HUTCH தனது புதிய வர்த்தகநாம பெறுமான நிலைத்தோற்றமான “Be. Anywhere.” இனை அறிமுகப்படுத்தும், புத்துணர்வான நிகழ்வினை அதன் ஊழியர்கள் முன்னிலையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த முழு அளவிலான – வலையமைப்பு பிரச்சாரமானது, HUTCH தற்போது எவ்வாறு ஒரு பாரிய மற்றும் சிறந்த வலையமைப்பு வழங்குநராக உருமாறியுள்ளது என்பதனை எடுத்துக்காட்டியது. விரிவாக்கப்பட்ட 2G, 3G மற்றும் புத்தம் புதிய 4G வலையமைப்பு செயற்படுத்தலை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர், HUTCH இப்போது நாட்டின் 25 மாவட்டங்களிலும் 95% வலையமைப்பை வழங்குவதுடன், வாடிக்கையாளர்களை “எங்கும் இருக்க” (be anywhere) வலுவூட்டுவது மட்டுமன்றி, HUTCH இன் தனித்துவமான சலுகைகளை அணுகக்கூடியதாக இருக்க வழிசெய்கின்றது. இந்த நடவடிக்கைகளுக்கு HUTCH நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி, திருக்குமார் நடராசா, அவரது சிரேஷ்ட முகாமைத்துவத்தினருடன் இணைந்து தலைமை தாங்கினார். நாடு முழுவதும் 4G வலையமைப்பை விரிவுபடுத்தியதன் மூலம், HUTCH நிறுவனமானது வாடிக்கையாளர்கள் தங்களது சிக்கல்களை தீர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை, சிக்கனமான கட்டணங்களில் பெறும் வகையில் வலுவாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. இந் நிறுவனமானது, வெறும் 12 மாதங்களுக்குள் அடைந்த சாதனைகளை பணியாளர்களுடன் தொடர்புகொள்வதிலும், இலங்கையின் மிக வேகமாக வளர்ந்து வரும் மொபைல் புரோட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றின் எதிர்காலத் திட்டங்களில் ஈடுபட, அறிவினைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பளிப்பதிலும் இந்த நிகழ்வு வெற்றிகரமாக அமைந்தது.
Related Articles
‘Just Like Mom’ சமையல் சம்பியனுக்கு மகுடம் சூட்டிய சிங்கர்
சிங்கரினால் இவ்வருடம் அன்னையர் தினத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Just Like Mom’ (அம்மாவைப் போலவே) ஊக்குவிப்பு பிரசார நிகழ்வின் இரண்டாம் கட்ட சமையல் போட்டியின் இறுதிப் போட்டி சமீபத்தில் நிறைவடைந்திருந்தது. சமையல் போட்டியின் பங்கேற்பாளர்களில், Labu Kola Pirawuma (பூசணி இலை கூட்டு) எனும் உணவைத் தயாரித்த சச்சினி நுவரபக்ஷ சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு, பெறுமதியான தங்க நாணயத்தைப் பரிசாகப் பெற்றார். ‘Just Like Mom’ பிரசாரமானது, தாய்மார்கள் சமைக்கும் உணவுகளில் தங்களுக்குப் பிடித்த உணவுகளை தனியாக தயாரித்து, […]
Huawei தொழில்நுட்ப சாதனங்கள்: வணிக நிபுணர்களுக்கேற்ற பங்காளர்கள்
புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei, புதுமையான ஸ்மார்ட்போன்கள், டெப்லட்கள் மற்றும் பிற தொழில்நுட்ப சாதனங்களையும் அறிமுகப்படுத்துவதில் பிரசித்தி பெற்றதாகும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Huawei Media Pad T5, Huawei Nova 7i மற்றும் Huawei Free buds 3 ஆகிய புத்தாக்க தயாரிப்புகள் அனைத்தும், பன்முக நோக்கங்களுக்காக ஒன்றுடன் ஒன்று இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் திறன் கொண்டவை. இவற்றின் மூலம் ஈடிணையற்ற பயனர் அனுபவத்தை வழங்கும் தனது ஆற்றலை Huawei மீண்டும் நிரூபித்துள்ளது. இம் மூன்று தயாரிப்புகளும் […]
My Huawei App இலங்கையில் வெளியீடு
உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei, My Huawei App மூலம் அதன் பயனர்களுக்கு புதிய, ஸ்மார்ட் பயணத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறது. இந்த செயலியானது, வாடிக்கையாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் உரிய சேவைகளை அவர்கள் கண்டறிவதற்குமான உத்தியோகாபூர்வ, ஒரே இடத்தில் அனைத்தும் ஒருங்கிணைந்த தளமாகும். My Huawei App என்பது Huawei ஸ்மார்ட் போன்களில் முற்கூட்டியே நிறுவப்பட்ட Huawei Support App இனது புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும் என்பதுடன், இது Huawei நிறுவனத்தின் உத்தியோகபூர்வ உதவிக் குழுவுடன் நேரடியாக இணைவதற்கான […]