இலங்கையில் வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னணியில் உள்ள உற்பத்தியாளரான Hemas Consumer Brands நிறுவனம் இலங்கையின் மழைக்காடு பாதுகாப்பாளர்களான Rainforest Protectors of Sri Lanka உடன் இணைந்து காடுகளை மீள் வளர்ப்பதற்கும் இலங்கையின் மழைக்காடுகளைப் பாதுகாப்பதற்குமான கூட்டு முயற்சியில் மீண்டும் ஈடுபட்டுள்ளது.
2021 இல் முன்னெடுக்கப்பட்ட பலாங்கொடை காடு வளர்ப்புத் திட்டமானது பேபி ஷெரமி, குமாரிகா மற்றும் Rainforest Protectors of Sri Lanka ஆகியோரால் இணைந்து முன்னெடுக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தில் Hemas Holdings நிறுவனத்தின் அனைத்து வணிகப் பிரிவுகளையும் சேர்ந்த தன்னார்வலர்கள், வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் உறுப்பினர்கள், அதனை அண்டிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆகியோர் இணைந்து காடுகளை மீள் வளர்ப்பதில் தங்களது பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
இத்திட்டமானது மழைக்காடுகளை புதிய மரங்களால் நிரப்ப உதவுவது மட்டுமல்லாமல், தற்போதுள்ள வனப் பகுதிகள், காடுகளைச் சுற்றி வாழும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை கடுமையான காட்டுத் தீயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. பலாங்கொடை காடு மீள் வளர்ப்பு போன்ற திட்டங்கள், நாட்டு மக்கள் மற்றும் அதிகாரிகளை ஊக்குவிப்பதற்காக எமது வன வளங்களை பாதுகாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வரும் திட்டங்களாகும்.
Hemas Consumer Brands ஆனது, இது போன்ற திட்டங்கள் மூலம் Hemas Groups யினது சூழல் தொடர்பான நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளிப்பதோடு, Rainforest Protectors of Sri Lanka உடன் இணைந்து இயற்கையை பாதுகாப்பது தொடர்பான நீண்ட கால முயற்சிகள் மற்றும் இலங்கையில் மழைக்காடுகளை பாதுகாப்பதை ஊக்குவிக்கும் ஏனைய திட்டங்களுடன் இணைந்து தொடர்ச்சியாக செயற்படும்.
END