Latest News Tamil

தன்னியக்க இணக்கப்பாட்டுடன் இலஞ்சம், ஊழல், பெருநிறுவன அபாயங்களைக் குறைத்தல்

தொழில்துறை சார்ந்த ஒரு முக்கிய பிரச்சினை பற்றி கூறும் Compfie

இந்தியாவின் முதல் இடத்திலுள்ள Aparajitha Corporate Services Private Limited நிறுவனமானது, இலங்கையில் உள்ள, மாற்றத்திற்கான ஆலோசனை மற்றும் பயிற்சி முன்னணி நிறுவனமான 3W உடன் இணைந்து, அதன் 2ஆவது உலகளாவிய இணக்கப்பாட்டு இணையவழி கருத்தரங்கொன்றை (Global Compliance Webinar) அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட 3W Consulting உடன் Aparajitha Corporate Services Private Limited இணைந்து, இலங்கையில் அதன் Global E-Governance & Compliance Platform (உலகளாவிய இணைய-ஆளுமை மற்றும் இணக்கத் தளமான) ‘Compfie’யை கடந்த வருடம் அறிமுகப்படுத்தியிருந்தது. இலங்கையின் இணக்கப்பாட்டுச் சந்தையில் ‘Comfie’ஐ நிலைநிறுத்துவதற்கான இந்த நடவடிக்கையானது அபராஜித மற்றும் 3W இற்கு இடையிலான மூலோபாய ரீதியிலான நாடு சார்ந்த பங்காளித்துவத்திற்கான ஒரு முக்கிய வளர்ச்சியைக் காண்பிக்கின்றது.

இணக்க முகாமைத்துவம் மற்றும் நிறுவனங்களுக்கான நிதி இணக்கத்தை மாற்றமடையச் செய்வதில் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றின் பங்கு பற்றியதாக இணையவழி கருத்தரங்கு அமர்வு அமைந்திருந்தது.

இந்த அமர்வின் முக்கியத்துவம் குறித்து பேசிய அபராஜித நிறுவன நிர்வாக பணிப்பாளர் நாகராஜ் கிருஷ்ணன், “அதிக ஒழுங்குபடுத்தல் மாற்றங்கள் மற்றும் கொவிட்-19 காரணமாக கொண்டு வரப்பட்ட புதிய இயல்பு நிலைமையானது, கவனத்திற் கொள்ள வேண்டிய பெருநிறுவன இணக்கத்தில் ஒரு முக்கிய போக்காக அமைந்துள்ளது. ஏனெனில் 2022 ஆம் ஆண்டானது, ஆட்டோமேஷன் மற்றும் இணக்கம் தொடர்பான செயன்முறைகளை எளிமைப்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் டிஜிட்டல் மாற்றத்தில் கணிசமான அதிகரிப்பில் கவனம் செலுத்துவதாக இருக்கும். எந்தவொரு இலத்திரனியல்-இணக்கக் கட்டமைப்பும் நாடு, மாநிலம், பகுதியளவான மட்டங்களிலான இணக்க நிலையைப் பற்றிய முழுமையான பார்வை மற்றும் பரந்துபட்ட பறவைக் காட்சியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். பாரிய உலகளாவிய நிறுவனங்கள், நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு, தொழிலாளர், நிதி, கார்ப்பரேட், வணிகம், EHS, தொழில்துறை சார்ந்த சட்டங்களை உள்ளடக்கிய பொருத்தமான டொமைனுடன், மென்பொருளை நாடு வாரியாக தொழில்துறை சார்ந்த சட்டங்களைப் புதுப்பிப்பதற்கும், மென்பொருளைத் தன்னியக்க முறையில் கட்டமைப்பதற்கும் நிபுணர்கள் 24 மணி நேரமும் ஆதரவை வழங்குவது ஆகியன சமமான அளவில் ஒரே மட்டத்தில் முக்கியமானதாக பேணப்படுகின்றது.” என்கிறார்.

3W Consulting நிறுவன நிர்வாக பணிப்பாளர், ஸ்டீபன் மொராயஸ் கருத்து வெளியிடுகையில், “SEC, சந்தை மற்றும் ஒழுங்குபடுத்தல் இயக்கவியல் ஆகியவற்றால் இயக்கப்படும் கூட்டாண்மை ஆளுகைக்கான தமது உறுதிப்பாட்டை சபைகள் முன்னெடுத்துள்ளதால், இலங்கையிலுள்ள நிறுவனங்கள் இன்று இணக்கத்திற்கு (Compliance) விரைவாக முன்னுரிமை அளித்துள்ளன. தொற்றுநோய் பரவல் ஆரம்பித்ததில் இருந்து, “எங்கிருந்தும் வேலை செய்தல்” மற்றும் ஹைப்ரிட் மாதிரிகள் மூலம் செயல்படுவது எளிதாக்கும் சவாலை கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்கொண்டன. இது இணக்கமின்மை காரணமான அபாயத்தை மேலும் கூட்டியது. நிதி, மனித வளம், சூழல் செயல்பாடுகளை உள்ளடக்கிய அவற்றின் செயல்பாட்டு மாதிரியில் உள்ள மதிப்புச் சங்கிலியைச் சுற்றி நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தல் தரநிலைகளுக்கு இணங்க வேண்டும். எமது இணக்கத் தீர்வான ‘Comfie’ மூலம் ஒரு சபையானது, பல்வேறு வணிகச் செயல்பாடுகள் மற்றும் வெவ்வேறு வேலைப் பொறுப்புகள் போன்றவற்றை முழுமையாக கண்காணிக்க முடியும். இதில், ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்லைன் இணக்க முகாமைத்துவ கருவியானது இணைக்கப்பட்டுள்ளதுடன், இது உலகளாவிய தரநிலைகளுக்கு மாறும் நாடு, தொழில்துறை மற்றும் கார்ப்பரேட் சட்ட அறிவு முகாமைத்துவ தொகுதி ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. Compfie இல் உள்ள இந்த Legal KMS ஆனது, குறிப்பிட்ட துறைகள், தொழில்துறை இணக்கத் தரநிலைகள், தேவைகள் ஆகியவற்றையும் வழங்குகிறது.” என்றார்.

இந்த அமர்வில் கலந்துரையாடப்பட்ட ஒரு சில முக்கிய அம்சங்கள்; டிஜிட்டல் மயமாக்கல் எவ்வாறு வணிகங்களுக்கு உதவும்…

  • பல்வேறு இடங்கள் / பல ஒழுங்குபடுத்தல் இணக்கங்களுக்கான இணக்கப்பாடுகளைக் கண்காணிப்பதில் செயற்பாட்டுச் சவால்களை தீர்த்தல் – நிறுவனப் பதிவாளர் திணைக்களம் (DRC), இறைவரித் திணைக்களம் (IRD), இலங்கை மத்திய வங்கி (CBSL), இலங்கைப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC), நிதிப் புலனாய்வுப் பிரிவு (FIU), இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (IRCSL), இலங்கை சுங்கம் (SLC)
  • இலங்கை கணக்காய்வுத் தரநிலைகளுக்கு (SLAuS 250) அமைய, பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்களுக்கும் நிர்வாக பொறுப்புக்கும் இணங்குதல்
  • நிதி பரிவர்த்தனை அறிக்கைச் சட்டம் (FTRA), உரித்தளிக்கப்பட்ட நிதியல்லாத வணிகம் (DNFB), வாடிக்கையாளர் நிதி நிலைமை (CDD) விதிமுறைகள் மூலம் வாடிக்கையாளர்களை கையாளும் போது பணமோசடி மற்றும் நிதி அபாயங்களைத் தடுத்தல் மற்றும் கண்டறிதல்
  • உரிய வழிகாட்டல்கள், தீர்மானங்கள், பாதைகள், அறிவிப்புகள், கட்டுப்பாட்டாளர்களின் சுற்றறிக்கைகளுடன் (CBSL, IRD, DRC, IRCSL, FIU, SEC, போன்றவை) பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த செயலூக்கமான விழிப்பூட்டல் ஆகிய விடயங்கள் மூலம் நிறுவனத்தை இற்றைப்படுத்திய நிலையில் வைத்திருத்தல். எந்தவொரு முக்கியமான நிதி இணங்குதல்களையும் தவறவிடுவதன் காரணமான அபாயங்களை தவிர்த்தல் – பண மோசடி எதிர்ப்பு (AML), இணக்கப்பாட்டு கடமைகள், வாடிக்கையாளரின் நிதி நிலைமை, ஐக்கிய நாடுகளின் தடைகள், Outsourcing விதிமுறைகள், Basel III மற்றும் இலங்கை நிதி அறிக்கை தரநிலைகள் (SLFRS)

3W பற்றி

3W Consulting ஆனது, இலங்கையின் முன்னணி நிறுவன புதுப்பித்தல், உருமாற்றல் ஆலோசனை மற்றும் பயிற்சி வணிகமாகும். இது உயர்மட்ட நிறுவனங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற ஒரு நிறுவனமாகும். எமது ஆலோசனை சார்ந்த அனுபவமானது விருந்தோம்பல், வங்கி மற்றும் நிதி, FMCG, சில்லறை விற்பனை, ஆடை, காப்புறுதி, உற்பத்திகள், முதலீடு, அரச துறைகள் போன்ற 50 தொழில்களில் விஸ்தரிப்பைக் கொண்டுள்ளதுடன், 1000 இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் பணிபுரிந்துள்ளது. நிரூபிக்கப்பட்ட சாதனைப் பதிவு மற்றும் ஆலோசனை தொடர்பான நிறைந்த அனுபவம் ஆகியவற்றுடன், நிறுவனமானது மாலைதீவு, இந்தியா, பங்களாதேஷ், பஹ்ரைன், கம்போடியா, வியட்நாம், ஹொங்கொங், மத்திய கிழக்கு, ஆபிரிக்காவில் சர்வதேச திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

அபராஜித பற்றி

2000 ஆம் ஆண்டில் கூட்டிணைக்கப்பட்ட Aparajitha Corporate Services Private Limited ஆனது, இன்று ஒழுங்குபடுத்தல் இணக்கத்திற்கான இந்தியாவின் நம்பர் 01 நிறுவனமாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வியாபித்துள்ளதன் மூலம், தொழிலாளர் சட்டம் மற்றும் தொழில்துறை சட்ட இணக்கங்களில் உள்ள சிக்கல்களைக் கையாள்வதில் இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்ட நிபுணராக அபராஜித உள்ளது. எமது 1,500 இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களாக, தொடக்க நிறுவனங்கள் முதல் தொழில்துறை ஜாம்பவான்கள், பன்னாட்டு நிறுவனங்கள், 100 இற்கும் அதிக தொழில்துறைகளில் உள்ள புகழ்பெற்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளடங்குகின்றன. அபராஜிதவின் செலவு குறைந்த தீர்வுகள், நிறுவனங்களின் தற்போதைய மற்றும் எதிர்கால இணக்கத் தேவைகள், எமது 1,300 இற்கும் மேற்பட்ட இணக்க நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. இங்கு செயற்பாடுகள் மற்றும் சேவைகள் அபராஜிதவின் முக்கிய மதிப்புகள் மற்றும் ஒருமைப்பாடு, நம்பிக்கை, தொடர்ச்சியான கற்றல் மற்றும் கூட்டாண்மை முன்னேற்றம் ஆகியவற்றின் வணிக நெறிமுறைகளிலிருந்து உருவாகும் தொழில்முறை மற்றும் கொள்கைகளால் வழிநடத்தப்படுகின்றன. பரஸ்பர வளர்ச்சி மற்றும் நன்மைக்காக நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுடன் கூட்டுசேர்வதன் மூலம் நீடித்த நீண்ட கால உறவுகளை உருவாக்குவதே நிறுவனத்தின் குறிக்கோளாகக் காணப்படுகின்றது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *