1. இலங்கைச் சந்தையில் vivo நுழைந்து நான்கு வருடங்களுக்கு மேலாகிறது. இக்காலப்பகுதியில், vivo எவ்வாறு சந்தையில் நிலையான இடத்தை பிடித்தது? வெளிநாட்டு சந்தைகளில் vivo வின் முன்னேற்றம் எவ்வாறு இருக்கிறது?
நாம் ஏப்ரல் 2014 இல் தெற்காசியாவில் எமது பயணத்தைத் ஆரம்பித்தோம். அதனைத் தொடர்ந்து படிப்படியாக ஐரோப்பா, ஆசியா பசிபிக், ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, இலத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய பகுதிகளுக்கும் நாம் எமது விரிவாக்கத்தை மேற்கொண்டோம். குறிப்பாக, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மட்டிட முடியாத சாதனைகள் நிலை நாட்டப்பட்டுள்ளன. ஒரு ஆரோக்கியமான, நிலையான, நிலைபேறான வளர்ச்சியானது சர்வதேச சந்தைகளில் vivo இன் இருப்பை நிலைநிறுத்துவதற்கான மையப்புள்ளியாக உள்ளன.
2017ஆம் ஆண்டு இலங்கையில் நாம் முதன்முதலாக நுழைந்ததிலிருந்து, எமது உற்பத்தி மேம்பாட்டுக் குழுவினர் அறிந்து கொள்ளும் வகையிலான, ஆழமான ஆராய்ச்சிகள் உள்ளிட்ட, நாட்டிலுள்ள நுகர்வோரின் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கு அவசியமான குறிப்பிடும்படியான வளங்களை நாம் பயன்படித்தியுள்ளோம். தனியே புத்தாக்கத்தை மாத்திரம் காண்பிப்பதற்காக நாம் புத்தாக்கமான கண்டுபிடிப்புகளை உருவாக்கவில்லை, மாறாக சிறந்த கையடக்கத் தொலைபேசி அனுபவத்தை அடையும் வகையில் வாடிக்கையாளர் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் எமது தயாரிப்புகளை வடிவமைக்கிறோம். சிறந்த கெமராக்கள், அற்புதமான செயற்றிறன் மற்றும் நவநாகரீக முழுமையாக்கப்பட்ட தோற்றத்துடன் தொழில்துறையிலுள்ள முன்னணி தொழில்நுட்பத்தை மேம்படுத்தி அதனை தயாரிப்புகளில் தொடர்ந்து முதலீடு செய்ய நாங்கள் அர்ப்பணித்துள்ளோம் என்பதை இலங்கையில் வெளியிடப்பட்டுள்ள எமது தயாரிப்பு வரிசைகளிலிலிருந்து உறுதியாகக் குறிப்பிடலாம்.
2. இலங்கையில் உள்ள உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் எவ்வாறு சேவை செய்கிறீர்கள்? உங்கள் வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறான சேவைகளை வழங்குகின்றீர்கள்?
வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட தரக்குறியீடு எனும் வகையில், vivo இடைவிடாமலும், பொறுப்புடனும் செயற்பட்டு, எவ்வித தடங்கலுமற்ற கொள்வனவு அனுபவத்தை வழங்கும் அதே வேளையில், ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு இடையிலான நடவடிக்கைகளில் வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் அவர்களது வசதியை உறுதி செய்கிறது. இலங்கையில் எமது வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட்போன் பிரச்சினைகளை தீர்க்கும் 2 சேவை மையங்கள் கொழும்பு மற்றும் காலியில் உள்ளன. மேம்பட்ட வாடிக்கையாளர் சேவை அனுபவத்திற்காக கடந்த வருடம் முதல் vivo வாடிக்கையாளர் சேவை தினத்தை ஆரம்பித்தோம். இதில், வாடிக்கையாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட vivo சேவை மையங்களில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் துணைக் கருவிகளுக்கு விசேட சலுகைகள் மற்றும் இலவச சேவைகள் வழங்கப்படும். vivo ஸ்மார்ட்போன்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு உற்சாகமான பரிசுகள் மற்றும் சலுகைகளை வழங்கும் வகையில், உள்நாட்டிலுள்ள இணைய வர்த்தகத் தளங்களுடன் நாம் தொடர்ச்சியாக கூட்டுச் சேர்ந்து வருகிறோம்.
3. 5G போட்டிக்கு vivo எவ்வாறு தயாராகிறது? 6G தொழில்நுட்பம் தொடர்பான தொலைநோக்கு யாது?
5G உடனான vivo வின் ஈடுபாட்டின் ஒரு சிறிய பின்னணியுடன் இதனை ஆரம்பிக்க விரும்புகிறேன். டிசம்பர் 2016 இல் சீனாவின் பீஜிங் மற்றும் ஷென்சென் நகரம் முழுவதும் விசேட 5G செயலணிகளை vivo நிறுவியது. 100 இற்கும் மேற்பட்ட உலகளாவிய தரத்திலான வல்லுநர்கள் அதன் தகவல்தொடர்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றுவதால், தற்போது vivo 5G தொடர்பான கண்டுபிடிப்புகளில் 3,000 காப்புரிமைகளைக் கொண்டுள்ளது. 5G வலையமைப்புகள் படிப்படியாக உலகம் முழுவதும் நிறுவப்பட்டு, நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் படிப்படியாக அது தொடர்பான மேம்பட்ட சாதனங்கள் ஊடுருவி வருகின்றன. கையடக்கத் தொலைபேசித் துறையின் சிந்தனையாளர்கள் ஏற்கனவே அதன் அடுத்த தலைமுறையான 6G தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளனர். இந்த அற்புதமான புதிய சகாப்தத்தைத் ஆரம்பிக்க, vivo தொடர்பாடல் ஆராய்ச்சி நிறுவனத்தினால், 2020 இன் பிற்பகுதியில் 6G தொழில்நுட்பத்தின் அம்சங்களை வெளிப்படுத்தும் இரண்டு ஆழமான விடயங்கள் தொடர்பான அறிக்கைகளை நிறுவனம் வெளியிட்டது.
4. உங்களது எதிர்காலத் திட்டங்கள் யாவை? vivo தன்னை எவ்வாறு தனித்து அடையாளப்படுத்த திட்டமிட்டுள்ளது?
‘நோக்கத்தை அடைவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்தல்’ எனும் vivoவின் மனநிலையின் அடிப்படையில், எமது இலக்கிற்கு உட்பட்ட பயனர்களின் திருப்தியைப் பெறுவதன் மூலம், உயர் நிலை சந்தையில் நாம் எமது தனித்துவத்தை பேணுவோம். அவ்வாறு மேற்கொள்வதற்காக, தரக்குறியீடு மற்றும் தயாரிப்பு ஆகிய இரண்டு பரிமாணங்களிலும் பயனர்களை இலக்காகக் கொள்வது அவசியமாகும்.
தயாரிப்பு பரிமாணத்தின் அடிப்படையில், பயனர்களை உண்மையிலேயே ஈர்க்கும் சிறந்த தயாரிப்புகளை வடிவமைத்து வெளியிட நாம் முயற்சிகளை மேற்கொள்கிறோம். தரக்குறியீட்டை பொறுத்தவரை, vivoவின் தரக்குறியீடு தொடர்பான பார்வையை மேம்படுத்துதல், நுகர்வோர் எம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மேம்படுத்துதல், தரக்குறியீட்டை உரிய தரத்தில் பேண உதவும் பயனர்களின் அபிமானத்தை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு, எமது இலக்கு வைக்கப்பட்ட பயனர்களை மையப்படுத்தி எமது வடிவமைப்பு மற்றும் தரக்குறியீட்டு தொடர்புகளை மையப்படுத்தி வருகிறோம்.
எதிர்வரும் 5 தொடக்கம் 10 வருடங்களில், தனித்து நிற்பதற்கான எமது அர்ப்பணிப்பு ஒரு முக்கியமான அங்கமாகவும், vivo வின் முக்கிய உத்தியாகவும் இருக்கும், அதை ஒரே இரவில் நிறைவேற்ற முடியாது. சாத்தியமான அனைத்து வழிகளிலும் பயனர்களை சார்ந்தவர்களாக இருப்போம் என்பதுடன், நீண்ட காலத்தின் அடிப்படையில் கண்ணோட்டத்தைப் பேணுவோர்களாக இருப்போம். எமது பொறுமைக்கு பலன் கிடைக்கும் என நம்புவதுடன், நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு சிறிய அடிகளும் இறுதியில் நம்மை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும் என்றும் நாம் நம்புகிறோம்.