Latest News Tamil

சிறந்த பால், சிறந்த விலையில்; குறைந்த விலையில் வழங்கவும் தயார்; பெல்வத்தவின் வாக்குறுதி

நாட்டின் பெறுமதியான அந்நியச் செலாவணியைச் சேமித்து பல்வேறு வகையான பால் உற்பத்திகளை உற்பத்தி செய்யும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமங்களில் ஒன்றான Pelwatte Dairy, அண்மையில் சந்தையில் ஏற்பட்ட விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் அதன் தொழிற்சாலைகளில் இருந்து எவ்வித தடங்கலுமின்றி பால் விநியோகத்தை மேற்கொள்வதை உறுதி செய்துள்ளது.

Pelwatte தயாரிப்பு வரிசையில், Pelwatte முழு ஆடைப் பால்மா, Pelwatte வெண்ணெய், Pelwatte யோகட், Pelwatte நெய் ஆகியன பிரபலமானவை.

Pelwatte பால் விநியோகச் சங்கிலியானது மிக விரிவானதாகும். Pelwatte அதன் தொழிற்சாலைகளுக்கு மிக உயர் தரமான புத்தம் புதிய பாலை மாத்திரம் பயன்படுத்துவதால், அவை மலிவானதாக அமைவதில்லை. இத்தொழில்துறைக்கு அமைய நன்கு அறியப்பட்ட விடயம் யாதெனில் , “சிறந்த பால் பொருட்களை சிறந்த மூலப் பொருளான பாலில் இருந்து மட்டுமே தயாரிக்க முடியும்.” அந்த வகையில் பெல்வத்தவும் அதன் பால் உற்பத்திச் சங்கிலியில் மிகச் சிறந்ததையே தெரிவு செய்து வழங்குகின்றது.

கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் தினசரி பெறும் பாலானது, பண்ணை சங்கங்களால் திரட்டப்பட்டு, அவை பாலின் புத்துணர்ச்சி மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வெப்பநிலையில் பேணப்படும் வகையிலான திறன் கொண்ட, பெல்வத்த வாடகை பால் பவுசர்களின் வலையமைப்பினால் சேகரிக்கப்பட்டு, அவை PDIL குளிர்விக்கும் மையங்களுக்கு வழங்கப்படுகின்றன. குறிப்பாக, சேகரிப்பு மையங்களிலிருந்து பெறப்படும் பாலானது,  குளிர்வித்தல்-விநியோகச் சங்கிலி தொழில்நுட்பம் மற்றும் வெப்ப பாதுகாப்பு தொகுதிகளுக்கு கிடைத்தவுடன், அது நான்கு பாகை செல்சியஸிற்கு உடனடியாக குளிர்விக்கின்றன. பால் சேகரிப்பு மையங்களில் இருந்து, விசேட பாதுகாப்பு அம்சங்களுடனான பால் பவுசர்கள், குளிரூட்டப்பட்ட பாலை புத்தளவில் உள்ள தொழிற்சாலைக்கு கொண்டு செல்கின்றன. அதனைத் தொடர்ந்து குறித்த குளிர்ந்த பால், தொழிற்சாலையின் சிலிண்டர் தொட்டிக்குள் சேகரிக்கப்படுகிறது. அதன் பிறகு, பால் பவுடரை உருவாக்குவதை உறுதி செய்யும் அளவிலான கொழுப்பு மற்றும் திண்ம கொழுப்பு அற்ற (Solid-Not-Fat)SNF மட்டத்தை பேணி அது ‘தரப்படுத்தப்படும்’. தொட்டியிலுள்ள பாலை தரப்படுத்திய பின்னர், விசிறி உலர்த்தும் ஆலையானது பாலிலுள்ள நீர்த் தன்மையை ஆவியாக்கி, பால் மாவை பிரித்தெடுக்கிறது. இந்த உற்பத்திச் சங்கிலி முழுவதும், ISO 22000:2018 தரத்திற்கு அமைவான விடயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு, பெல்வத்தவினால் நூறு வீத தர உத்தரவாதம் பேணப்பட்டு கடைப்பிடிக்கப்படுகிறது.

Pelwatte உற்பத்திப் பொருட்களுக்கான மூலப்பொருளான பால் விநியோகச் சங்கிலி, இலங்கையில் உள்ள வலுவான 6,500  பால் விவசாயிகளை உள்ளடக்கியுள்ளது. அவர்களின் வாழ்வாதாரம் Pelwatte நிறுவனத்தை நேரடியாக நம்பியுள்ளது. ஊவா, கிழக்கு, மத்திய, வடமேல், மாகாணங்களில் 50 பால் சேகரிப்பு மையங்களின் வலையமைப்பை நிறுவனம் கொண்டுள்ளது. இதன் மூலம் மாதாந்தம் 4.5 மில்லியன் லீற்றர் புத்தம் புதிய பால் கிடைக்கப் பெறுகின்றது. கொவிட் நெருக்கடிக்கு மத்தியிலும் நிறுவனம் பாலை விநியோகிக்கும் விவசாயிகளுக்கு ரூ. 3.18 பில்லியனை செலுத்தி வந்துள்ளது (2019/2020 உடன் ஒப்பிடும்போது இது 2020/21இல் 70% வருடாந்த அதிகரிப்பாகும்). மேலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையிலான பல்வேறு பால் பண்ணை விவசாயிகள் நல முயற்சிகளை இலவசமாக முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம், கடந்த நான்கு வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் பெல்வத்தவிற்கு திரும்பும் அதே பால் விவசாயிகள் தளம்  நடைமுறைப்படுத்துகிறது.

Pelwatte வர்த்தக நாமம் தொடர்பில் அதிகரித்து வரும் கேள்வியை பூர்த்தி செய்யும் வகையில், அதன் பால் மற்றும் பால் உற்பத்திகளை மிக உயர்ந்த தரத்தில் வழங்குவதை உறுதி செய்வதற்கும் அதன் பால் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க முதலீடுகளை நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

Pelwatte அதன் ஒட்டுமொத்த பால் சங்கிலி மற்றும் உற்பத்தி செயல்முறைகளில் நூறு வீதத்தை விட குறையாத தர உத்தரவாதத்தை உறுதி செய்வதால், இந்த முக்கியமான நடைமுறைகளை பேணுவது தொடர்பான செயல்முறைகளில் செலவுகளை குறைப்பது சாத்தியமாகாத விடயமாகும் என்பதுடன், அது ஒரு புத்திசாலித்தனமற்ற விடயம் என்பதும் தெளிவாகிறது.  பால் சங்கிலியில் குறுக்கு வழிகளை நாடாமல், அதற்குப் பதிலாக தரமான உறுதியான படிமுறைகளை எவ்வித தொய்வும் இன்றி பின்பற்றுவதன் விளைவாக, துர் வாசனைகள், நிற மாற்றம் கொண்ட, சுவையற்ற, அழுக்குகள், படிவுகள் கொண்ட, அதிக பக்டீரியா கொண்ட நுகர்வுக்குத் தகுதியற்ற பால் உற்பத்திகளை வழங்குவதை Pelwatte தவிர்க்கிறது. இவை அனைத்தும் பாலின் வர்த்தக நாமத்தின் பெயரை இழக்கச் செய்யும் பொதுவான காரணங்களாகும். எனவே, ஒட்டுமொத்த தேசிய பால் விநியோகச் சங்கிலிக்கான செலவுகள் (உற்பத்திச் செலவு) அதிகரிக்கும் போது, ​​பெல்வத்த அதன் பால் உற்பத்திச் சங்கிலியை ஆபத்தில் ஆழ்த்தும் வகையில், தற்போதுள்ள அதன் பால் உற்பத்தி வகைகளின் விலை உயர்வும் அமுலுக்கு வருவது தவிர்க்க முடியாத ஒன்று என்பது வெளிப்படையானது. அத்துடன் இலங்கையின் பால் நுகர்வோரின் நல்வாழ்வு, உயர் தரத்திற்கான அதன் அர்ப்பணிப்பு காரணமாக, பெல்வத்தை ஒருபோதும் குறுக்குவழிகளை நாடமாட்டாது.

ஒரு கிலோகிராம் பால்மாவைத் தயாரிப்பதற்கான செயன்முறைக்கு, சராசரியாக சுமார் 8.4 லீற்றர் பால் அவசியமாகும். இது பால்மாவை தயாரிக்க உலர்த்தி பிரித்தெடுக்கும் செயன்முறையில் அதிகளவான பால் அவசியமென காட்டுகிறது. எனவே, பால் உற்பத்திச் சங்கிலியில் செலவு அதிகரிப்பை பாதிக்கும் முக்கிய காரணிகளை முன்னிலைப்படுத்துவதே பொருத்தமானதாகும்.

இதில் முக்கியமானது, பெறப்படும் பாலின் பண்ணை விலை. இது கணிசமான அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய சராசரி விலை லீற்றருக்கு ரூ. 85 – ரூ. 105 வரை காணப்படுவதுடன், இது பிராந்தியத்தைப் பொறுத்து மாறுபடுகின்றது. மூலப்பொருளாக பெறப்படும் பால் உற்பத்திக்கான அதிக செலவுக்கான மற்றொரு காரணம், இலங்கை விவசாயிகள் கைமுறை ரீதியான அல்லது அரைத் தானியங்கி விவசாய முறைகளைப் பயன்படுத்துவதாகும். மாடுகளில் பால் கறப்பது தொடர்பிலான விவசாயிகளுக்கான விழிப்புணர்வு அமர்வுகள் மூலம் அவற்றை மாற்ற பெல்வத்த உதவுகிறது. இந்த செலவு அதிகரிப்பிற்கான காரணத்தை, நிறுவனத்தின் பெறுமதிமிக்க விவசாயிகளின் மீது போடுவதற்காக இந்த உண்மையை அது எடுத்துரைக்கவில்லை என்பதை தெளிவாக வலியுறுத்த வேண்டும்! பெல்வத்த எப்போதும் அவர்களின் நலனில் அக்கறையுடனிருக்கும்.

பால் உற்பத்திச் சங்கிலியின் செலவுகள் அதிகரிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஏனைய முக்கிய காரணிகளாக, மின்சாரம்/சக்தி வழங்கல்கள், பொதியிடல், போக்குவரத்து, தொழிலாளர் செலவு; இவை அனைத்தும் செலவுகளை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கிறது. உதாரணமாக, பொதியிடலுக்கான மூலப்பொருட்களுக்கான செலவுகள் மாத்திரம் 40% ஆக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட விலைக் கட்டுப்பாடுகள் (MRP என அழைக்கப்படும் உச்சபட்ச சில்லறை விலை) காரணமாக, பெல்வத்த நுகர்வோருக்கு அந்த சுமையை வழங்காமல், அதே தயாரிப்பு விலைகளைத் தொடர்ந்து வந்தது. அதே நேரத்தில் அதன் உற்பத்தி செலவுகள் அதிகரித்தன. அத்துடன் பெல்வத்த தொடர்ந்து நஷ்டத்தை சந்திக்கத் தொடங்கியது. அதே விற்பனை விலைகளை தொடர்ந்தமை காரணமாக, ஏப்ரல் 28, 2020 முதல் அதன் இருப்பை அச்சுறுத்தும் வகையில் அது நஷ்டத்தை சந்திக்கத் ஆரம்பித்தது. இறுதியாக, Pelwatte அதன் உற்பத்தி செலவுகளை ஈடு செய்யும் வகையில், தயக்கத்துடன் அதன் அன்பான வாடிக்கையாளர்களால் சமாளிக்கக்கூடிய வகையில், நியாயமான மற்றும் கட்டுப்படியாகும் எல்லைக்குள் தனது உற்பத்திகளின் விலைகளை (முடிந்தவரை குறைந்த மட்டங்களில்) அதிகரித்தது.. இச்செலவுகள் குறைவடையும் போது, ​​Pelwatte நிறுவனம் அதன் நன்கு அறியப்பட்ட உயர் தரத்தில் எவ்வித குறையையும் ஏற்படுத்தாமல் உடனடியாக அதன் விற்பனை விலைகளை குறைக்கும்…. இது Pelwatte வழங்கும் வாக்குறுதியாகும்.

Pelwatte Dairy பற்றி:

பால் பதப்படுத்துதல், கால்நடை தீவனம் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற Pelwatte Dairy நிறுவனம், 2006இல் நிறுவப்பட்டது. இது வெளிநாடுகளில் இருந்து பால் பொருட்கள் இறக்குமதிக்கு செலவிடும் வெளிநாட்டு நாணயத்தை வெற்றிகரமாக சேமிக்கும் இலங்கையின் வர்த்தக நாமங்களில் ஒன்றாகும், பால் உற்பத்தித் தொழிலுக்கு அவசியமான தரமான மூலப்பொருட்களின் தொடர்ச்சியான மற்றும் நம்பகமான நடத்தையை பேணும் நோக்கில், இலங்கையில் கறவை மாடு வளர்ப்பை மேம்படுத்துவதனை நிறுவனம் இலட்சியமாக கொண்டுள்ளது. ISO 22000:2018 தரச்சான்றிதழ் பெற்ற கம்பனியான Pelwatte Dairy, இலங்கையின் பால் உற்பத்தித் துறையில் தற்போது இயங்கும் அதி நவீன (டென்மார்க் தொழில்நுட்பத்தை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்ட) பால் தொழிற்சாலைகளில் ஒன்றை  சொந்தமாகக் கொண்டுள்ளது.

#ENDS#

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *