Latest News Tamil

இலங்கையின் அடையாளம் மிக்க ரியல் எஸ்டேட் கட்டடம் ALTAIR திறந்து வைப்பு

தனித்துவமான மற்றும் புகழ்மிக்க கட்டடக்கலை மற்றும் அற்புதத்தின் வெளிப்பாடான Altair Colombo, கொழும்பின் வானலைக்கு மேலும் அழகு சேர்க்கின்றது. தற்போதைய ரியல் எஸ்டேட் தேவைகளுக்கு இணையாக, கொழும்பின் வானை அழகாக்கும் Altair கட்டடத் தொகுதி, இன்று (ஒக்டோபர் 27, 2021) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அடையாளம்மிகு இக்குடியிருப்பு கோபுரங்களின் சம்பிரதாயபூர்வ திறந்து வைக்கும் நிகழ்வானது, அண்டை நாடான இந்தியா மூலம் இலங்கைக்கு சாதகமான மற்றும் விரைவான பொருளாதார உதவியினை கோடிட்டு காட்டுகிறது. குறிப்பாக Altair ஆனது, கொழும்பின் ரியல் எஸ்டேட் துறையில் மிகப் பாரிய வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) என்பதுடன் South City Group of Kolkata குழுமத்தின் ஒரேயொரு வெளிநாட்டு நேரடி முதலீடும் ஆகும். இது இலங்கையில் முதலீடு செய்யும் இந்திய நிறுவனமாகும். அந்த வகையில், உலகெங்கிலும் உள்ள அனைத்து ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்கும், இலங்கையில் ரியல் எஸ்டேட் துறையில் வெளிநாட்டு முதலீட்டுக்கான சாத்தியக்கூறுகளின் அடையாளமாகவும், காட்சிப் பொருளாகவும் Altair விளங்குகின்றது.

ALTAIR இன் பிரம்மாண்ட திறப்பு விழா, பிரதம விருந்தினரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன், விசேட அதிதியாக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, கௌரவ விருந்தினரான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றதோடு, இந்நிகழ்வில், நகர அபிவிருத்தி, கழிவுப்பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவ, Altair திட்டத்தின் விசேட அங்கீகாரம் பெற்ற அதிகாரி கலாநிதி  சிறினிமல் பெரேரா, சுசில் மோதா, ஜுகல் கேதாவத், ராஜேந்திர பட்சாவத், பிரகாஷ் பட்சாவத் (South City Projects Kolkata Ltd பணிப்பாளர்/பங்குதாரர்), Indocean Developers Pvt Ltd பணிப்பாளர் மன்மோகன் பக்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அடுத்த சில வாரங்களுக்குள் முழுமையான விற்பனையின் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கையளிக்கப்படத் தயாராக இருப்பதால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பொருத்தமான வகையில் தெரிவுகளை மேற்கொள்வதனை உறுதிப்படுத்துவதையும் இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.

கட்டடக்கலை மற்றும் பொறியியல் சவால்களுக்கு மத்தியில், அவை அனைத்தையும் வெற்றி கொண்டு உருவாக்கப்பட்ட ALTAIR இன் கட்டுமானம் மற்றும் அதன் பூரணத்துவம் என்பன பல்வேறு சிக்கல்மிகுந்தாக அமைந்த நிலையில், அது கட்டுமான கால அட்டவணையையும் பாதித்தது. அந்த வகையில், கடந்த சில மாதங்களில் இலங்கை அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க ஆதரவுடன், குறிப்பாக கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் திட்ட முன்னேற்றத்தை விரைவுபடுத்தியமை தொடர்பில், உலகப் புகழ்பெற்ற South City Projects (Kolkata) Ltd இனது உள்ளூர் பிரதிநிதியும், இதன் பிரதான கட்டுமான நிறுவனவுமான, Indocian (Pvt) Limited தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

சிங்கப்பூரில் உள்ள Marina Bay Sands and the Jewel உள்ளிட்ட மேலும் பல பிரபல கட்டடச் சின்னங்களை உருவாக்கிய, பிரபல படைப்பாளர் Moshe Safdie இனது ஆக்கப்பூர்வமான, அற்புதமான படைப்பின் வெளிப்பாடே Altair ஆகும். காற்றோட்டம், வெளிச்சம், பிரத்தியேகத் தன்மை, அதன் வடிவமைப்பு மற்றும் அதன் வாழ்வதற்கு உகந்த இடப்பரப்பு ஆகியவற்றுடன், 68 மாடிகளில் 1.5 மில்லியன் சதுர அடி பரப்பளவில், 404 ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்புகளை ALTAIR கொண்டுள்ளது.

முழுமையாக நிறைவு செய்யப்பட்டு, கையளிக்கும் செயல்முறையின் ஆரம்பத்தை அடுத்து, Altair ஆனது இலங்கையில் அதிநவீன வர்த்தகநாம அனுபவத்தை கொண்டு சேர்க்கும் வாழ்க்கைமுறை மாற்றமானது, புதிய கொழும்பில் துடிப்பான பல்வகை கலாசாரத் தன்மை கொண்ட வாழ்க்கை முறைக்கு உண்மையான மேலதிக மதிப்பை வழங்குமென Indocean Developers Pvt Ltd நம்பிக்கை கொள்கிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *