Latest News Tamil

புதிய Komatsu PC210-10M0 அகழ்வு இயந்திரத்தை இலங்கையில் அறிமுகம் செய்யும் DIMO

இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, அண்மையில் இலங்கையில் புதிய Komatsu PC210-10M0 Excavator அகழ்வு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியது. கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற கொமட்சு வாடிக்கையாளர் ஒன்றுகூடல் நிகழ்வில் வைத்து, கலாநிதி கித்சிறி மஞ்சநாயக்கவிடம் முதலாவது PC210-10M0 அகழ்வு இயந்திரம் கையளிக்கப்பட்டு அது வைபவ ரீதியாக அறிமுகமானது.

இந்த சமீபத்திய அறிமுகத்தின் மூலம், பல புதிய அம்சங்களுடன் எரிபொருள் திறன் கொண்ட அகழ்வு இயந்திரத்திற்கான அதிகரித்து வரும் வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்வதை DIMO நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்புதிய இயந்திரம் ‘200 இல் 300 இன் வேலை’ எனும் எண்ணக்கருவின் கீழ் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த Komatsu PC210-10M0 அகழ்வு இயந்திரமானது 300-class (30 தொன்) இயந்திரமாக செயல்படும் திறனைக் கொண்டுள்ள அதே நேரத்தில் 40% அதிகமான உற்பத்தித்திறனை வழங்குகிறது. PC200-8 மாதிரியுடன் ஒப்பிடுகையில், இது 200-class (20 தொன்) இல் இயங்குகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் அதிக உற்பத்திக்கான வாய்ப்பை வழங்குகிறது. ஒப்பிட முடியாத ஜப்பானிய தொழில்நுட்பத்தின் உதவியுடன், இந்த இயந்திரத்திற்கு சிறந்த நீடித்த உழைப்புடனான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதுடன், இது இலங்கையின் எந்தவொரு நிலைமைக்கும் அல்லது வேலைத் தளத்திற்கும் ஏற்றதாக இது காணப்படுகின்றது. அதே நேரத்தில் அதன் சூழலுக்கு உகந்த 3 அடுக்கு என்ஜின் (tier 3 engine) காபன் வெளியேற்றத்தையும் குறைக்கிறது.

DIMO வின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சமிந்த ரணவன இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “நாம் இலங்கையில் Komatsu உடனான வலுவான உறவின் 50 ஆண்டுகளை சமீபத்தில் கொண்டாடினோம். அத்துடன் கட்டுமான மற்றும் சுரங்கத் துறைக்கு உயர்தர தயாரிப்புகளை வழங்க DIMO வின் தொடர்ச்சியான முயற்சிகளில் Komatsu உடன் கூட்டுச் சேர்ந்திருப்பதில் நாம் பெருமிதமடைகிறோம். அனைத்து புதிய Komatsu PC210-10M0 அகழ்வு இயந்திரங்களும் DIMO இன் விற்பனை வரிசையில் உள்ள மற்றுமொரு வருகையாகும். இது உள்ளூர் தொழில்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடனும் இலங்கைக்கு உலகளாவிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான எமது தொடர்ச்சியான முயற்சிகளை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

DIMO வின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே கருத்துத் தெரிவிக்கையில், “எமது அதிநவீன பொறியியல் தீர்வுகளைக் கொண்டு நாட்டின் உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதில் DIMO எப்போதும் முன்னணியில் உள்ளது. இந்த சமீபத்திய பொறியியல் கண்டுபிடிப்புகளின் அறிமுகத்தின் மூலம், நாம் சேவை வழங்குகின்ற சமூகங்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளைத் தூண்டுகின்ற எமது பயணத்திற்கான பாதை மேலும் விசாலமடைகிறது.

சமீபத்திய Komatsu அகழ்வு இயந்திரத்தில் 1.20m3 அளவிலான மிகப் பெரிய வாளிக் கொள்ளவுடனான தோண்டும் பகுதி பொருத்தப்பட்டுள்ளது. இது இதன் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். Komatsu PC210-10M0 ஆனது 165 குதிரைத்திறனை கொண்டுள்ளதுடன், அதிகரித்த இயந்திர நிலைப்புத்தன்மை, சக்திவாய்ந்த தோண்டும் செயல்பாடுகள் மற்றும் மேம்பட்ட பயண செயல்திறன் ஆகியவற்றுடன் வருகிறது. குறைந்த எரிபொருள் நுகர்வு, எரிபொருளில் சுமார் 25% சேமிப்பு, மேம்பட்ட முகாமைத்துவ அமைப்பு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட ஹைட்ரோலிக் பம்பி தொகுதி ஆகியன, உள்ளூர் தொழில்துறைக்கு Komatsu PC210-10M0 கொண்டுள்ள, சிறந்த பெறுமதியை சேர்க்கும் காரணிகளில் சிலவாகும்.

இது குறைந்த பராமரிப்பு நேரத்தையும், முக்கிய கூறுகளின் செயற்பாடற்ற நிலையைத் தடுப்பதற்கான கண்டறிதல் தொகுதி மற்றும் திரையில் பராமரிப்புத் தகவலைக் காண்பிக்கும் அம்சத்தையும் கொண்டுள்ளது. இது பல மொழிகளுடனான உயர் தெளிவுத்திறன் கொண்ட ஒரு பெரிய LCD திரையையும், உபகரண முகாமைத்துவ கண்காணிப்பு தொகுதியையும், பின்புறம் பார்க்கும் கண்காணிப்பு தொகுதி போன்றவற்றையும் கொண்டுள்ளது.

Komatsu PC210-10M0 ஆனது, பாதுகாப்பு மற்றும் சொகுசை வழங்குகிறது. உள்ளமைக்கப்பட்ட நுண்ணறிவு; மிக முக்கியமாக ஸ்மார்ட் மற்றும் எளிதான பராமரிப்பு, 8 தசாப்த DIMO நம்பிக்கை மற்றும் DIMO வின் சிறந்த விற்பனைக்குப் பின்னரான சேவைத் திறன், 24-மணிநேர தொழில்நுட்ப உதவி ஆகியவற்றால் மேலும் வலுப்படுத்தப்படுகிறது.

END

Photo Captions

முதலாவது Komatsu PC210-10M0 Excavator யினை கையளிக்கும் நிகழ்வில், (இ-வ) DIMO வின்  திசர துமிந்த, DIMO விற்பனை நிறைவேற்றதிகாரி (கட்டுமானம் மற்றும் சுரங்க இயந்திரங்கள் விற்பனை), தமித்த விக்ரமசிங்க, DIMO பிரதிப் பொது முகாமையாளர் (கட்டுமானம் மற்றும் சுரங்க இயந்திர விற்பனை), சமிந்த ரணவன, DIMO நிறைவேற்றுப் பணிப்பாளர், கஹனாத் பண்டிதகே, DIMO குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, கலாநிதி கித்சிறி மஞ்சநாயக்க, ரஞ்சித் பண்டிதகே, DIMO தலைவர், முகாமைத்துவப் பணிப்பாளர், சிந்தக பஸ்நாயக்க, தயாரிப்பு முகாமையாளர் (கட்டுமானம் மற்றும் சுரங்க இயந்திர விற்பனை)
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Komatsu PC210-10M0 Excavator

DIMO பற்றி

Diesel & Motor Engineering PLC (DIMO) ஆனது, பல்வேறு தொடர்புகளைக் கொண்ட துறைகளில் ஈடுபட்டுள்ளதுடன், பல மதிப்புமிக்க தரக்குறியீடுகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. Mercedes-Benz, Siemens, Jeep, KSB, TATA Motors, MTU, Komatsu, Michelin, Zeiss, MRF, Bomag, Claas, TK Elevator, Mahindra Tractors, Stanley போன்ற பல தரக்குறியீடுகள் இதில் உள்ளடங்குகின்றன.  DIMO, வாகனங்களுக்கு பெயர் பெற்ற ஒரு நிறுவனமாக இருந்து, இன்று பல துறைகளில் அது தனது கால்தடத்தை பதித்துள்ளது. மருத்துவப் பொறியியல், கட்டட முகாமைத்துவ தொகுதிகள் மற்றும் சேவைகள், மின் உற்பத்தி மற்றும் விநியோகம், பொருட்களை கையாளுதல், சேமிப்பு மற்றும் கிடங்குகளுக்கான தீர்வுகள், வலுவான கருவிகள், விவசாய உபகரணங்கள், மொத்தமான மின் விளக்கு தீர்வுகள், மின்சார தொகுதிகள் மற்றும் மின்பிறப்பாக்கிகள், குளிர்பதனிடல், கப்பல் பழுதுபார்த்தல் மற்றும் சாரதி பயிற்சி நெறிகள் போன்றன இதில் உள்ளடங்குகின்றன. இதில் ஒரு சில துறைகளில் DIMO கடந்த சில தசாப்தங்களில் நுழைந்துள்ளது. உரம் மற்றும் விவசாயம் தொடர்பான சந்தையிலும் DIMO பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. DIMO வெளிநாட்டு சந்தைகளில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. மாலைதீவு மற்றும் மியன்மாரில் தங்கள் வாகனங்கள் மற்றும் ஆட்டோமொபைல் சேவைப் பிரிவுகளிலான கூட்டாண்மை மூலம் கடல் சார்ந்த மற்றும் பொதுவான பொறியியல் சேவைகளை விரிவுபடுத்தியதன் மூலம் மாலைதீவு மற்றும் மியன்மாரில் அது தனது வெளிநாட்டு தடத்தை பதித்துள்ளது. தற்போது கிழக்கு ஆபிரிக்காவிலான புதிய சந்தைகளுடன்  வெளிநாட்டு செயல்பாடுகளை ஒருங்கிணைக்க DIMO செயற்பட்டு வருகிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *