புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei, ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதியை பராமரிப்பதற்கான மிகவும் வசதியானதும், விரிவானதுமான வழியை உறுதி செய்யும் பொருட்டு ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி சார்ந்த தயாரிப்புகளின் வரிசையை அண்மையில் வெளியிட்டது. Huawei Watch GT2, Huawei Band 4 மற்றும் Huawei Band 4E ஆகியன வாழ்க்கையை எளிதாக்க, உடற்பயிற்சிகளை கண்காணிக்க மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்கு உதவுவதுடன், இடையூறுகள் எதுவுமற்ற அனுபவத்தை வழங்குகின்றது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புரட்சிகரமான ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி தீர்வுகள், நவநாகரிக வடிவமைப்புடன், தடையற்ற டிஜிட்டல் உடற்பயிற்சி அனுபவத்தை வழங்குவதற்கான அனைத்து அத்தியாவசிய அம்சங்களையும் கொண்டுள்ளது.
Huawei Watch GT2 ஆனது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுடன் பொருந்தக்கூடிய வகையில் 1.39 அங்குல AMOLED திரையைக் கொண்ட அடிப்படையான வடிவமைப்பில் அமைந்ததாகும். இதன் மிகவும் மெல்லிய வடிவமைப்பு மற்றும் முப்பரிமாண (3D) திரையானது கண்களைக் கவரும் தோற்றத்தையும் உணர்வையும் தருகிறது. இரட்டை சிப் வடிவமைப்பு மற்றும் அறிவார்ந்த சக்தி சேமிப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய Huawei இனால் சொந்தமாக உருவாக்கப்பட்ட Wearbale Chip Kirin A1 இன் காரணமாக ஒன்றரை வாரங்கள் வரையான மிகச் சிறந்த மின்கல ஆயுளை வழங்குகிறது. Watch GT2 ஆனது வெவ்வேறு அனுபவத்தை கொண்டுவரும் பொருட்டு 15 வெவ்வேறு வகையான விளையாட்டுக்கள் மற்றும் உடற்பயிற்சி மாதிரிகளை கொண்டுள்ளது. Watch GT2 அனைத்து உள்ளக மற்றும் வெளியக நடவடிக்கைகளுக்குமான புரட்சிகரமான தொழில்சார் துணையாகும். இது துல்லியமான நிலைப்பு அமைப்புகளுடன் (positioning systems) உடற்பயிற்சிகளையும், TrusenTM 3.5 மூலம் இதயத் துடிப்பையும் துல்லியமாக கண்காணிக்கிறது. மேலும் இது இசையைக் கேட்கவும், Bluetooth அழைப்பு வசதியையும் கொண்டது.
Huawei Band 4 கவர்ச்சிகரமான வடிவமைப்பு மற்றும் சௌகரியம் ஆகியவற்றின் ஒன்றிணைவாகும். இது misty grey, seaweed green, alizarin red, sakura coral, ceylon yellow மற்றும் cobalt violet உள்ளிட்ட நவநாகரிக வண்ணங்களில் வருகிறது. இதன் 2.5 D தொடுதிரையானது ஸ்மார்ட் இதய துடிப்பு கண்காணிப்பு, தூக்க கண்காணிப்பு, வெளியக மற்றும் உள்ளக ஓட்டம், நடை, சைக்கிள் ஓட்டுதல் போன்ற பலதரப்பட்ட அம்சங்களைக் கண்காணிக்க உதவுகின்றது. மேலும் தெரிவு செய்வதற்கு பன்முகப்படுத்தப்பட்ட ஒன்பது உடற்பயிற்சி மாதிரிகளை வழங்குகிறது. எந்தவொரு யூ.எஸ்.பி (USB) சார்ஜருடனும் மிக இலகுவாக சார்ஜ் செய்வதற்கு உதவும் வகையில் உள்ளமைக்கப்பட்ட யூ.எஸ்.பி (USB) பிளக் உடன் இது வருவதுடன், மேலும் இதனை ஒரு தடவை சார்ஜ் செய்வதன் மூலம் ஆறு நாட்கள் வரை பயன்படுத்தக் கூடிய வகையில் நீடித்த மின்கல ஆயுளையும் வழங்குகின்றது. இந்த Band 4E, 50 மீட்டர் வரை நீரில் தாக்குப் பிடிக்கக் கூடியதுடன், இது மணிக்கட்டிலேயே அனைத்து அறிவிப்புகளையும் காண்பிப்பதன் மூலம் அறிவிப்பு துணையாகவும் செயற்படுகிறது.
Huawei Band 4E என்பது மற்றொரு இலகு எடை பட்டையாகும். இதுmisty grey, seaweed green, alizarin red, sakura coral, ceylon yellow மற்றும் cobalt violet ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றது. இது ஒரு சார்ஜில் இரண்டு வார கால மின்கல ஆயுளை வழங்கும் திறன் கொண்டது. இதுமட்டுமன்றி கூடைப்பந்து செயல்திறனைக் கண்காணிக்கும் மேம்பட்ட அம்சத்துடன் வருகிறது. பாவனையாளர்கள் தமது புள்ளிவிபரங்களை மேம்படுத்த இது உதவுகிறது. மேலும் 6 axis motion sensor உதவியுடன் விரிவான ஓட்ட புள்ளிவிபரங்களையும் வழங்குகிறது. Band 4E, 50 மீட்டர் வரை நீரில் தாக்குப்பிடிக்குமென்பதுடன், அதன் புதுமையான இரட்டை அணிதல் முறைமையானது, பாவனையாளர் இதனை மணிக்கட்டில் அல்லது காலில் அணிய உதவுகிறது.
மற்றொரு புதுமையான இணைப்பு Huawei Smart Scale’ எடை பார்க்கும் இயந்திரமாகும். இது உயிர் மின் மின்மறுப்பு பகுப்பாய்வு (Bioelectrical Impedance Analysis – BIA) தொழில்நுட்பத்தின் உதவியுடன் துல்லியமான உடல் அமைப்பு அளவீடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. எடை, உடல் கொழுப்பு %, உடல் நிறை குறியீட்டெண் (BMI), புரதம், உள்ளுறுப்பு கொழுப்பு, தசை நிறை, உடல் நீர் %, எலும்பு நிறை மற்றும் பி.எம்.ஆர் (Basal Metabolic Rate – BMR) உள்ளிட்ட 9 உடல் அமைப்பு சுட்டிகளுடன் இது வருகிறது. Smart Scale ஒரு விரிவான சுகாதார அறிக்கையை வழங்குவதுடன் எடை மற்றும் உடல் கொழுப்பு என்பவற்றை காட்டக்கூடிய அகல்நிலை திரையுடன் வருகிறது. இதன் வலுவான கண்ணாடி மேற்புறமானது (Glass panel), இதனை பயன்படுத்த மற்றும் சுத்தம் செய்ய இலகுவான விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.