எட்டு தசாப்தங்களாக சுதேசி கோஹோம்ப உற்பத்தியாளராக விளங்கும் சுதேசி இன்டஸ்ட்ரியல் வர்க்ஸ் பி.எல்.சி ஆனது, ‘சதொச கோஹோம்ப’ சவர்க்காரம் தொடர்பாக பல்வேறு நீதிமன்ற தடையுத்தரவுகளைப் பெற்றுள்ளது. சுதேசி கோஹோம்பவின் புலமைச் சொத்துரிமைகளை மீறியதற்காக அதனை தயாரித்த ரீபோன் லங்கா பிரைவேட் லிமிடெட், (Reebonn Lanka Pvt Ltd) அதனை விநியோகித்த லங்கா சதொச லிமிடெட் ஆகியோருக்கு எதிராக, கொழும்பின் வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.ஆர். மரிக்காரினால் கடந்த 2021 ஜூன் 22 அன்று இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எட்டு தசாப்தங்களாக, மூலிகை சவர்க்காரம் மற்றும் மூலிகை தனிநபர் பராமரிப்பு தொடர்பான துறையில் சந்தையில் முன்னோடியாக விளங்கும் சுதேசி கோஹோம்பவின் பெருமைக்குரிய உரிமையாளரும் தயாரிப்பாளருமான சுதேசி, அதன் தயாரிப்பான கோஹோம்ப கொண்டுள்ள பிரபலத்தைப் பயன்படுத்தி, சதொச மற்றும் ரீபோன் லங்கா ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “சதொச கோஹோம்ப” எனும் பெயரில் “சுதேசி கோஹோம்ப” சவர்க்காரத்தை மிகவும் ஒத்த பொதியிடல், மற்றும் அதன் ஒத்த வர்த்தக நாம குறியீட்டுடன், அதனை உற்பத்தி செய்தல், சந்தைப்படுத்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றின் அடிப்படையில், அதன் புலமைச் சொத்துரிமைகளை மீறியதற்காக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுதேசி சார்பில் மன்றில் முன்னிலையான, ஜனாதிபதி சட்டத்தரணி ரோமேஷ் டி சில்வாவின் சமர்ப்பணங்கள் தொடர்பில் திருப்தியடைந்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ. மரிக்கார், ரீபோன் லங்கா மற்றும் லங்கா சதொச ஆகியன “சுதேசி கோஹோம்ப” உடன் ஒத்த அல்லது அது போன்ற அதன் தனிநபர் பராமரிப்பு தயாரிப்பை, எந்த வகையிலும் அல்லது முறையிலும் உற்பத்தி, விநியோகம், விற்பனை ஆகியவற்றை மேற்கொள்வதை தடுப்பது உள்ளிட்ட பல உத்தரவுகளை பிறப்பித்தார்.
சுதேசி கோஹோம்ப ஆனது ஒரு பதிவு செய்யப்பட்ட வர்த்தக நாமம் என்பதுடன், இது 80 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுதேசி கோஹோம்ப ஆனது, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில் (NMRA) பதிவு செய்யப்பட்ட தயாரிப்பாகும். 100% இலங்கை நிறுவனமான சுதேசி, அண்மையில் கொவிட்-19 பாதுகாப்பு முகாமைத்துவம் தொடர்பான சான்றிதழ் உட்பட தொழில்துறை ரீதியிலான பல்வேறு முதன் முறையான விடயங்களை உரிமை கொண்டுள்ளது. இலங்கையில் உள்ள மூலிகை சவர்க்காரம் மற்றும் தனிநபர் மூலிகை பராமரிப்பு பிரிவில் முன்னோடியானதும் சந்தையில் முன்னிலையில் உள்ளதுமான சுதேஷி இன்டஸ்ட்ரியல் வர்க்ஸ் பி.எல்.சி ஆனது, ISO 9001: 2015 சான்றளிக்கப்பட்ட நிறுவனம் என்பதுடன் 1941 ஆம் ஆண்டில் அது கூட்டிணைக்கப்பட்டது. சுதேசியின், சுதேஷி கோஹோம்ப, ராணி சந்தனம், சுதேசி கோஹோம்ப பேபி ஆகிய சவர்க்காரங்கள் பல ஆண்டுகளாக இலங்கையர்களால் அன்புடன் வரவேற்பைப் பெற்று, நம்பிக்கையையும் வென்றவையாகும். இந்நிறுவனம் 80 ஆண்டுகளைக் கொண்ட உயர்ந்த வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், தற்போது அதன் நம்பகமான சிறப்புகளின் ஆதரவுடன் உலகளாவிய சந்தைகளில் அது இடம்பிடித்துள்ளது.
இயற்கை மூலிகை மூலப்பொருட்களைப் பயன்படுத்தி சருமத்தில் இலகுவானதும், மென்மையானதுமான வகையில், சிறந்த தரமான சருமப் பராமரிப்பு தயாரிப்புகளை வழங்குவதில் நிறுவனம் நிபுணத்துவம் பெற்றுள்ளது. சுதேசியின் பிரபலமான தரக்குறியீடுகளில் சுதேசி கோஹோம்ப, ராணி சந்தனம், சுதேசி கோஹோம்ப பேபி, லிட்டில் பிரின்சஸ், பேர்ல்வைட், லக் பார், சேஃப் பிளஸ், லேடி, பிளக் ஈகிள் பெர்ஃப்யூம், சுதேசி பொடி வாஷ் & ஷவர் ஜெல் ஆகியவை அடங்கும். சுதேசியினால் தயாரிக்கப்படும் அனைத்துப் பொருட்களும் 100% தாவர ரீதியானது என்பதுடன் விலங்குகள் மீதான கொடுமைகளிலிருந்து அவை விடுபட்டதாக அமைந்துள்ளன.
சுதேசி இன்டஸ்ட்ரியல் வர்க்ஸ் பி.எல்.சி., சார்பில் ரொமேஷ் டி சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணிகளான ஷானக கூரே, வசந்தகுமார் நைல்ஸ், அட்டர்ணி வழக்கறிஞர் நொத்தாரிசு எஃப் டி சேரம் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.