Rose & Lime (ரோஸ் & லைம்) வகை உள்ளிட்ட திவா ஃப்ரெஷின் (Diva Fresh) முன்னணி தயாரிப்புகள், 700 கிராம் பொதிகளாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் நுகர்வோருக்கு அவர்களின் வீட்டுத் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான வகையில் அதன் தயாரிப்புகளை திவா வழங்குகிறது. சிறந்த சலவை பராமரிப்பு தீர்வுகளை வழங்கும் சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ள Diva, உள்ளூர் நுகர்வோரின் தேவையை எப்போதும் புரிந்துகொண்டு, இலங்கையர்களின் வீடுகளில் அதிகரித்து வரும் தேவை மற்றும் கேள்வியை பூர்த்தி செய்யும் வகையில், கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற பொருட்களுக்கான உயர் தர மதிப்பையும் வழங்குகிறது.
இந்த அறிமுகத்திற்காக, Diva தனது முன்னணி தயாரிப்பு வகையான Diva Fresh தயாரிப்புகளிலிருந்து இரண்டு வகைகளை தேர்ந்தெடுத்துள்ளது. அவை அதன் நுகர்வோர் மத்தியில் மிகவும் விரும்பப்படும் வாசனைகளைக் கொண்டவையாகும். முற்றுமுழுதான உண்மையான இலங்கை வர்த்தக நாமம் எனும் வகையிலும், காலத்தின் தேவையைப் புரிந்துகொண்டதன் அடிப்படையிலும், நுகர்வோரின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, 700 கிராம் பொதியை சந்தையில் வழங்கியதன் மூலம் அது தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளது.
சலவைத் தூளானது, நாடு முழுவதும் உள்ள வீடுகளில் மிகப் பாரிய பங்கை வகிக்கிறது என்பதால், 700 கிராம் பொதியை உருவாக்க Diva முன்வந்துள்ளது. இதன் மூலம் நுகர்வோருக்கு அவர்களின் சலவைத் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான பல்வேறு தெரிவு முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய பொருளாதார சவால்களின் அடிப்படையில், நுகர்வோர் தங்கள் கொள்வனவு தொடர்பான சிறந்த முடிவுகளை எடுக்க இந்த சலுகை உதவும்.
Diva Fresh ஆனது, Perfume Magic உடன் 3-இன்-1 செயற்பாட்டைக் கொண்டதாக வருகிறது. இது சிறந்த நறுமணத்தை வழங்குகின்ற அதே நேரத்தில் Fibre Clean தொழில்நுட்பம் மற்றும் Optical Brighteners செயற்பாடுகளின் மூலம் ஆடைகளுக்கு அதிக தூய்மை மற்றும் பிரகாசத்தை வழங்குகின்றது. நவீன குடும்பத்தின் புத்திசாலித்தனமான தெரிவு இதுவாகும். குடும்பத்தின் நல்வாழ்வைக் பேணுவதற்காக வேலைப்பளு மிக்க வாழ்க்கையை அது எளிதாக்குகிறது.
Diva Fresh 700 கிராம் பொதியானது, ‘Rose & Lime’, ‘Purple Lotus, Lavender & Lime’ ஆகிய இரு வகைகளில் , நாடு முழுவதும் உள்ள அனைத்து விற்பனைக் கூடங்களிலும் கிடைக்கிறது. அத்துடன் Hemas E-store மூலம் (https://hemasestore.com/brand/diva/ ) ஒன்லைனிலும் கொள்வனவு செய்யலாம்.
End
Hemas Consumer பற்றி
வீடு மற்றும் தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, பல ஆண்டுகளாக வலுவான நோக்கம் கொண்ட தரக்குறியீடுகள் கொண்ட தயாரிப்புகள் மற்றும் முற்போக்கான நிலைபேறான தன்மையான நடைமுறைகள் மூலம், நுகர்வோர் இதயங்களை வென்றுள்ளது. Hemas Consumer Brands ஆனது உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளின் வரிசைகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தீர்வுகளை வழங்கி வருகிறது. வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட புத்தாக்கம் மிக்க குழுக்கள் மூலம், உள்ளூர் தேவைகளை அறிந்து அதன் மூலம் சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவது தொடர்பில் அது பாராட்டைப் பெற்றுள்ளது. அந்த வகையில், அர்த்தமுள்ள சலுகைகளை உருவாக்கி, நம்பகமான கூட்டாண்மைகளை வளர்த்து, மேலும் சூழலுக்கு உகந்த உலகத்தை உருவாக்குவதன் மூலம் நாட்டின் அனைத்து பாகங்களிலுமுள்ள சமூகங்களின் வாழ்க்கையை சென்றடைகிறது.