Latest News Tamil

‘ஒற்றுமைக்கான ஒரு மில்லியன் மரங்கள்’ இற்கு 2021 Karlsruhe நிலைபேறான நிதி விருதுகளில் சிறந்த நிலைபேறான திட்ட நிதியுதவி பிரிவில் விருது

கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவம் கொண்ட கட்டுப்படியான மற்றும் நிலைபேறான நிதித் தீர்வுகள் மூலம் தேசத்தை வலுப்படுத்தும் இலங்கையின் பழமையான நிதி நிறுவனமான Alliance Finance Co. PLC, (AFC), மற்றுமொரு சர்வதேச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கியமான விருதை AFC வெல்வதற்கு ‘ஒற்றுமைக்கான ஒரு மில்லியன் மரங்கள்’ திட்டம் உதவியுள்ளது.

Karlsruhe Sustainable Finance Awards 2021 (நிலைபேறான நிதி விருதுகள்), ஆனது, நிலைபேறான வளர்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பினால் (EOSD) நடாத்தப்படுகிறது. இது உலகளாவிய ரீதியில் நிலைபேறான தன்மை பிரிவில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு விருதுகளை வழங்குகிறது.

2018ஆம் ஆண்டு AFC இனால் ஆரம்பிக்கப்பட்ட ‘ஒற்றுமைக்கான ஒரு மில்லியன் மரங்கள்’ திட்டம், 2024ஆம் ஆண்டளவில் இலங்கை முழுவதும் ஒரு மில்லியன் மரங்களை நடுவதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டமானது, 2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் காடுகளின் பரப்பளவை 32% ஆக அதிகரிக்க வேண்டும் எனும், இலங்கையின் மீளக் காடாக்குதல் சவாலுக்கும் பங்களிப்புச் செய்கிறது. ஒரு மில்லியன் மரம் நடும் இலக்கைக் கொண்டுள்ள இந்த தேசிய திட்டத்திற்கு AFC குறிப்பிடும்படியான அதன் பங்களிப்பை வழங்கும். இந்த திட்டத்தின் கீழ், வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA), லயன்ஸ் கிளப், இலங்கையின் முப்படைகள், பல்வேறு பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், மத வளாகங்கள், மாநகர சபைகள், நகர சபைகளுடன் இணைந்து 360,000 மரங்களை AFC நடுகை செய்துள்ளது. அனைத்து நெடுஞ்சாலைகள், வீதி வலையமைப்புகள், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம், பாடசாலைகள், குறிப்பாக வழிபாட்டுத் தலங்களில் இந்த மரங்கள் பரவலாக நடப்பட்டுள்ளன. இந்தத் திட்டமானது அதன் பங்குதாரர்களுக்கு பல சமூக ரீதியான நன்மைகளை உருவாக்கியுள்ளது. அதில் ஒன்று 2030ஆம் ஆண்டளவில் சூழலிலுள்ள 120,000 மெட்ரிக் தொன் காபனிரொட்சைட்டை குறைப்பதாகும். இந்தத் திட்டத்திற்கான பிரதான தாவர விநியோகஸ்தர், சமூக தொழில்முனைவோரான ஜயந்த பாலசிங்க ஆவார். அவர் தனித்துவமான ‘Ath Pavura’ எனும் சமூக வணிக தளத்தின் மூலம் உருவானவராவார். அதில் AFC நிறுவனமும் ஒரு ஸ்தாபக பங்காளராக உள்ளது. ஜயந்த பாலசிங்கவின் அமைப்பான ‘துரு வியன’ ஆனது ஏற்கனவே நடுகை செய்யப்பட்டு வளர்க்கப்பட்ட செடிகளை மற்றொரு இடத்தில் நடுவதற்காக வழங்கி வருகிறது. இதன் மூலம் தாவரங்கள் உயிர் வாழ்வதற்கான சிறந்த வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. எமது அனைத்து திட்டங்களுக்கும் துரு வியனவை எமது பிரதான விநியோகஸ்தராக ஆக்கியுள்ளதன் மூலம், இந்த சமூக அக்கறை கொண்ட நிறுவனத்தின் வளர்ச்சிக்கு AFC உதவுவதோடு அதன் ஊழியர்களுக்கு வாழ்வாதார ஆதரவையும் வழங்குகின்றது. இந்தத் திட்டத்தின் விளைவானது, ஐ.நா. வின் நிலைபேறான வளர்ச்சி தொடர்பான பல்வேறு இலக்குகளை பூர்த்தி செய்வதில் நேரடியாகப் பங்களிக்கிறது

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் (RDA) ஆரம்பிக்கப்பட்ட மரம் நடுகை திட்டங்களைக் கண்காணிக்க பிரத்தியேக இணையத்தளம் மற்றும் கையடக்க செயலியை உருவாக்குவதற்கான முயற்சிக்கு AFC உதவியளித்துள்ளது. இது அவர்களது இரண்டு மில்லியன் மரம் நடுகைத் திட்டமான ‘மக தெபச துரு செவன’ (வீதியின் இரு மருங்கிலும் மர நிழல்) தொடர்பான தொடர்ச்சியான முன்னேற்றத்தை பதிவு செய்து திறம்பட பேணுவதற்கும் சிறப்பாக கண்காணிக்கவும் உதவுகின்றது. நான்கு ஆண்டுகளில் 800,000 மரங்களை வழங்கும் உறுதிமொழியுடன் கூடிய இந்த ‘மக தெபச துரு செவன’ ​​திட்டத்தில் AFC யும் பங்குதாரராக உள்ளது.

இவ்வாறான காரணங்களைக் கொண்டுள்ள, AFC யின் ‘ஒற்றுமைக்கான ஒரு மில்லியன் மரங்கள்’ திட்டம் மதிப்பீடு செய்யப்பட்டு இந்த பெறுமதி மிக்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது தொடர்பில் கருத்து வெளியிட்ட AFC இன் பிரதித் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரொமானி டி சில்வா, ‘இந்த பெறுமதி மிக்க விருதைப் பெற்றமை தொடர்பில் நாம் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம். AFC ஆகிய நாம் மேற்கொள்ளும் அனைத்து செயற்பாடுகளிலும் சிறந்து விளங்கும் வகையில் தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறோம். அந்த வகையில் இந்த விருது அதற்கான ஒரு சான்றாகும். புதிய வருடத்தில் எமது நிலைபேறானதன்மை தொடர்பான செயற்பாடுகளை தொடர்ந்தும் கொண்டு செல்லவும் மேம்படுத்தவும், அவற்றின் மூலம் எமது தேசத்தின் அபிவிருத்திக்கான பங்களிப்பை அதிகரிக்கவும் நாம் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

வருடாந்தம் சமூக மற்றும் சூழல் நிலைபேறான தன்மை முயற்சிகளில் ஈடுபடுவதற்காக தனது இலாபத்தில் 4% இனை AFC ஒதுக்குகிறது. பெருநிறுவன சமூக பொறுப்புத் (CSR) திட்டங்கள் மற்றும் முயற்சிகள் தவிர, பல்வேறு நன்கொடைகள் மற்றும் அனுசரணைகளையும் AFC வழங்குகிறது. AFC இனால் மேற்கொள்ளப்படும் அனைத்து நிலைபேறானதன்மை நடவடிக்கைகளும் சூழலுக்கும் சமூகத்திற்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. அதன் அனைத்து நடவடிக்கைகளும் தேசிய நிலைபேறான தன்மைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றன. 2020 – 2021 நிதியாண்டில் நிலைபேறான தன்மை முன்முயற்சிகளில் AFC இன் முதலீடு ரூ. 12 மில்லியனுக்கும் அதிகமாக காணப்பட்டதுடன் அது 2022 – 2023 இல் ரூ. 40 மில்லியனாக அமைய வேண்டுமென நிறுவனம் எதிர்பார்க்கிறது.

சர்வதேச தரத்திற்கு இணையான நிலைபேறான தன்மை மற்றும் சிறந்த நடைமுறைக் கொள்கைகளை AFC அதன் முக்கிய வணிக மாதிரியில் ஒருங்கிணைத்துள்ளது. 2012 ஆம் ஆண்டில், மக்கள், உலகம், இலாபம் எனும் மூன்று அடிப்படை வணிக அணுகுமுறையை நிறுவனம் கடைப்பிடித்து வருகின்றது. 2018ஆம் ஆண்டில், நிலைபேறான தன்மை தரநிலைகள் மற்றும் சான்றிதழ் முன்முயற்சிக்காக (SSCI) விண்ணப்பிக்க நிறுவனம் முடிவு செய்ததுடன்,  அது AFC இன் நிலைபேறான தன்மை முன்முயற்சிகள் மற்றும் மதிப்புகளை மேலும் மேம்படுத்த உதவியதுடன், முழுமையான நிலைபேறான தன்மையில் சான்றளிக்கப்பட்ட பெறுமதி சார்ந்த நிதி நிறுவனமாக மாற உதவியது. சூழல் மற்றும் சமூக நல்வாழ்வை மையமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை சமீபத்திய வருடங்களில் AFC ஆரம்பித்து மேப்படுத்தியுள்ளது. AFC தன்னுடன் ஒத்த எண்ணம் கொண்ட பங்குதாரர்களுடன் பல்வேறு முதலீட்டு கூட்டாண்மைகளையும் தொடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

EOSD பற்றி

EOSD ஆனது புத்தாக்கமான மற்றும் சூழல் ரீதியாக நிலைபேறான உத்திகள், சந்தை மேம்பாட்டு திட்டங்கள், நிலைபேறான வளர்ச்சிக்கான ஐரோப்பிய ஒன்றிய உத்திகளை செயற்படுத்துவதில் பங்களித்தல் உள்ளிட்ட ஏனைய முயற்சிகளை உருவாக்கி செயல்படுத்துவதில் உலகளாவிய ரீதியல் புகழ் பெற்று விளங்கும் ஒரு முன்னோடியான நிறுவனமாகும். நிலைபேறான பொருளாதார அபிவிருத்தி மற்றும் சூழல் பாதுகாப்பை விரைவாக அடைவதற்காக, அரசாங்க நிறுவனங்கள், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சங்கங்கள் மற்றும் நிதித் துறையில் முக்கிய பங்குதாரர்களுடன் அது கூட்டாண்மையைக் கொண்டுள்ளது. இது நிலைபேறான தன்மையை உலகளாவிய ரீதியில் செயற்படுத்துகின்ற, மதிப்பளிக்கப்பட்டுள்ள மற்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிறுவனமாக மாறியுள்ளது.

Alliance Finance PLC பற்றி

அலையன்ஸ் பினான்ஸ் கம்பனி (AFC) ஆனது, இலங்கையில் 60 வருடங்களுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்டுள்ள பழமையான நிதி நிறுவனமாகும். அது தனது விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக சேவைகளை வழங்கி வருவதுடன், நிதி உள்ளடக்கம் மற்றும் நிலைபேறான தன்மையை ஆதரிக்கிறது. முன்னோடியான நிலைபேறான தன்மை தரநிலைகள் மற்றும் சான்றளிப்பு முன்முயற்சியின் (SSCI) கீழ், தெற்காசியாவில் முழுமையான நிலைபேறான தன்மையில் சான்றளிக்கப்பட்ட நிதி நிறுவனம் எனும் பெயரை கொண்டுள்ள முதலாவது நிறுவனம் இதுவாகும். SSCI ஆனது ஜேர்மனியில் முதன் முதலாக, அளவிடக்கூடிய மற்றும் சான்றளிக்கக்கூடிய நிலைபேறான தன்மை தரநிலையாகும். இது மதிப்பீட்டினால் இயக்கப்படும் நிதி நிறுவனங்களுக்கான, நிலைபேறான தன்மை தரநிலைகளின் சர்வதேச கவுன்சிலால் உருவாக்கப்பட்டுள்ளது. AFC தனது வாடிக்கையாளர்களின் வளர்ச்சி மற்றும் செழிப்பை வளர்க்கும் அதே வேளையில் அவர்களுடன் நம்பிக்கை மற்றும் நீண்டகால உறவுகளை வளர்ப்பதற்கான ஒரு பரஸ்பர பார்வையை கொண்டுள்ளது. சூழல் மற்றும் நிலைபேறான தன்மை முன்முயற்சிகள் ஆகியன AFC இன் நிலைபேறான தன்மை நிகழ்ச்சி நிரலின் பிரதான இடத்தை வகிக்கின்றன. இது “நிலைபேறான நிதி மூலம் உலகை சிறந்த இடமாக மாற்றுதல்” எனும் நிறுவனத்தின் தொலைநோக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *