமுக நிகழ்வில் பல ஸ்மார்ட் சாதங்களை அறிமுகப்படுத்திய Huawei
4 GB RAM + 64GB நினைவகத்துடன் கூடிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Y6p அடங்கலாக புத்தாக்க ஸ்மார்ட்போன் நிறுவனமான Huawei Y6p, Y5p, Huawei MatePad T 8, Huawei MateBook 13 மற்றும் MateBook D 15 என பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களை இலங்கையின் முதலாவது பிரம்மாண்ட ஒன்லைன் நிகழ்வில், மாபெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மற்றும் உயர் ஈடுபாட்டுடனும் அறிமுகப்படுத்தியது. இந்த ஐந்து சாதனங்களும் இலங்கை சந்தையில் அவற்றின் தனித்துவமான அம்சங்களுடன் புரட்சியை ஏற்படுத்தவுள்ளதுடன், செயற்திறன், […]
இலங்கை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை வலுப்படுத்த Study Group இன் இங்கிலாந்து தனிமைப்படுத்தல் நிதி
தனது விரிவான மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு சலுகையின் ஒரு பகுதியாக, முன்னணி சர்வதேச கல்வி வழங்குநரான Study Group, செப்டெம்பரிலிருந்து மாணவர்கள் இங்கிலாந்தில் படிக்க மற்றும் வேலை செய்ய உதவுவதற்காக ஒரு புதிய தனிமைப்படுத்தல் உதவி நிதி வழங்கலை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது. 2021/2022 கல்வியாண்டில் இலங்கை மாணவர்களுக்கு இங்கிலாந்தின் உயர் கல்விப் பாதை (UK Higher Education pathway) திட்டங்களை அணுகுவதற்கு உதவியாக, தனிமைப்படுத்தல் ஹோட்டல் செலவுகளுக்கு உதவும் வகையில், இங்கிலாந்தின் தற்போதைய பயண “சிவப்பு பட்டியலில்” […]
முச்சக்கர வண்டி உரிமையாளர்களை கொவிட் தொற்றிலிருந்து மீட்க கொமர்ஷல் லீசிங் மூலம் விசேட பாதுகாப்பு பிரிப்பான்
விழிப்பூட்டல் திட்டமும் முன்னெடுப்பு தனது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த மற்றும் நம்பகமான நிதிச் சேவை வழங்குநரான கொமர்ஷல் லீசிங் & பினான்ஸ் (CLC), கொவிட்-19 தொற்று பரவலைத் தொடர்ந்து, இலங்கை மக்களின் நலனின் பொருட்டு, புதிய சமூக நலன் கொண்ட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. அந்த வகையில், நாடு முழுவதுமுள்ள தங்களது நிறுவனத்தின் வாடிக்கையளர்களான, முச்சக்கர வண்டி உரிமையாளர்களைப் பாதுகாக்கும் வகையில், முச்சக்கர வண்டிகளுக்கான பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு பிரிப்பான்களை (separators) அது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கவசங்களை […]