Latest News Tamil

தடையற்ற இணைப்புடன் அற்புதமான அனுபவத்திற்கு வழிவகுக்கும் Huawei smart சாதனங்கள்

முன்னொருபோதும்  இல்லாத வகையில் வீட்டிலிருந்து வேலை (Work From Home (WFH) and Learn From Home (LFH) ) மற்றும் வீட்டிலிருந்து கல்வி (LFH) என்ற நிலைகளுடன், தொழில்நுட்ப தீர்வுகளுக்கான தேவை முன்னெப்போதையும் விட தற்போது மிகவும் அதிகமாகவே உள்ளது. வேலை, கல்வி, பொழுதுபோக்கு, ஓய்வு என வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தொழில்நுட்பம்  ஊடுருவியுள்ளதை  மறுக்க முடியாது.

மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட்போன்கள்  மற்றும் பிற தொழில்நுட்ப சாதனங்கள்  போன்ற பல சாதனங்களுடன் பலர் வேலை செய்ய வேண்டியிருக்கும் போது, ​​சிறந்த பயனர் அனுபவத்திற்காக ஒவ்வொரு சாதனத்துடனும் உயர் மட்ட ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. உலகளாவிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களான Huawei அதன் 1+8+n எனும் மூலோபாயத்தை முன்னெடுத்துள்ளது. அதாவது அனைத்து Huawei  சாதனங்களையும் ஒரே சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைக்கிறது. இது ஸ்மார்ட்போனை முக்கிய சாதனமாக மாற்றுகிறது. இந்த முன்னோடி இணைப்பு தீர்வு Huawei ஆனது வாழ்க்கையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள மற்றும் பயனர்களை ஈர்க்கக்கூடிய மற்றும் இணைக்கப்பட்ட அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஸ்மார்ட் சாதனங்களை வைத்திருப்பது நிச்சயமாக அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ உற்பத்தித்திறனை அதிகரிக்கும். ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினி அல்லது டேப்லெட்டின் கலவையானது மடிக்கணினி அல்லது டேப்லெட் வழியாக ஸ்மார்ட்போனின்  செயல்பாடுகளை எளிதில் செய்ய பயனருக்கு உதவுகின்றது.

எடுத்துக்காட்டாக, ஒரு பயனர் அலுவலக வேலைகளில் மூழ்கியிருக்கும்போது மடிக்கணினியில் உள்ள செய்திகளுக்கு பதிலளிக்க முடியும். இந்த இணைப்பானது அலுவலக வேலைகளுக்கு அப்பால் விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு போன்ற அன்றாட நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அமைகின்றது. ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் மற்றும் இசை அமைப்புகள் போன்ற புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் ஒரே நேரத்தில் பயனரை மகிழ்விக்கின்றன மற்றும் அன்றாட பணிகளை இடையூறு இல்லாமல் செய்ய முடியும் என்பதையும் உறுதி செய்கிறது.

Huawei Nova 7i தடையற்ற இணைப்பு திறன்களைக் கொண்ட ஸ்மார்ட்போன் மூலம் இயக்கப்படுகிறது. அதன் கவர்ச்சிகரமான வடிவமைப்பு அதனுடன் தொடர்புடைய உயர் வலிமை அம்சங்களால் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. Nova 7i  இன் முக்கிய அம்சம் அதன் 7i  AI Quad கேமராவாகும். இது பயனரை இரவிலும் பகலிலும் தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் எடுக்கும் வசதியைக் கொடுக்கின்றது.

Nova 7i இன் 48MP பிரதான கேமரா, 8MP Ultra-wide கேமரா, 2MP 2MP Macro கேமரா மற்றும் 2MP Depth கேமரா இணைந்து தொழில்முறை தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கிக் கொடுக்கின்றது. கேமரா பயன்பாட்டில் Photo, Video, Pro, Night, Portrait, Panaroma, HDR, slow motion, Super Macro and Time Lapse  போன்ற பல தனித்துவமான மற்றும் மேம்பட்ட முறைகள் உள்ளன. இது உயர் செயல்திறன் கொண்ட 16MP செல்பி கேமராவையும் கொண்டுள்ளது, இது திரையின் மேல் இடது மூலையில் உள்ள ஒரு துளை வழியாக பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *