இவ்வருடம் ‘15 Best Workplaces for Millennials™’ மற்றும் ‘Excellence in Encouraging Opportunities for Innovation’ எனும் இரண்டு புதிய விருதுகள்
முன்னணி ICT தீர்வு வழங்குநரான Huawei Technologies Lanka ஆனது Great Place to Work® (பணியாற்ற சிறந்த இடம்) எனும் இலங்கையில் உள்ள சுயாதீன பகுப்பாய்வாளர்களால், நான்காவது தடவையாக Great Place to Work சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. Huawei Technologies Lanka ஆனது வேலை செய்வதற்கான சிறந்த இடம் எனும் சான்றிதழைப் பெற்றுள்ளது மாத்திரமல்லாமல், தொடர்ந்து இரண்டாவது வருடமாக ‘50 Best Workplaces™ in Sri Lanka in 2022’ (2022 இல் இலங்கையின் 50 சிறந்த பணியிடங்கள்) எனும் பெருமதிப்பிற்குரிய பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது. அது தவிர ‘15 Best Workplaces for Millennials™ in Sri Lanka for 2022’ (2022 ஆம் ஆண்டிற்கான இலங்கையில் உள்ள மில்லேனியலுக்கான 15 சிறந்த பணியிடங்கள்™) மற்றும் ‘Excellence in Encouraging Opportunities for Innovation’ (புத்தாக்கத்திற்கான வாய்ப்புகளை ஊக்குவிப்பதில் சிறந்து விளங்குதல்) ஆகிய மேலும் இரண்டு புதிய விருதுகளை நிறுவனம் இவ்வருடம் வென்றுள்ளது. இந்த நான்கு சிறந்த பணியிட விருதுகள் தொடர்பான சாதனைகளை கொண்டாடும் விழா அண்மையில் கொழும்பில் உள்ள Huawei அலுவலகத்தில் இடடம்பெற்றது.
நிறுவனம் தனது டிஜிட்டல்மயமாக்கல், அறிவார்ந்த மாற்றம் மற்றும் குறைந்த காபன் நடுநிலைப்படுத்தல் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்வதோடு, ஊழியர்களுக்கான உயர் நம்பிக்கை, ஒருமைப்பாடு, வளர்ச்சி, அக்கறை ஆகியவற்றை வளர்ப்பதில் Huawei நிறுவனம் செலுத்தும் தொடர்ச்சியான கவனம் ஆகியவற்றுக்கு இந்த அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. Great Place to Work® Sri Lanka நடத்திய சுயாதீன அநாமதேயமான கணக்கெடுப்பில் அதன் ஊழியர்கள் வழங்கிய விரிவான மதிப்பீடுகளின் அடிப்படையில் Huawei நிறுவனத்திற்கு இந்த அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் உரையாற்றிய, Huawei Sri Lanka நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி (CEO) Tao Guangyao, “எமது ஊழியர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையில் பல ஆண்டுகளாக ஒரு சிறந்த தொழில் வழங்குனராக இருப்பதில் நாம் பெருமையடைவதோடு, நன்றியுள்ளவர்களாகவும் இருக்கிறோம். Huawei நிறுவனத்தின் அனைத்து தொழில்நுட்ப முன்னேற்றங்களும் தனித்துவமான Huawei கலாசாரம் மற்றும் நிறுவனத்திற்குள் இருக்கும் சூழல் தொகுதியின் சாதனைகளாகும். Huawei Technologies Lanka எமது ஊழியர்களுக்கு சிறந்த, தொடர்ச்சியான, முன்னேற்றகரமான சூழலை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. Huawei ஆகிய நாம், வாய்ப்புகளை உருவாக்குதல், குழுப்பணியை ஊக்குவித்தல், திறமைகளை வளர்த்தல், தலைமைத்துவத் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை உறுதியாக நம்புகிறோம். அத்துடன் நிறுவன இலக்குகளை அடைவதில் எமது பணிக்குழாமினர் எப்போதும் எமது மதிப்புமிக்க சொத்தாக இருந்து வருகின்றனர். எமது ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் நிறுவனத்திற்கு அவர்கள் காட்டும் விசுவாசத்திற்கு நான் இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்” என்றார்.
Huawei ஆனது வாடிக்கையாளர் மையப்படுத்தல், ஊக்கமளிக்கும் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, பிரதிபலிப்பின் மூலமான வளர்ச்சி ஆகிய நான்கு முக்கிய மதிப்புகளைக் கொண்ட தனித்துவமான கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது. இந்த முக்கிய மதிப்புகளின் அடிப்படையில், Huawei Sri Lanka ஆனது அதன் இலங்கை நடவடிக்கைக்கு, எளிமை, கவனம் செலுத்தல், திறந்த தன்மை, பொறுப்பு ஆகிய தனித்துவமான 4 முக்கிய மதிப்புகளை வரையறுத்துள்ளது. இலங்கையில், Huawei ஆனது ஒரு நிறுவனமாக ICT துறையின் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாளராக, ஒரு பாராட்டத்தக்க மற்றும் ஒப்பிடமுடியாத சேவையை வழங்கி வருகிறது. இந்த முக்கிய மதிப்புகளின் அடிப்படையிலேயே, Huawei Sri Lanka தனது இலங்கை நடவடிக்கைக்கு தனித்துவமான நான்கு முக்கிய மதிப்புகளை வரையறை செய்துள்ளது. Huawei நிறுவனத்தில் உள்ளவர்கள், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு, எப்போதும் புத்தாக்கமான தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்குவதன் மூலம் பகிரப்பட்ட இலக்குகளை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறார்கள்.
Huawei Technologies Lanka நிறுவனம் தனது ஊழியர்களைக் கவனித்துக்கொள்வதற்காக, தொடர்ச்சியாக மக்கள் சார்ந்த நடைமுறைகளை பின்பற்றுவதில் புகழ்பெற்றுள்ளது. Huawei Technologies Lanka வெற்றி கொண்டுள்ள, பணியாற்றுவதற்கான சிறந்த இடத்திற்கான மதிப்பீட்டு விருதுகளானவை, நிறுவனம் இவ்வருடம் மீண்டும் இலங்கையின் சிறந்த தொழில் வழங்குனர் பட்டியலில் இடம்பிடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
சிறந்த செயற்பாடுகள், தொடர்ச்சியான புத்தாக்க கண்டுபிடிப்புகள், திறந்த ஒத்துழைப்பிற்கான அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டு, இரண்டு தசாப்தங்களாக இலங்கை முழுவதும் தொலைத்தொடர்பு மற்றும் நிறுவன வலையமைப்புகள், சாதனங்கள், கிளவுட் தொழில்நுட்பம் மற்றும் சேவைகளில் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கான இறுதி தீர்வுகளுக்கான போட்டிமிக்க ICT தயாரிப்புகளை Huawei நிறுவி வருகின்றது.
END