வாடிக்கையாளர்கள் புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்திருப்பதை உறுதி செய்யும் வகையில், யூனியன் லைஃவ்ஸ்டைல் போனஸ்” ஊடாக, காப்புறுதிதாரர்களுக்கு சிறந்த தொழில்நுட்ப வெகுமதிகளை வழங்க யூனியன் அஷ்யூரன்ஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அலுவலக தன்னியக்க தீர்வுகளை வழங்குவதில் சந்தை முன்னோடியாக திகழும் ஜோன் கீல்ஸ் ஒஃபிஸ் ஒடோமேஷன் (JKOA) உலகப் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களான Samsung, Toshiba மற்றும் Hitachi போன்ற நாமங்களின் கையடக்க தொலைபேசிகள், புரொஜெக்டர்கள், ஸ்பீக்கர்கள், போட்டோ பிரதி இயந்திரங்கள் போன்ற தயாரிப்புகளை கவர்ச்சிகரமான விலைக்கழிவுகளில் காப்புறுதிதாரர்களுக்கு வழங்க முன்வந்துள்ளது. தமது வாழ்க்கை முறைகளுக்கு பொருத்தமான தொழில்நுட்ப சாதனங்களை கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் காப்புறுதிதாரர்கள், JKOA இடமிருந்து நம்பமுடியாத விலைக்கழிவுகளை பெற்றுக் கொள்ள முடியும். இந்த ஊக்குவிப்புத் திட்டத்தினூடாக, யூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதிதாரர்களுக்கு தமது ஆயுள் காப்புறுதியுடன், வாழ்க்கை முறைக்கு பொருத்தமான உள்ளம்சங்களை வழங்க முன்வந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு “உங்கள் வாழ்க்கையை இன்றே அனுபவிக்கையில், உங்கள் நாளைய தினத்தை நிறுவனம் பாதுகாக்கும்” எனும் உறுதிமொழிக்கமைய, இந்த திட்டத்தினூடாக, காப்புறுதிதாரர்களுக்கு கவர்ச்சிகரமான விலைக்கழிவுகள் வழங்கப்படுவதுடன், அதனூடாக அவர்களுக்கு 2020 ஆம் ஆண்டை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும். வாடிக்கையாளர்கள் யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதி ஒன்றுக்கு 2020 மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னதாக பதிவு செய்து கொண்டு இந்த சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம். மாதாந்தம் ரூ.15,000 க்கு அதிகமான தொகையை கட்டுப்பணமாக செலுத்தும் யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதிதாரர்களுக்கு இந்த சலுகை பொருந்தும். ஆயுள் காப்புறுதிதாரர்களுக்கு வருடம் முழுவதிலும் விலைக்கழிவுகள் மற்றும் சேமிப்புகளை வழங்கும் இந்த திட்டத்தினூடாக, காப்புறுதிதாரர்கள் தமக்கும் தமது அன்புக்குரியவர்களினதும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை முறையை உறுதி செய்யலாம். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு தன்னை அர்ப்பணித்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ், இலங்கையின் மாபெரும் ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. மூன்று தசாப்த காலப்பகுதிக்கு மேலான அனுபவத்தை தன்வசம் கொண்டுள்ளது. இலங்கையின் மாபெரும் பன்முகப்படுத்தப்பட்ட குழுமமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி குழுமத்தின் துணை நிறுவனமாக அமைந்துள்ளதுடன், நிறுவனத்தின் உறுதியான, விறுவிறுப்பான மற்றும் சேவை நோக்கைக் கொண்ட நிபுணர்களினூடாக வாடிக்கையாளர்களுக்கு பரந்தளவு புத்தாக்கமான ஆயுள் காப்புறுதி தீர்வுகள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு, காப்புறுதிதாரர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படுகின்றது. மேலதிக தகவல்களுக்கு அழைக்கவும் 011 2 990 009
