Latest News Tamil

Amana Takaful Insurance: பரஸ்பரம் மற்றும் ஒருமைப்பாட்டுடன் அனைத்து இலங்கையர்களுடனும் ஒன்றாக

இலங்கையின் முன்னோடி காப்புறுதி வழங்குனரான Amana Takaful Insurance, இந்த கடினமான காலப்பகுதியில் பரஸ்பரம், ஒருமைப்பாட்டுடன் கூடிய தனது பிரதான நோக்கம், அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வை நிலைநிறுத்தும் மனப்பாங்குடன் பல சமூக  முயற்சிகளை கடந்த சில வாரங்களில் முன்னெடுத்திருந்தது.

அனைத்து இலங்கையரையும் பாதுகாக்கும் அதன் உறுதி மொழிக்கேற்ப Amana Takaful Insurance, கோவிட் – 19 தொற்றுநோய், அதேபோல் பருவ மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு தனது உதவிக் கரத்தை நீட்டியிருந்தது. இந்த தொடர் சமூக பொறுப்புணர்வு முயற்சிகள், முதலாவதாக மாவனெல்லை ஆதார வைத்தியசாலை மற்றும் கேகாலை பொது வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முகக்கவசங்கள் உள்ளடங்கலான அத்தியாவசிய மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விநியோகங்களின் நன்கொடையுடன் ஆரம்பித்திருந்ததுடன், இதன் மூலம் கோவிட் – 19 இற்கு எதிரான நாட்டின் போராட்டத்துக்கும் பங்களிப்பைச் செய்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு வருடமும் ஜூன் 14 ஆம் திகதி உலக இரத்த தானம் தினத்தை அனுஸ்டிக்கும் முகமாக National Blood Transfusion Service Sri Lanka (NBTS) உடன் இணைந்து Amana Takaful Insurance, தேசிய இரத்த மையத்திற்கு தற்போதைய தொற்றுநோய் மற்றும் சீரற்ற காலநிலையையும் மீறி இரத்த தானம் செய்ய வந்த ஒவ்வொருவருக்கும் அவர்களின் தன்னலமற்ற செயலுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக சிற்றுண்டி வழங்கியிருந்தது.

அதைத் தொடர்ந்து, வெல்லம்பிட்டி பகுதியில் உள்ள 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு Amana Takaful Insurance நிதி உதவியை வழங்கியது. பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட நாளாந்த வருமானம் பெறுவோருக்கே பிரதானமாக இது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சமூகத்தின் மதத் தலைவர்களுடன் வெல்லம்பிட்டி மக்களும் கலந்து கொண்டிருந்தனர். மேலும்,  பள்ளியாவத்தை புனித கார்மெல் தேவாலயத்தால் வத்தளையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு விநியோகிக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் உலர் உணவுகளுக்கும் Amana Takaful Insurance அனுசரணை வழங்கியிருந்தது.

மொத்தத்தில், Amana Takaful Insurance இனால் ஜூன் மாதத்திற்குள் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்க்கைக்கு பங்களிக்க முடிந்துள்ளது.

நிறுவனத்தின் சமூகத்திற்கான அண்மைய முயற்சிகள் தொடர்பில் கருத்து தெரிவித்த, Amana Takaful Insurance இன் பிரதான விற்பனை அதிகாரி, சுரேஷ் பஸ்நாயக்க, “Amana Takaful Insurance இன் பிரதான குறிக்கோள் அனைத்து இலங்கையரையும் ஒன்றெனக் கருதுவதாகும். உண்மையில், ‘தகாஃபுல்’ என்ற சொல் ‘ஒருவருக்கொருவர் உத்தரவாதம் அளித்தல் (இழப்பு அல்லது சேதத்தின் போது)’ என்று பொருள்படும். ஒரு நிறுவனமாக நாம் செயல்படும் கொள்கை இதுதான். எங்கள் சமூகங்களை கவனித்துக்கொள்வது எப்போதும் எங்களுக்கு பிரதானமான குறிக்கோளாகும். மேலும் வசதி வாய்ப்பு குறைந்தவர்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கும், உதவி தேவைப்படும் நமது இலங்கையர்களுக்கு உதவுவதற்கும் நாங்கள் எப்போதும் பாடுபடுவோம். ‘அனைத்து இலங்கையர்களுக்கும் ஒன்றென’ என்ற புத்துணர்வளிக்கப்பட்ட வர்த்தகநாமத்துடன் நாம் இவ்வருட ஆரம்பத்தில் உறுதிப்பாட்டை மேற்கொண்டதுடன், ​​பரஸ்பரம் மற்றும் ஒற்றுமை உணர்வுடன் நாம் அதைப் பார்ப்பதாக நாம் உறுதியளித்தோம்.”என்றார்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தேசத்திற்கு சேவை செய்து வரும் Amana Takaful Insurance,  உலகத் தரம் வாய்ந்த காப்புறுதித் தீர்வுகள் மூலம் மன அமைதியை வழங்கும் முதன்மையான தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பின் உந்துதலால் தொடர்ந்து முன்னோக்கி பயணித்து வருகின்றது. இந்நிறுவனம், வாடிக்கையாளரை பிரதானமாகக் கொண்டமை, திறந்த மனப்பான்மை, தரம் மற்றும் பன்முகத்தன்மை ஆகிய அடிப்படை விழுமியங்கள் தொடர்பில் உறுதிப்பாட்டுடன் உள்ளதுடன், அதன் அனைத்து பங்குதாரர்களுக்கும் தொடர்ந்து பெறுமதி சேர்க்க பாடுபட்டு வருகின்றது. இலங்கை சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளின் ஒட்டுமொத்த  தேவைகளுக்கு ஏற்ப Amana Takaful முழுமையான ஆயுள் மற்றும் பொது காப்பீட்டுத் தீர்வுகளையும், தேவைக்கேற்ற சுகாதார காப்பீட்டுக் கொள்கைகளையும் வழங்குகிறது.

இந்நிறுவனத்தின் முயற்சிகள், காப்புறுதி திட்டங்கள் மற்றும் சேவைகள் தொடர்பிலான மேலதிக விபரங்களுக்கு: www.takaful.lk

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *