Latest News Tamil

CLC Islamic Finance அறிமுகப்படுத்தும் வாதியாஹ்

வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நன்மைகளுடன்தங்கத்திற்கும் பாதுகாப்பு

Commercial Leasing & Finance PLC (CLC) நிறுவனத்தின் இஸ்லாமிய வணிகப் பிரிவு (IBD) ஆன CLC Islamic Finance, அதன் சமீபத்திய அறிமுகமான வாதியாஹ் (Safe Keeping – பாதுகாப்பாக வைத்து பராமரித்தல்)  சேவையை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது. இது வழக்கமான தங்கக் கடன்களுக்கான ஒரு மாற்று திட்டமாகும். தங்கத்தை பாதுகாப்பாக வைத்தல் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வட்டி இல்லாத கடனை வழங்குவதற்கான சிறந்த கடன் வசதித் திட்டம் ஆகிய இரண்டு தெரிவுகளில் இவ்வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சேவையின் மூலம், தாங்கள் விரும்பிய வகையில் தெரிவு செய்யும் வகையில், பாதுகாப்பாக வைத்தல் அல்லது பாதுகாப்பாக வைப்பதோடு நன்மை பயக்கும் கடன் வசதிகளையும் பெறுதல் ஆகிய இரு தெரிவுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றது. இதில் கடன் வசதியின் போது எவ்வித கட்டணமும் அறவிடப்படாது என்பதோடு, பாதுகாப்பாக வைத்து பராமரிக்கும் வசதிக்காக மாத்திரம் குறிப்பிட்ட சேவைக் கட்டணம் அறவிடப்படும்.

இந்த தயாரிப்புக்கான காலப்பகுதி 1, 3, 6, 12 மாதங்கள் வரை இருக்கும், அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளின் அடிப்படையில் காலத்தை தீர்மானிக்க முடியும். வாதியாஹ் – பாதுகாப்பான பராமரிப்பு வசதியைப் பெறும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய அனைத்து தங்கப் பொருட்களுக்கும் இலவச தகாபுல் காப்பீட்டை பெறுகின்றனர். இந்த வசதியின் ஒரு தனித்துவமான அம்சம் யாதெனில், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான மற்றும் முழுமையான வெளிப்படையான சேவை மூலம் உடனடியாக பணத்தை பெற முடியும். வழக்கம் போல், CLC இஸ்லாமிய நிதிச் சேவை வாடிக்கையாளர்களுக்கு விரைவான மற்றும் தொந்தரவற்ற சேவையை உறுதிப்படுத்தப்படுவதுடன் இத்தயாரிப்புக்கு மேலதிக கட்டணம் அல்லது அபராதம் எதுவும் விதிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்புதிய தயாரிப்பு குறித்து, இஸ்லாமிய வணிகப் பிரிவின் தலைவர் இல்சாம் அவ்பர் தெரிவிக்கையில், “வாடிக்கையாளர்களால் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட பாதுகாப்பாக பராமரித்தல் தொடர்பான வசதியை அறிமுகப்படுத்துவது தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இப்போது மேலும் பல சலுகைகள் மற்றும் வசதிகளுடன் கூடிய இத்தயாரிப்பு அறிமுகத்தின் மூலம், பல்வேறு சமூகப் பிரிவுகளில் உள்ள வாடிக்கையாளர்களின் அவசர பணத் தேவைகளை எம்மால் நிறைவேற்ற முடிகிறது. CLC Islamic Finance நிறுவனமானது, அதன் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தீர்வுகளை வழங்கும் அதே வேளையில், மிக உயர்ந்த வாடிக்கையாளர் சேவையை பேணுவதற்காக நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.” என்றார்.

தங்கக் கடன் வணிகப் பிரிவின் தலைவர் துவாகர் அசோகன் கருத்து வெளியிடுகையில், “அவசர பணத் தேவைக்கு தங்கத்தை அடகு வைப்பது மிகவும் சாத்தியமான தெரிவாக காணப்படுகின்றது. பாதுகாப்பு மற்றும் வசதி ஆகியவற்றை விரும்பும் வாடிக்கையாளர்கள்  இச்சேவையை நிச்சயம் விரும்புவார்கள். எமது விஸ்வாசமான வாடிக்கையாளர்கள் நாளின் முடிவில் திருப்தியடைய வேண்டும் என்பதை உறுதி செய்ய விரும்புவதால், பாதுகாப்பாக பேணி பராமரிக்கும் இத்தீர்வானது, முற்றிலும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பல்வேறு நன்மைகளின் தொகுப்புடன் அமைந்துள்ளதனால், இது விரைவில் பொதுமக்களின் நன்மதிப்பை பெறுமென நாம் எதிர்பார்க்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

CLC Islamic Finance ஆனது, Commercial Leasing and Finance PLC இன், ஒழுங்குபடுத்தல் அனுமதிப்பத்திரத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, மாற்று நிதித் தீர்வுகளை வழங்குவதற்கான ஒரு மூலோபாய வணிகப் பிரிவாகும்.  CLC Islamic Finance ஆனது, வாடிக்கையாளர் மைய நிதித் தீர்வுகளை வழங்கி வந்துள்ளதுடன், 2021 இல், அது வெற்றிகரமாக 6 வருடங்களை நிறைவு செய்கிறது. CLC Islamic Finance ஆனது, ஒரு சிறந்த செயல்பாட்டு இஸ்லாமிய நிதிச் சாளரமாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதுடன், அது தனது பயணத்தில் பல்வேறு மைல்கற்களையும் அடைந்துள்ளது.

இந்நிதிப் பிரிவானது, இலாப பங்கீடு முதலீடுகள் (முதாரபாஹ்), தவணை முதலீடுகள் (வகாலா), இஸ்லாமிய குத்தகை (இஜாராஹ்), வர்த்தக நிதி (முராபஹா), சொத்து/ செயற்படு முதலீட்டு நிதி (குறைந்து வரும் முஷாரகா), இறக்குமதி நிதி (முஸவ்வமாஹ்),  மற்றும் செயற்படு மூலதன நிதி (வகாலா) போன்ற பல நிதிச் சேவைகளுடன், தற்போது புதிதாக, வாதியாஹ் எனும் புதிய சேவை தயாரிப்பையும் அதன் துறைகளில் ஒன்றாக இணைத்துள்ளது.

Commercial Leasing and Finance (CLC) நிறுவனத்தின் ஒழுங்குபடுத்தல் அனுமதிப்பத்திரத்தின் கீழ், 2015 ஆம் ஆண்டு இஸ்லாமிய வணிகப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. இது ஷரிஆ உடன்  இணங்கும் நிதித் தீர்வுகளை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு பிரத்தியேக வணிகப் பிரிவாகும். CLC Islamic Finance இனால் வழங்கப்படும் வங்கித் தீர்வுகள் யாவும், மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஷரீஆ மேற்பார்வை சபையினால் அங்கீகரிக்கப்பட்டு, கணக்காய்வு செய்யப்பட்டு வருகின்றன.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *