Latest News Tamil

இரண்டாம் காலாண்டிலும் வெற்றிகரமாக பயணத்தை தொடரும் Amana Takaful Insurance

இலங்கையின் முழுமையான காப்புறுதி நிறுவனமான Amana Takaful Insurance (ATI),  அதன் 2021 முதல் காலாண்டின் சாதனை மிகுந்த செயல்திறனானது, இரண்டாவது காலாண்டிலும் வெற்றிகரமாக தக்கவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டுப் பகுதியுடன் ஒப்பிடும் போது இம்முறை 18% விற்பனை வளர்ச்சியை இந் நிறுவனம் அடைந்துள்ளது. இது இலங்கையில் முதல் 10 பொதுக்காப்புறுதி நிறுவனங்களில் ஒன்று, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் அடைந்த  இரண்டாவது அதி கூடிய வளர்ச்சியாகும். 

இது குறித்து ATI இன் நிறுவன மூலோபாயங்களுக்கான தலைவர் ராஜித ஒபேசேகர கருத்து தெரிவிக்கையில், “2021 முதல் காலாண்டில் ATI, முன்னைய வருடத்தை விட  வலுவான 27% குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கோவிட் நிலமையால் ஏற்பட்டுள்ள தேசிய ரீதியிலான வளர்ச்சியையும் மீறி இரண்டாம் காலாண்டில் 18% வளர்ச்சி கண்டுள்ளமையானது முக்கியத்துவம் பெறுகின்றது. உண்மையில், இது நிறுவனத்துக்கு இரட்டை வெற்றியாகும். வீழ்ச்சியடைந்து வரும் ஒரு காலகட்டத்தில் இது தொடர்ந்து வளர்ச்சியடைந்தது மட்டுமல்லாமல், பேரினப் பொருளாதார அழுத்தங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து மக்கள் காப்புறுதிக்கு முன்னுரிமை அளிப்பதில் ஏற்பட்ட வீழ்ச்சி போன்ற புதிய இயல்பு நிலையின் பல அழுத்தங்களை எதிர்கொண்ட போதிலும் நிறுவனம் இந்த பெறுபேற்றை பெற்றுக்கொண்டுள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பும் காப்புறுதி தீர்வுகளே இந்த இரட்டை வெற்றிக்கான காரணமாகும்.” 

சில பிரிவுகள் தொழில்துறை முழுவதும் சரிவைக் கண்டாலும், இரண்டாவது காலாண்டில் ATI  அனைத்து முக்கிய காப்புறுதி பிரிவிலும் வளர்ச்சியைப் பதிவு செய்தது. இரண்டாம் காலாண்டில் அதன் மிகப்பெரிய மோட்டார் அல்லாத காப்புறுதி வளர்ச்சியானது, கடல் சார்ந்த காப்புறுதி பிரிவிலாகும். இரண்டாம் காலாண்டில் இது முன்னைய ஆண்டை விட 74% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. ATI இன் மருத்துவ காப்புறுதியானது, இரண்டாவது பாரிய வளர்ச்சியை பதிவு செய்த பிரிவென்பதுடன், இது 59% அதிகரிப்பை காட்டியிருந்தது. மோட்டார் அல்லாத காப்புறுதி பிரிவானது மொத்தமாக 30% வளர்ச்சியடைந்ததுடன், மோட்டார் காப்புறுதி இரண்டாம் காலாண்டில் முன்னைய ஆண்டை விட 8% அதிகரித்துள்ளதுடன், இவ் இரண்டு பிரிவுகளும் தொழில்துறையையின் சராசரி வளர்ச்சியை விட அதிகமாகும். மேலும், தீ மற்றும் பொறியியல் பிரிவு 29% அதிகரித்துள்ளது.

Amana Takaful Insurance இன் முகாமைத்துவ பணிப்பாளர் ஹசன் காசிம் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் எங்கள் குழுமத்தின் சொத்துகளும் 16% (ரூ. 8.2 பில்லியனாக) அதிகரித்துள்ளது. “ஒவ்வொரு இலங்கையரையும் ஒன்றென கருதி” எங்கள் ஒத்துழைப்பு மற்றும் சேவைகளை வழங்கும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் நாம் அளித்த எமது நிறுவன வாக்குறுதியானது, அனைத்து இலங்கையர்களுக்கும் புதுமையான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட காப்புறுதி தீர்வுகள் மூலம் மன அமைதியை வழங்கும் Amana Takaful Insurance இன் புதிய சேவை நோக்குநிலையை பிரதிபலிக்கிறது.  இலங்கை காப்புறுதி துறையில், குறிப்பாக மோட்டார் மற்றும் மருத்துவ காப்புறுதி தயாரிப்பு வரிசையில் பல்வேறு புதுமையான தயாரிப்புகளை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். இது வர்த்தகநாமம் மீது மிகுந்த நம்பிக்கையையும் மரியாதையையும் ஈர்த்துள்ளதுடன், நிறுவனத்தின் வளர்ச்சியைத் தொடர எங்களுக்கு உதவுகிறது. பிரதம நிறைவேற்று அதிகாரி ஷெஹான் ஃபைஸாலின் தலமையிலான ATI அணியானது, கடுமையாக உழைத்துள்ளதுடன், அணியின் அர்ப்பணிப்புக்கு நான் முழு மனதுடன் நன்றி கூறுகிறேன்,” என்றார்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *