Latest News Tamil

இலங்கையில் அறிமுகமானது AIOT தயாரிப்புகளுடன் மிக ஸ்டைலான realme 8 64MP AI குவாட் கெமரா மூலம் ‘ஸ்டைலாக, முடிவற்றதை படமாக்குங்கள்’

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடான realme, அதன் புத்தம் புதிய பதிப்பான realme 8 உடன் realme Buds Q2, realme Wireless 2 Neo, realme Watch 2 ஆகிய AIOT சாதனங்களை 2021 மே 17ஆம் திகதி இலங்கையில் அறிமுகப்படுத்தியது.

realme இனது இலக்கத் தொடர் (Number Series) என்பது நடுத்தர வகை சந்தையில் மிகவும் வெற்றிகரமான realme சாதனமாகும். இது ஏற்கனவே மூன்று ஆண்டுகளில் 33 மில்லியன் சாதனங்களின உலகளாவிய விற்பனையையும் 6 தலைமுறை மேம்படுத்தல்களையும் (6 generation upgrades) கொண்டுள்ளது. realme 8 மற்றும் AIOT தயாரிப்புகள் அபான்ஸ், சிங்ககிரி, டயலொக் மற்றும் Daraz realme முன்னுரிமை விற்பனைக் கூடம் ஆகியவற்றில் 2021 மே 20 முதல் நாடு முழுவதிலுமுள்ள அங்கீகரிக்கப்பட்ட realme விற்பனையாளர்களிடமும் கிடைக்குமென realme ஶ்ரீ லங்கா அறிவித்துள்ளது.

இலங்கைக்கான தரக்குறியீட்டு முகாமையாளர், ரணுர கடுவெல இது தொடர்பில் தெரிவிக்கையில் “realme ஆனது புத்தம் புதியதும், இளைஞர்களை மையமாகக் கொண்டதுமான ஸ்மார்ட்போன் தரக்குறியீடாகும். எமது சமீபத்திய நடுத்தர வகை ஸ்மார்ட்போனான realme 8 இனை அறிமுகப்படுத்துவதன் மூலம், இளவயது பயனர்களுக்கு உயர்ந்த அம்சங்களை மலிவான விலையில் அனுபவிப்பதனை உறுதி செய்ய விரும்புகிறோம். இது விலையில் மிகவும் மலிவான பதிப்பாக இருந்த போதிலும், அதிலுள்ள அம்சங்கள் உயர் ரக பயனர் அனுபவத்தை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன. Realme 8 ஆனது, இலங்கை இளைஞர்கள் எப்போதும் அடைய விரும்பும் அவர்களது உயிர்நாடியான ஸ்மார்ட்போன் சாகசங்களால் நிறைந்துள்ளது.” என்றார்.

realme 8 ஆனது realme UI 2.0 அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், சிறந்த ஓடியோ வீடியோ அனுபவத்தினை வழங்கும் வகையிலான, உயர் தரத்திலான (Hi-Res) ஓடியோ சான்றிதழையம் அது கொண்டுள்ளது. 8 GB RAM, 128 GB ROM, 64MP AI Quad Camera, 30W Dart Charge, சக்திவாய்ந்த Helio G95 processor உள்ளிட்ட எதிர்கால வடிவமைப்புடன், மிகப்பெரிய 5,000 mAh மின்கலம் மற்றும் 6.4 அங்குல Super AMOLED திரை ஆகியவற்றை அது கொண்டுள்ளது.

realme 8 இன் உச்சபட்ச சில்லறை விலை ரூ. 64,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இது இலவசமாக வழங்கப்படும் ரூபா 6,999 பெறுமதியான realme Buds Q உடன் அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. realme Wireless 2 Neo இனை ரூ. 8,999 எனும் உச்சபட்ச சில்லறை விலையிலும் Buds Q 2 இனை ரூ. 6,999 எனும் விலையிலும், Watch 2 இனை ரூபா 16,999 விலையிலும் உள்ளூர் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது.

realme 8 இன் கெமரா ஆனது, அதன் எண்ணக்கருவான ‘ஸ்டைலாக எல்லையற்றதை படமாக்குங்கள் (‘In Style. Capture Infinity’) என்பதற்கு அமைவாக, மிக சக்தி வாய்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 64MP AI சக்தி கொண்ட குவாட் கெமரா மற்றும் அதன் உயர்மட்ட புகைப்பட அம்சங்கள் யாவும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் இளைஞர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களை கொண்டுள்ளன. இது சர்வதேச ஸ்மார்ட்போன் ஆர்வலர்களால், அதன் கையடக்க தொலைபேசி வகையில் ஒரு முன்னோடியாக கருதப்படுகிறது. இதிலுள்ள Tilt-shift Mode பயன்முறை மூலம், ஒரு அற்புதமான புகைப்பட அனுபவத்தை வழங்குகி, உண்மையான உலகத்தை ஒரு கைக்கு அடக்கமான உலகமாக மாற்ற உதவுகிறது. இது, Starry Mode எனும் பயன்முறையையும் கொண்டுள்ளதன் மூலம், நிச்சயமாக்கப்பட்ட பிரகாசமான விளைவை வழங்குவதோடு, புகைப்படங்களிலான பிரச்சினைகளை (noise) குறைக்கின்றது. Realme 8 ஆனது, Neon Portrait, Dynamic Bokeh, New AI Portrait போன்ற ஸ்டைலான அம்சங்களையும் கொண்டு வருகிறது.

16 MP செல்பி போர்ட்ரெய்ட் கெமரா ஆனது, AI Beauty, Portrait Mode, Super Nightscape ஆகிய அம்சங்களை கொண்டு வருகிறது. வீடியோ எடுத்தலில், Dual-view Video ஆனது, பயனர்கள் வேடிக்கையான மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்களை எடுக்க அனுமதிக்கிறது. UIS Max Video Stabilization வீடியோ உறுதிப்படுத்தல் மூலம் நிலையான மற்றும் மிருதுவான வீடியோக்களை உருவாக்க முடிகிறது.

realme 8 ஆனது 6.4 அங்குல Super AMOLED திரையையும், 1,000nits உச்ச பிரகாசத்தையும் கொண்டுள்ளதுடன், Always-on Display மற்றும் வேகமாக திரையைத் திறக்கும் ஒளிக்கு உணர்திறன் கொண்ட சென்சர் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் திரையானது 1080P FHD துல்லியத்தன்மை மற்றும் 180Hz சாம்பிளிங் வீதத்தையும் கொண்டுள்ளது. Sunlight mode பயன்முறையானது 1,000nits இன் உச்ச பிரகாசத்தை அளிக்கிறது. DC-like dimming மற்றும் anti-flicker வசதிகள் மூலம் குறைந்த பிரகாசத்தில் கண்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை வழங்குகின்றது.

realme 8 இல் காணப்படுகின்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள், இதே விலை மட்டங்களில் விற்பனையாகும் பல நடுத்தர வகை தொலைபேசிகளில் காணப்படுவதில்லை. realme 8 ஆனது, 30W Dart Flash Charge வசதியை கொண்டுள்ளதன் மூலம் 5,000mAh மின்கலத்தை வெறும் 65 நிமிடங்களில் முற்றாக சார்ஜ் செய்ய முடியும். ஐந்து பரிமாண சார்ஜிங்க பாதுகாப்பானது, பாதுகாப்பான சார்ஜிங் வசதியை உறுதி செய்கிறது.

realme 8 இனது, 5,000mAh மின்கலம், எவ்வித பாவனையுமின்றி (standby) 40 நாட்களுக்கு நீடிப்பதோடு, கேம்களை விளையாடும்போது 10 மணி நேரத்திற்கு நீடித்து நிற்கிறது. Super Power Saving Mode பயன்முறையில், 5% சார்ஜிங்கின்போது, தொலைபேசி எவ்வித பாவனையுமின்றி இரண்டு நாட்களுக்கு இயங்குகிறது. Realme 8 ஆனது, App Quick Freeze, Sleep Standby Optimization உள்ளிட்ட ஏனைய மின்கல செயலாக்க செயல்பாடுகளையும் கொண்டுள்ளது. Realme 8 இனை, OTG கேபிள் மூலம், ஏனைய தொலைபேசிகள் அல்லது ஸ்மார்ட் சாதனங்களையும் சார்ஜ் செய்யலாம்.

அதன் ஸ்டைலான வடிவமைப்பினை பார்க்கும்போது, realme 8 ஆனது, எல்லையற்ற உறுதி கொண்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளதுடன், வெள்ளி, கறுப்பு (Cyber Silver, Cyber Black) ஆகிய இரண்டு வண்ணங்களில் வருகிறது. realme 8 இனது நிறை 177 கிராம் மட்டுமே என்பதுடன், 8 மிமீ இற்கும் குறைவான தடிப்பத்தை அது கொண்டுள்ளது. தொலைபேசி ஒரு பிளவு வடிவமைப்பு மற்றும் பிளவுபடுத்தும் செயன்முறை (Split Design and Splicing Process) மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் உலகத்தால் ஈர்க்கப்பட்டு இவ்வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இடது பக்கமாக உண்மையான உலகமும், வலது பக்கமாக மாய டிஜிட்டல் உலகமும் இதிலுள்ளது. இதன் மூலம் மாறும் உண்மையான மற்றும் மாயையான தோற்றங்களிடையேயான ஒருங்கிணைப்பு மூலம் ஒரு புதிய அற்புதமான காட்சி அமைகிறது.

realme 8 ஆனது, ஒரு பாரிய 2.05Ghz வரையான வேகத்துடன், இரண்டு பெரிய A75 core மற்றும் ஆறு சிறிய A55 cores கொண்ட, Helio G95 Gaming Processor மற்றும் Quad-core Mali-G76 GPU உடன் வருகின்றது. அந்த வகையில் இதன் Processor ஆனது, முன்னணி மொபைல் கேம்களைக் கையாளும் திறன் கொண்டது.

மேலதிக தகவல்களுக்கு, www.realme.com/lk இற்கு நுழையுங்கள்.

— முற்றும்—

realme பற்றி:

realme என்பது ஒரு தொழில்நுட்ப தரக்குறியீடாகும். இது முன்னணி தரம் மற்றும் காலத்திற்கு ஏற்ற நவீனத்துவமான ஸ்மார்ட்போன்களாகும் என்பதுடன் அது AIoT தயாரிப்புகளை உலக சந்தைக்கு வழங்குகிறது. realme பயனர்கள், இளமை மற்றும் உலக அளவிலான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். realme தயாரிப்புகள் யாவும், சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பைப் பயன்படுத்தி இளைஞர்களை துள்ளுவதற்கு துணியவழி வகுக்கின்றன. realme உலகின் 7ஆவது சிறந்த ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக விளங்குவதோடு, 2020 இன் 3ஆவது காலாண்டில் உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதிகளின் Counterpoint புள்ளி விபரங்களின்படி பிரதான ஸ்மார்ட்போன் தரக்குறியீடுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில், realme இனது உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 25 மில்லியனை எட்டியதன் மூலம், அது வருடத்திற்கு வருட (YoY) வளர்ச்சி 808%  விகிதத்தை அடைந்ததன் மூலம், 2019 இலிருந்து 2020 இரண்டாம் காலாண்டு வரை தொடர்ச்சியாக நான்கு காலாண்டுகளில் உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக அடையாளம் காணப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் சீனா, தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா, ஐரோப்பா, ரஷ்யா, அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா உள்ளிட்ட 61 சந்தைகளில் realme தனது கால்தடத்தை பதித்துள்ளதுடன், 70 மில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய பயனர்களையும் அது கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புகைப்பட விளக்கம்:

படம் 1: realme 8

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *