Latest News Tamil

DIMO மற்றும் Komatsu உலகத்தரம் வாய்ந்த கனரக இயந்திரங்கள் மூலம் இலங்கையை மாற்றியமைக்கும் பணியின் 50 ஆண்டு நிறைவு

இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான DIMO, இலங்கையில் உள்ள உலகப் புகழ்பெற்ற கனரக இயந்திர நிறுவனமான Komatsu உடன் 50 ஆண்டுகால கூட்டாண்மையைக் கொண்டாடுவதுடன், Komatsu தனது வர்த்தக நடவடிக்கைகளின் 100 ஆண்டுகளைக் கொண்டாடுகின்றது.

பல வருடங்களாக, Komatsu வின் பல்வேறுபட்ட தயாரிப்பு பிரிவுகளானவை, கனரக இயந்திர துறையில் DIMO வின் தயாரிப்பு விநியோகத்தை மீள்வரையறை செய்ய உதவி வருகின்றது. சீமெந்து, கட்டுமானம், சுரங்கத் துறை போன்ற உள்நாட்டிலுள்ள பாரிய அளவிலான கைத்தொழில்களை ஊக்குவிக்கும் அதே வேளையில் நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் கணிசமான பங்களிப்பை வழங்க அது உதவியளித்துள்ளது. இதன் மூலம், உலகத்தரம் வாய்ந்த அதன் கனரக இயந்திரங்களால், உற்பத்தித்திறன் மற்றும் அதிக செயல்திறன் போன்ற அடைவுகளை பெற அது வழிவகுத்துள்ளது. DIMO வழங்கும் Komatsu தயாரிப்பு வகைகளில், hydraulic excavators, wheel loaders, bulldozers, motor graders, dump trucks, hybrid hydraulic excavators, articulated dump trucks போன்றன உள்ளடங்குகின்றன. கட்டுநாயக்க – கொழும்பு நெடுஞ்சாலை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, மத்திய நெடுஞ்சாலை, அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மிக சமீபத்திய கொழும்பு துறைமுக நகரம் போன்ற பாரிய அளவிலான தேசிய திட்டங்களுக்காக, Komatsu தயாரிப்பு இயந்திரங்களை DIMO வழங்கியிருந்தது. DIMO வின் Komatsu வாடிக்கையாளர் பிரிவுகளில், பாரிய அளவிலான சீமெந்து உற்பத்தியாளர்கள், தனியார் துறை முதல் சிறிய அளவிலான தனிப்பட்ட இயந்திர உரிமையாளர்கள் வரை பலதரப்பட்டோர் உள்ளடங்குகின்றனர்.

இலங்கையின் முதலாவது புத்தாக்க Hybrid Excavator களை சந்தையில் அறிமுகப்படுத்தியமை, இலங்கையில் இது வரை மிகப்பெரிய புல்டோசரான (bulldozer) Komatsu D375 டோஸரை Holcim இற்கு வழங்கியமை உள்ளிட்ட,  கடந்த 50 ஆண்டுகளில், DIMO மற்றும் Komatsu இணைந்து உள்நாட்டு கனரக இயந்திரத் தொழில் துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. Siam City Cement Lanka Ltd (SCCL) நிறுவனத்திற்காக இலங்கைக்கு Komatsu HD465-7R எனும் மிகப்பெரிய Komatsu Dump Trucks (Pay Load-55 MT) இனை வழங்கியமை போன்ற விடயங்கள் மூலம், Komatsu மற்றும் DIMO கூட்டாண்மையானது மிக முக்கிய பங்கை வகிக்கின்றது. தெற்காசிய பிராந்தியத்தில் ஹைப்ரிட் தொழில்நுட்பம் (Hybrid Technology) இன்னும் பரவலாக பயன்படுத்தப்படவில்லை ஆயினும், இலங்கையில் Hybrid பயனர்களுக்கு விற்பனைக்கு பின்னரான  சேவைகளை வழங்குவது தொடர்பில் DIMO கொண்டுள்ள திறனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதோடு, அது தொடர்பான Hybrid இயந்திரங்களை Komatsu வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தெற்காசியாவில் அவ்வாறான 60 தொகுதிகளை வழங்கிய முதல் நாடாக இலங்கை திகழ்கின்றது.

Komatsu உடனான 50 ஆண்டுகால கூட்டாண்மை தொடர்பில் தனது கருத்துகளைப் பகிர்ந்த DIMO தலைவரும் நிர்வாக பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே, “கனரக இயந்திரங்கள் தொடர்பான உலகளாவிய நிறுவனமான Komatsu உடனான எமது கூட்டாண்மையின் 50ஆவது ஆண்டை கொண்டாடுவதில் நாம் பெருமையடைகிறோம். நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் நாமும் முக்கிய பங்கு வகிக்க முடிந்தமையானது, எமது ஒருங்கிணைந்த பயணத்தின் மறக்கமுடியாத அனுபவமாக திகழ்கின்றது. இலங்கையில் கனரக இயந்திரத் துறையில் புரட்சியை ஏற்படுத்தி எதிர்காலத்தில் ஒன்றாக இணைந்து தொடர்ச்சியாக பணியாற்ற நாம் எதிர்பார்க்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

Komatsu வின் 100ஆவது ஆண்டு கொண்டாட்டங்கள் குறித்து Komatsu நிறுவனத் தலைவரும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான Hiroyuki Ogawa (ஹிரோயுகி ஒகாவா) தெரிவிக்கையில், “நாம் எமது 100ஆவது ஆண்டு பூர்த்தியை 2021இல் கொண்டாடுவது தொடர்பில், எமது வாடிக்கையாளர்கள், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள், வர்த்தகப் பங்காளர்கள் உள்ளிட்ட எமது அனைத்து பங்குதாரர்களின் ஆதரவிற்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் நாம் பெரு மகிழ்ச்சியடைகின்றோம். அவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். எதிர்வரும் 100 வருடங்களில், வணிகங்கள், மக்கள், எமது பூமி ஆகிய அனைத்தும் இணைந்த வளர்ச்சியைக் கொண்ட ஒரு நிலைபேறான எதிர்காலத்தை மேம்படுத்துவதற்காக உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப புத்தாக்கங்களின் மூலம் ஒரு பெறுமதியை நாம் உருவாக்குவோம்.” என்றார்.

DIMO வின் நிர்வாக பணிப்பாளர் சமிந்த ரணவன இது தொடர்பில் தெரிவிக்கையில், “DIMO விற்கு இது ஒரு மட்டிட முடியாத மைல்கல்லாகும். காரணம் இக்கூட்டாண்மையானது இவ்வர்த்தகத்தினை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல உதவியுள்ளது. Komatsu ஆனது, வாடிக்கையாளர்களின் தேவைகளை தொடர்ந்தும் அடையாளம் கண்டு அவர்களுக்கு அவசியமான புதிய மாதிரிகளை தொடர்ந்தும் அறிமுகப்படுத்தி வருகிறது. புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் விற்பனைக்குப் பின்னரான பராமரிப்பு சேவைகள் தொடர்பான அவர்களின் பயிற்சித் திட்டங்கள் பல ஆண்டுகளாக DIMO விற்கு அதன் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு உதவியுள்ளதுடன், Komatsu வின் உத்தரவாதமும், அசல் உதிரிப்பாகங்களும் இவ்வணிகத்தின் அடித்தளத்தை மேம்படுத்த பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளன. 50 வருட கூட்டாண்மையைக் கொண்டாடுகின்றமை தொடர்பில், ​​DIMO மற்றும் Komatsu ஆகியன எதிர்காலத்தில் மேலும் பல புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளன. நீர்க் குழாய் பொருத்தல் நடவடிக்கை தொடர்பான புதுமையான தயாரிப்புகளில் ஒன்றான புதிய PC210-10 இனை விரைவில் இலங்கையரால் அனுபவிக்க முடியும். இது அதிக உற்பத்தித்திறன், குறைந்த எரிபொருள் நுகர்வு, குறைந்த பராமரிப்புச் செலவு, அதிக ஆயுள், பாதுகாப்பு மற்றும் சொகுசு மற்றும் Komtrax system இனை கொண்டுள்ளது.” என்றார்.

DIMO வின் மட்டிட முடியாத விற்பனைக்குப் பிந்திய சேவைத் திறன்களும், Komatsu தயாரிப்புகளின் உயர் தரமும், இலங்கையில் 50 ஆண்டுகளாக Komatsu வர்த்தகத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியுள்ளது. உதிரிப் பாகங்கள், வாடிக்கையாளர் உதவி, கணக்காய்வு மற்றும் பராமரிப்பு, தொழில்நுட்பம் மற்றும் இயக்குதல் தொடர்பான பயிற்சி, பழுதுபார்த்தல் மற்றும் பாகங்களின் புனரமைப்பு போன்ற, ‘360° வாடிக்கையாளர் பராமரிப்பு’ என அழைக்கப்படும் இவை அனைத்தும், DIMO வின் விற்பனைக்குப் பின்னரான செயற்பாடுகளின் முக்கிய அம்சங்களாகும். வழக்கமான பராமரிப்பு முதல் விபத்து பழுதுபார்த்தல் உள்ளிட்ட பாரிய பழுதுபார்ப்பு வரையான அனைத்து வகையான பழுதுபார்க்கும் தெரிவுகளையும் DIMO வழங்குகிறது. இது தவிர, DIMO வின் தயாரிப்பு உதவிச் சேவை ஆலோசகர்கள் குழுவினர், வாடிக்கையாளர்களை தவறாமல் பார்வையிட்டு, DIMO வினால் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு இயந்திரத்தையும் எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக ஆய்வு செய்கின்றனர். நடமாடும் சேவைநிலையங்கள், வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கும் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்கும் வகையிலான தீர்வை வழங்குகின்றன. Curtis Analyzer, diagnostic box உடனான system software மற்றும் hydraulic cylinder பழுதுபார்க்கும் அமைப்பு போன்ற பிழைகளைக் கண்டறியும் விசேட கருவிகள், 100% வாடிக்கையாளர் திருப்தியை உறுதி செய்யும் தொழில்முறை ரீதியானதும், விசேடத்துவமான சேவையை உறுதி செய்ய பயன்படுத்தப்படுகின்றன. உள்ளூர் சந்தையில் Komatsu செயற்பாடுகளின் வளர்ச்சிக்கு, அதன் உதிரிப் பாகங்களை பெற்றுக் கொள்வதானது ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது. அந்த வகையில் இலங்கையில் Komatsu உதிரிப் பாகங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட முகவர் எனும் வகையில், நாடு முழுவதும் அசல் உதிரிப் பாகங்களை எளிதாகப் பெறுவதை DIMO உறுதிப்படுத்தி வருகின்றது.

முற்றும்

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *