இலங்கையின் முன்னணி கூட்டு நிறுவனமான DIMO, அண்மையில் நிறைவடைந்த மதிப்புமிக்க “CMA Excellence in Integrated Reporting Awards” நிகழ்வின் 2020 ஆம் ஆண்டுக்கான தொகுப்பில் ‘ஒட்டுமொத்த வெற்றியாளர்’ விருதினை (Overall Winner) தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டிலும் வெற்றி பெற்றதன் மூலம் ஒருங்கிணைந்த அறிக்கையிடலில் அதன் தலைசிறந்த வெற்றிப் பயணத்தை தொடர்கின்றது. இவ்விருதுகள் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தினால் (Institute of Certified Management Accountants) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பிரதான விருதுக்கு மேலதிகமாக, “சிறந்த சுருக்கமான ஒருங்கிணைந்த அறிக்கைக்கான சிறப்பு விருது”, “சிறந்த பத்து ஒருங்கிணைந்த அறிக்கைகளுக்கான விருது” மற்றும் “ஒருங்கிணைந்த சிந்தனைக்கான சிறப்பு விருது” ஆகிய விருதுகளையும் DIMO வென்றிருந்தது.
அண்மையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் DIMO குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான கஹநாத் பண்டிதகே, சிரேஷ்ட கணக்காளர் இஷார தனசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பில் DIMOவின் தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே கருத்து தெரிவிக்கையில், “நாம் அடைய வேண்டிய உயர் தரங்களையும், அங்குள்ள கடுமையான போட்டிகளையும் கருத்தில் கொள்ளும் போது இந்த நிகழ்வின் மிக மதிப்புமிக்க விருதை ஒரு முறை வெல்வதே கடினமானது. எனவே, தொடர்ச்சியாக 6 முறை வெல்வது நம்பமுடியாத சாதனையென்பதுடன், இது ஒருங்கிணைந்த அறிக்கையிடலுக்கான DIMOவின் உறுதிப்பாட்டின் அளவையும், உயர் தரத்தை பின்பற்றுவதில் எங்கள் அணியின் சிறந்த முயற்சிகளையும் எடுத்துக் காட்டுகின்றது. நிதி மற்றும் நிதி அல்லாத அம்சங்களில் உள்ளூர் மற்றும் சர்வதேச அறிக்கையிடல் மற்றும் வெளிப்படுத்தல் வழிகாட்டுதல்களில் சிறந்த நடைமுறைகளை மதிப்பாய்வு செய்து பின்பற்றுவதற்கான புதிய வழிகளை நாங்கள் எப்போதும் தேடுகிறோம். இதனால், அனைத்து தரப்பினருக்கும் மிக உயர்ந்த தரம் பற்றிய தகவல்கள் வழங்கப்படுகின்றன,” என்றார். வருடாந்த அறிக்கையின் ஒவ்வொரு உள்ளடக்க கூறுகளும் மூலோபாயத்தை வழங்க DIMO எவ்வாறு உதவுகிறது என்பதை நிரூபிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
ஒருங்கிணைந்த சிந்தனை என்பது நிறுவனத்தை நிர்வகிக்கும் போது பெறுமதி உருவாக்கம் மற்றும் அவற்றின் இடை சார்பு நிலைகள் மற்றும் ஒன்றோடொன்று தொடர்புகளை பாதிக்கும் வெவ்வேறு கூறுகளை நிறுவனங்கள் கருத்தில் கொள்ளும் முறையைக் குறிக்கிறது. ஓர் ஒருங்கிணைந்த அறிக்கையில், நிர்வாகத்தால் அவர்களின் முகாமைத்துவ கலந்துரையாடல்களில் இந்த சிந்தனை தெளிவாக வெளிப்படுத்தப்பட வேண்டும் மற்றும் அறிக்கை முழுவதும் மூலோபாயத்தை ஒழுங்கமைக்கப்படுவதனை நிரூபிக்க வேண்டும். DIMO ஒருங்கிணைந்த அறிக்கையில், தலைவரின் மதிப்பாய்விலிருந்து தொடங்கி, ஒருங்கிணைந்த சிந்தனைக்கான அதன் முறையான அணுகுமுறையை இது நிரூபிக்கிறது. DIMOவின் அண்மைய ஆண்டறிக்கையில், பெறுமதி உருவாக்கம் மற்றும் இலக்கு ஒற்றுமையின் முக்கியத்துவத்தை பாதிக்கும் அனைத்து அம்சங்களையும் ஊழியர்கள் கருத்தில் கொள்ளும் ஒரு கலாசாரத்தை அவர் எவ்வாறு ஊக்குவிக்கிறார் என்பதை தலைவர் விரிவாகக் கூறும்போது இது பிரதிபலிக்கிறது. வருடாந்த அறிக்கையில் குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியின் மதிப்பாய்வானது, வர்த்தகநாமத்தின் நிலைமாற்றமானது நிறுவனத்தின் எதிர்கால மீட்டெழுச்சியை எவ்வாறு அதிகரிக்குமென சித்தரித்தது. மேலதிகமாக இந் நிறுவனம், அதன் வர்த்தகநாமத்தின் நிலைமாற்றத்துடன், இப்போது ஒப்பீட்டளவில் அதிக மூலோபாய கவனம் மற்றும் ஒருங்கிணைந்த சிந்தனையை நிரூபிக்கிறது. கூட்டாண்மை நிறுவன சூழலில் இத்தகைய மாற்றங்கள் மேம்பட்ட அறிக்கைகளுக்கு வழிவகுத்தன.
சர்வதேச ஒருங்கிணைந்த அறிக்கையிடல் மன்றம் வழங்கிய ஒருங்கிணைந்த அறிக்கையிடல் கட்டமைப்பை மிக உயர்ந்த அளவில் பின்பற்றுவதற்கான DIMOவின் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் அதன் அண்மைய வருடாந்த அறிக்கையில் நிறுவனம் ஒருங்கிணைந்த சிந்தனையை எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளது என்பது இந்த பாராட்டுக்களை வெல்வதற்கு வழி வகுத்துள்ளது. முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது சர்வதேச ஒருங்கிணைந்த அறிக்கையிடல் கட்டமைப்பை (International <IR> Framework) ஏற்றுக்கொள்வதன் மூலம் இலங்கையில் ஒருங்கிணைந்த அறிக்கையை மறுவரையறை செய்த சில நிறுவனங்களில் ஒன்றாக DIMO நன்கறியப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே, DIMOவின் ஒருங்கிணைந்த அறிக்கையிடல் நடைமுறைகள் பல்வேறு கல்வி நிறுவனங்களால் பெரிதும் பாராட்டப்பட்டதுடன், இலங்கை ஒருங்கிணைந்த நடைமுறைகளை மேம்படுத்துவதற்கு மறைமுகமாக உதவ நிறுவனத்துக்கு வழி செய்தது.
வருடாந்த அறிக்கையின் சுருக்கத்தில் CMA அதிக முக்கியத்துவம் அளிப்பதுடன், DIMOவின் வருடாந்த அறிக்கை நிச்சயமாக இந்த விஷயத்தில் தனித்து நிற்கிறது. அறிக்கையின் நிதி சாராத பிரிவினரால் பயன்படுத்தப்படும் மொத்த பக்கங்கள் மற்றும் பக்கங்களின் எண்ணிக்கையால் சுருக்கம் பொதுவாக அளவிடப்படுகிறது. தகவலின் முழுமையைத் தக்க வைத்துக் கொள்ளும்போது சுருக்கத்தை அடைவது சவாலானது மற்றும் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக இந்த விருதை வென்றதன் மூலம், DIMO அது சுருக்கத்திற்கும் முழுமைக்கும் இடையில் சிறந்த சமநிலையை அடைந்துள்ளது என்பதை நிரூபித்துள்ளது.
பட விளக்கம்
DIMO குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான கஹநாத் பண்டிதகே, ஒட்டுமொத்த வெற்றியாளர் விருதினை பெற்றுக்கொள்கின்றார்.