Latest News Tamil

அமானா தகாஃபுல் காப்புறுதியின் ‘Total Drive Prestige’ சேவை அறிமுகம்

பெறுமதி கூடிய வாகனங்களுக்கென  புதிய காப்புறுதி!

அமானா தகாஃபுல் காப்புறுதி நிறுவனத்தால் பெறுமதி கூடிய வாகனங்களுக்கென ஒரு புதிய காப்புறுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் வாகன காப்புறுதியானது பத்து மில்லியன் மற்றும் அதற்கு மேற்பட்ட பெறுமதி வாய்ந்த வாகனங்களுக்கென விசேடமாக தயாரிக்கப்பட்டது. அமானா தகாஃபுல் இன் அடிப்படை மோட்டார் வாகன காப்புறுதியில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இக்காப்புறுதிக்கு ‘Total Drive Prestige’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இழப்பு ஏற்படும் பட்சத்தில் குறித்த காப்புறுதியின் மூலம் 100 வீத இழப்பீட்டுத் தொகையை உரிமை கோர முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். தனது வாடிக்கையாளர்களின் நலன் கருதி அவர்கள் உயர் தர சேவையினை பெற வேண்டும் எனும் நோக்கிலேயே இந்த காப்புறுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல் தர வாகனங்களுக்கென வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காப்புறுதியானது இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையாகும்.  அத்துடன் விபத்து ஏற்படும் பட்சத்தில் அருகில் உள்ள எந்தவொரு  வாகன  பழுதுபார்ப்பு நிலையத்திற்கும் செல்ல வாடிக்கையாளர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாது சுமார் ஏழு வருடங்களுக்கு வாடிக்கையாளரின் காப்புறுதி கணக்கிற்கான பங்களிப்புக்கு (owner’s account contribution) தள்ளுபடியும் செய்து கொடுக்கப்படும் என்பது இக்காப்புறுதியின் சிறப்பம்சமாகும். வாடிக்கையாளர்களால் இழப்பீட்டு கோரிக்கை முன்வைக்கப்படும் சந்தர்ப்பத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலேயே மேற்குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் குறித்து அமானா தகாஃபுல் நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் நௌஷாட் காசிம்  கருத்து தெரிவிக்கையில் “இலங்கை வாழ் முதல் தர வாகன உரிமையாளர்களின் நன்மை கருதி இது போன்றதொரு முன்னோடியான காப்புறுதியை அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு செயற்படும் எமது பிரசித்தி பெற்ற வணிக அணுகுமுறைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இந்த Total Drive காப்புறுதி அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு 100 வீத இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதுடன்  இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ளும் வரை சகல விதமான உதவிகளும் செய்து கொடுக்கப்படும். அத்துடன் காப்புறுதி உடன்படிக்கைக்கு இணங்க இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்பது குறித்தும் நாம் கவனம் செலுத்துவோம்” என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் “பொதுவாக காப்புறுதி  இழப்பீட்டுத் தொகையை கோருவது சிக்கல்களை உள்ளடக்கிய செயற்பாடாகும். எனினும் Total Drive Prestige %லம் இது இலகுபடுத்தப்பட்டுள்ளது. இதனாலேயே நாம் இதனை ஒரு திருப்புமுனையாகக் கருதுகின்றோம். விபத்து ஏற்படின் வாடிக்கையாளர்கள் எமது நிறுவனத்திற்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொள்வதன் மூலம் இதனை செயற்படுத்த முடியும். இந்த  Call & go வசதி வாடிக்கையாளர்களின் நலன் கருதி உருவாக்கப் பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.

அமானா தகாஃபுல் காப்புறுதியின் ‘Total Drive Prestige’ ஆனது, வாகன உற்பத்தியாளரின் அங்கீகரிக்கப்பட்ட பழுதுபார்த்தல் நிலையத்தில்  அல்லது வேறு எந்த பழுதுபார்த்தல் நிலையத்தில் சேவையை பெற்றுக்கொண்டாலும் காப்பீட்டாளரின் முழு வாகன இழப்பீட்டுத் தொகையை  ஈடுசெய்யும். ஆகவே, ‘Total Drive Prestige’ சேவையின் கீழ் வாகனங்களை திருத்துவதற்காக, பழுதுபார்த்தல் நிலையங்களுக்கு காப்பீட்டாளர் செல்கையில், காப்புறுதி நிறுவன முகவரின் அங்கீகாரத்திற்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோன்று இழப்பீட்டுத் தொகையை செலுத்தி முடித்த பின்னர், மீளப் பொருத்தப்படும் எவ்வித இறப்பர் கூறுகளுக்கும் எவ்வித தொகையும் கழிக்கப்பட மாட்டாது. இது Total Drive Prestige இன் வாடிக்கையாளர் நலனை மையமாகக் கொண்ட மற்றுமொரு சிறப்பு சலுகையாகும்.

‘Total Drive Prestige’ இல் தனிப்பட்ட விபத்தின் போதான இழப்பீடும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதாவது, காப்புறுதி செய்யப்பட்டவர் மற்றும் பயணிகளின் வைத்தியசாலை செலவுகளை இது ஈடுசெய்யும். விபத்து ஏற்படும் சந்தர்ப்பங்களில் காப்பீட்டாளர் தனிப்பட்ட காப்புறுதி இழப்பீட்டின் கீழ் 1,000,000 ரூபாயை பெற்றுக்கொள்ளும் அதே சந்தர்ப்பத்தில், பயணிகள் ஒவ்வொருவருக்கும் தலா 500,000 ரூபாய் இழப்பீட்டுத் தொகையை ஈடுசெய்யும். காப்பீட்டாளரின் மருத்துவமனை செலவாக 500,000 ரூபாய் வழங்கப்படுவதோடு, பயணிகளின் மருத்துவமனை செலவாக ஒவ்வொருவருக்கும் தலா 50,000 ரூபாயை ஈடுசெய்யும். Total Driveஇன் நன்மைகள் இத்துடன் முடிவடையவில்லை. காப்பீட்டாளர்களுக்கு மேலும் கவர்ச்சிமிக்க பல காப்புறுதி சேவைகளை வழங்குகின்றது. அவற்றில் airbag காப்புறுதி, மாற்று போக்குவரத்து காப்புறுதி (alternative transport covers) (நாளொன்றிற்கு 12,000 ரூபாய் வரை) மற்றும் 20,000 ரூபாய் வரையான towing காப்புறுதி என்பன உள்ளடங்கும். மேலதிக தகவல்களுக்கு அருகிலுள்ள அமானா தகாஃபுல் காப்புறுதி நிறுவனத்தின் கிளைக்குச் செல்லலாம் அல்லது 011 750 1000 என்ற இலக்கத்திற்கு அழையுங்கள். 

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *