Latest News Tamil

CA ஸ்ரீலங்காவின் 42ஆவது தேசிய மாநாடு மற்றும் 20ஆவது CAPA சர்வதேச மாநாடுகளின் Gold அனுசரணையாளராக DIMO

இலங்கையின் முன்னணி பல்வகை கூட்டு நிறுவனமான DIMO, CA ஸ்ரீலங்காவின் 42ஆவது தேசிய மாநாடு மற்றும் 2021 ஒக்டோபர் 06 முதல் 08 ஆம் திகதி வரை இடம்பெற்ற 20ஆவது CAPA சர்வதேச மாநாட்டின் தங்க அனுசரணையாளர் எனும் பெருமையுடன் அதில் பங்கெடுத்திருந்தது. CA ஸ்ரீலங்காவிற்கு இவ்வருடமானது ஒரு விசேட அம்சம் கொண்ட வருடமாக அமைந்தது. காரணம், அது பட்டய கணக்காளர்களின் 42ஆவது தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்திருந்ததுடன், ஆசிய மற்றும் பசுபிக் கணக்காளர்கள் கூட்டமைப்பின் (CAPA) 20ஆவது CAPA சர்வதேச மாநாட்டையும் நடாத்தியிருந்தது. உலகெங்கிலும் உள்ள உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பங்கேற்பாளர்களை ஈர்க்கும் வகையில் இம்மாநாடுகள் பாரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த அனுசரணை வழங்கல் தொடர்பில், DIMO குழும பிரதான நிறைவேற்று அதிகாரி கஹநாத் பண்டிதகே தெரிவிக்கையில், “கடந்த எட்டு தசாப்தங்களாக இலங்கை மற்றும் அதனை கடந்து, பல்வேறு சமூகங்கள் மற்றும் வணிகத் துறைகளுடன் ஒன்றிணைந்து, புதிய பாதைகளில் DIMO பிரகாசித்து வருகின்றது. ஒரு பொறுப்பு மிக்க பன்முகப்படுத்தப்பட்ட பெரு நிறுவனம் எனும் வகையில் DIMO: இலங்கையின் பொருளாதார, சமூக வளர்ச்சி அத்துடன் மிக முக்கியமாக நிலைபேறான வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கான வாய்ப்புகளை நோக்கி பயணித்து வருகிறது. எமது நிறுவனத்தின் நோக்கத்திற்கு அமைய, CA ஸ்ரீலங்காவின் 42ஆவது தேசிய மாநாடு மற்றும் 20 ஆவது CAPA சர்வதேச மாநாட்டிற்கான தங்க அனுசரணையாளராக நாம் இணைவதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த கூட்டாண்மை மூலம் இளம் கணக்காளர்களின் அபிலாஷைகளை நனவாக்குவதற்கு எம்மால் உதவ முடியும் என்பதை நம்புவதுடன், இலங்கையின் கணக்கியல் தொழில்துறையானது, ஊக்கியாக செயற்படுவதில் அது கொண்டுள்ள பாத்திரத்தை தொடர்ந்தும் வகிக்க உதவும் என்றும் நாம் நம்புகிறோம்.

இலங்கையில் மிகவும் கௌவரத்திற்குரிய மற்றும் போற்றப்படும் நிறுவனங்களில் ஒன்றாக DIMO உருவெடுத்துள்ளமையானது, அது செயல்படும் துறைகளில் அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. ஒரு தனித்துவமான மற்றும் மறக்கமுடியாத வாடிக்கையாளர் அனுபவமானது, ஒரு தனித்துவமான நிறுவன கலாச்சாரத்தினை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிப்பதுடன், அது அவ்வாறே நீடிக்கவும் செய்கிறது என்று DIMO நம்புகிறது. DIMO வின் அனைத்து பங்குதாரர்களின் ‘கனவுகளுக்கும் அபிலாஷைகளுக்கும் ஊக்கமளித்தல்’ எனும் அந்நிறுவனத்தின் நோக்கம், இந்த நம்பிக்கையை உறுதியாக காண்பிக்கிறது.

CA ஸ்ரீலங்காவால் ஆண்டு தோறும் ஏற்பாடு செய்யப்படும் இத்தேசிய மாநாடு, அதன் வரலாறு 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்வதை காண்பிக்கிறது. இது இலங்கையின் மிகப்பெரிய வணிக உச்சிமாநாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது சிந்தனையைத் தூண்டுகின்றதும், நிதி தொடர்பான விடயங்கள் உள்ளிட்ட, பொருளாதார மற்றும் வணிகப் பிரச்சினைகள் பற்றிய பரந்த விடயங்களை வெளிக் கொண்டுவருகிறது. இந்நிகழ்வானது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துறைசார் வல்லுநர்கள் மற்றும் வணிக தலைவர்களை ஒன்றிணைத்து, அவர்கள் தங்கள் துறைசார் அறிவு மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தியது. அத்துடன், சிந்தனையைத் தூண்டுகின்ற, துறைசார் விடயங்களின் அடிப்படையிலான தொழில்நுட்ப அமர்வுகளும் இடம்பெற்றிருந்தன. இந்நிகழ்வுகள் யாவும் கொவிட்-19 தொற்று தொடர்பான அனைத்து சுகாதார விதிமுறைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிறைவு

Photo Caption:

DIMO நிறுவன Corporate Communications பொது முகாமையாளர் யொஹான் திலகரத்ன, இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்ட போது…

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *