Latest News Tamil

வயது வந்தோருக்கான பற்பசை குழந்தைகளுக்கு சிறந்த தெரிவா?

தங்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொரு பெற்றோரும், அவர்களது தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், ஆடைகள், உணவுகள், மருந்துகள் என்று வரும்போது அதில் சிறந்த தயாரிப்புகளை வழங்கவே விரும்புவார்கள். காரணம் அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் அவர்களது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டமான குழந்தைப் பருவத்தில், மிக ஆரோக்கியமாகவும் உடல் நலனுடனும் இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள்.

பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் சிறுவர்கள் அல்லது குழந்தைகளின் வாய்ச் சுகாதாரம் பற்றி மிக அவதானத்துடன் இருக்கின்றனர். பெரும்பாலான வேளைகளில் சிறுவர்கள் பல் துலக்க ஆர்வம் காட்டுவதில்லை என்பதால், அவர்களது பற்களை துலக்குவது பெற்றோர்களுக்கு பெரும்பாலும் கடினமான விடயமாக அமைந்து விடுகின்றது. ஆயினும் சிறு வயதிலிருந்தே ஆரோக்கியமான பற்களை கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை அறிந்த பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை பல் துலக்க வைப்பதுடன், அவர்களிடம் பல் துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஆயினும், குழந்தைகள் பல் துலக்க தயங்கச் செய்யும் பல காரணிகள் காணப்படுகின்றன. பல் துலக்கும் செயற்பாடு குழந்தைகளிடையே ஆர்வமில்லாத செயலாக காணப்படுவதால், இயற்கையாகவே அவர்கள் அதை செய்ய தயங்குகிறார்கள், அது மாத்திரமன்றி, வயது வந்தவர்களுக்கான பற்பசையின் செறிவான கலவை மற்றும் சுவை, அதன் கரடுமுரடான தன்மை போன்றன குழந்தைகள் பெரும்பாலும் பல் துலக்க தயங்குவதற்கான காரணங்களாக அமைகின்றன.

குழந்தைகளின் பல் மிளிரியானது வயது வந்தவர்களை விட மென்மையான படையாக இருப்பதால், மிருதுவான பற்பசையைப் பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் பல் மிளிரி மற்றும் வாய் சுகாதாரத்தைப் பாதுகாக்க முடியும்.

வயது வந்தோருக்கான பற்பசை மற்றும் குழந்தைகளின் பற்பசைக்கு இடையே, பிரித்தறியக்கூடிய வேறுபாடுகள் இருப்பதை பெற்றோர்கள் அறிந்து கொள்வது அவசியம். புளோரைட் ஆனது, வயதுவந்தவர்களுக்கான பற்பசை மற்றும் குழந்தைகளுக்கான பற்பசை ஆகிய இரண்டிலும் காணப்படும் ஒரு பொதுவான மூலப்பொருளாகும். பல் மிளரி இழக்கும் கனியுப்புகளை புளோரைட் மீண்டும் உருவாக்க உதவுவதுடன், தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களுக்கு எதிராகவும் போராடுகிறது. ஆயினும் குழந்தைகளுக்கு அதிகளவு பற்பசையை பயன்படுத்துவது அவர்களின் பற்களுக்கு தீங்கை ஏற்படுத்தும். பற்பசையின் பயன்பாடானது, எப்போதும் வயது வந்தவரின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், பற்பசை உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்களின்படி அதனை பயன்படுத்தவும் வேண்டும்.

குழந்தைகளின் பல் மிளிரி வயது வந்தவர்களினதும் பார்க்க மெல்லியது என்பதால், கரடுமுரடான தன்மை கொண்ட பற்பசையினால் பல் துலக்குவது குழந்தைகளின் பல் மிளிரியை சேதப்படுத்தும். குழந்தைகளின் பல் மிளிரி மென்மையாக இருப்பதால், அவர்களுக்காக பற்பசையைத் தேர்ந்தெடுக்கும்போது பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கான பற்பசை இதற்கான ஒரு மாற்று தீர்வாகும். காரணம், அவை சிறுவர்களின் வாய்ச் சுகாதாரத்திற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அது வயது வந்தவர்களுக்கான பற்பசையை விட குறைவான கரடுமுரடு தன்மை, குறிப்பாக சிறுவர்களுக்கு ஏற்ற வகையிலான மென்மையான பற்களுக்கு ஏற்ற ஜெல் கலவையினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

வயது வந்தவர்களுக்கான பற்பசையின் சுவை குழந்தைகளுக்கு பிடிக்காது என்பதில் சந்தேகமில்லை. அவை பெரும்பாலும் வலுவான காரத் தன்மையுடன் வருகிறது. ஆயினும் குழந்தைகளுக்கான பற்பசைகள் பழச் சுவைகள் மற்றும் பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்படுவதுடன், அதன் பொதியானது மிக வேடிக்கையாகவும் கண்ணைக் கவர்வனவாகவும் காணப்படுகின்றன. இந்த பழச் சுவை கொண்ட பற்பசை கொண்டு பல் துலக்குவது, குழந்தைகளுக்கு ஒரு வேடிக்கையான அனுபவமாக இருப்பதுடன், பல் துலக்கும் பழக்கத்தை உருவாக்குவதற்கான பயிற்சியை அது மிகவும் சுவாரஸ்யமானதாக மாற்றுகின்றது.

‘க்ளோகார்ட் சூட்டி’ ஆனது அவ்வாறான அம்சங்கள் கொண்டதாகும். இது மிருதுவான பொருட்களின் உரிய அளவிலான கலவையுடன் குழந்தைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட ஒரு பற்பசையாகும். இப்பற்பசை வயது வந்தவர்களுக்கான பற்பசையை விட கரடு முரடு தன்மை குறைந்தது என்பதுடன், குழந்தைகளின் பல் துலக்குதலை மிருதுவானதாக அமைக்கிறது. க்ளோகார்ட் சூட்டி ஆனது, ஒவ்வொரு குழந்தையும் அனுபவிக்க விரும்பும் வகையிலான, சீனி கலக்கப்படாத வகையில் இரண்டு வகையான பழச் சுவை கொண்டதாக தயாரிக்கப்பட்டுகின்றது. அது மாத்திரமன்றி க்ளோகார்ட் சூட்டி ஆனது, SLSI இன் பரிந்துரைக்கமைய புளோரைட்டுடனான, குழந்தைகளின் பாதுகாப்பான பயன்பாட்டிற்காக மிருதுவானதாக உருவாக்கப்பட்டுள்ளது.

Clogard 1992ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, முழுமையான வாய்ச் சுகாதார பராமரிப்பு தீர்வாக மாறியுள்ளதுடன், முழுக் குடும்பத்தையும் பற் குழிகளிலிருந்து பாதுகாப்பதோடு, ஈறுகளை பாதுகாத்து, துர் வாடைகளை நீக்க உதவும், இலங்கையின் இல்லங்கள் தோறும் காணப்படும் வாய்ச் சுகாதாரம் தொடர்பான ஒரேயொரு தீர்வாக மாறியுள்ளது. இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதலாவது வாய்ச் சுகாதார தரக்குறியீடும் Clogard ஆகும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *