Latest News Tamil

சிங்கரின் அனைத்தும் ஒருங்கே அமைந்த Interactive Flat Panel Smartboards அறிமுகம்

– கல்வி மற்றும் வணிக நோக்கங்களுக்கான அனைத்தும் ஒருங்கே அமைந்த தீர்வு

அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இலங்கையர்களை மேம்படுத்துவதில் புகழ்பெற்ற, இலங்கையின் முன்னணி நீடித்த நுகர்வோர் பாவனைப் பொருட்களின் சில்லறை விற்பனையாளரான சிங்கர் (ஶ்ரீ லங்கா) பி.எல்.சி, நிறுவனம்,  அண்மையில் Interactive Flat panel Smartboards (ஊடாடல் ஸ்மார்ட்போர்ட் தளம்) இனை அறிமுகம் செய்தது. கற்றலின் போதான வழமையான அனுபவத்தை மாற்றுவதற்கும் தொலைநிலை கற்றல் மற்றும் வர்த்தக நோக்கங்களின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குமாக, பல்வேறு மட்டத்திலான இந்த ‘Interactive Flat panel Smartboards’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சிங்கர் மற்றும் ஸ்கைவொர்த் (Skyworth) போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப தீர்வு வழங்குநர்களிடமிருந்தான, ஸ்மார்ட்போர்டுகளை சிங்கர் தற்போது காட்சிப்படுத்தி வருகின்றது. இந்த ஸ்மார்ட்போர்டுகள் கணனி, தொலைக்காட்சி, ப்ரொஜெக்டர், வெண்பலகை ( Computer, TV, Projector, whiteboard) போன்றவற்றின் அம்சங்களை ஒன்றிணைத்தவாறு, அனைத்து தீர்வுகளையும் ஒருங்கே அமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

தொழில்துறை முன்னணித்துவம் கொண்ட பல் செயற்பாட்டு ஸ்மார்ட்போர்டுகள், இன்றைய ஊடாடும் கற்றலின் மாற்றத்திற்கான சிறந்த மாற்றுத் தீர்வாக அமைந்துள்ளன. எந்தவொரு கற்றலுக்கான சூழலின் போதான நவீன தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போர்டுகள், அதனுடன் இணைபவர்களை தடையின்றி இணையவும் இணைப்பவர்களுக்கு மிக எளிமையாக அதனை மேற்கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்குவதுடன், கற்றல் அனுபவத்தை மேலும் அர்த்தமுள்ளதாகவும் சுவாரஸ்யமானதாகவும் மாற்றுகின்றன. கணனி மற்றும் ப்ரொஜெக்டர் ஆகிய இரண்டையும் பயன்படுத்தக்கூடிய திறன் மற்றும் மிக இலகுவாக கொண்டு செல்லும் வகையிலானதாக இருத்தல் போன்ற அம்சங்கள் காரணமாக, தற்காலத்தில் ஸ்மார்ட்போர்டுகள் உலகின் மிகவும் விரும்பப்படும் கற்பித்தல் சாதனமாக மாறிவிட்டன.

55, 65, 75 அங்குலங்கள் எனும் 3 வெவ்வேறு அளவுகளில் கிடைக்கும் இவை, அன்ட்ரொய்ட் அல்லது விண்டோஸ் 10 இயங்கு தளங்களில் பயன்படுத்துவதற்கான தெரிவையும் கொண்டுள்ளன. சிங்கரிடமிருந்து கிடைக்கும் ஸ்மார்ட்போர்ட் வகைகள் ஊடாடும் விளக்கக் காட்சிகளை வழங்கும் வசதி, குறிப்புகளை வெண்பலகையில் எழுதுதல் போன்ற அனுபவம், வீடியோக்களை ஒளிபரப்புதல், திரையை பிரதிபலிக்கச் செய்தல் (Screen mirroring) உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளன. அதில் உள்ளக நினைவகம் காரணமாக, ஆசிரியர்களுக்கு அவர்களின் கற்பிக்கும் விடயங்களை சேமித்து வைக்க வசதி கிடைக்கிறது. இதன் மூலம் எதிர்கால கற்பித்தலின்போது அவற்றை இலகுவாகப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போர்டுகள் தொடர்பில் சிங்கர் (ஶ்ரீ லங்கா) பி.எல்.சி குழும பிரதான நிறைவேற்று அதிகாரி மகேஷ் விஜேவர்தன கருத்து தெரிவிக்கையில், “உலகின் முன்னணி ஸ்மார்ட்போர்ட் தொழில்நுட்பத்தை இலங்கைக்கு கொண்டு வருவதில் நாம் பெரு மகிழ்ச்சியடைகிறோம். இது தற்போது அவசியமாகவுள்ள டிஜிட்டல் மயமாக்கலுக்கான முன்முயற்சிக்கு உதவும் என நம்புகிறோம். கொவிட்-19 தொற்று பரவலைத் தொடர்ந்து, ஸ்மார்ட் வகுப்பறை எண்ணக்கரு தொடர்பில் கவனம் செலுத்தும் இத்தருணத்தில், ஸ்மார்ட்போர்டுகள் கல்வியின் டிஜிட்டல் மாற்றத்திற்கான அடுத்த படியாக மாறியுள்ளன. தொலைதூர கல்வி, வீடியோ வழி மாநாடுகள், வணிக ரீதியான கூட்டங்களை மேற்கொள்வதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்ட சிங்கரிடமிருந்தான உயர் தர ஸ்மார்ட்போர்டுகளின் வகைகளை இப்போது நீங்கள் அனுபவிக்கலாம். இந்த ஸ்மார்ட்போர்டுகள் மாணவர்களுக்கு ஆரோக்கியமான கற்றல் சூழலை உருவாக்குவதற்கு அவசியமான மேலும் அதிக ஊடாடல் செயற்பாடுகளுக்கு வசதியளிக்கின்றன.” எனத் தெரிவித்தார்.

கல்வி ரீதியான நோக்கங்களுக்காக பயன்படுத்துவது என்பது ஸ்மார்ட்போர்டுகளின் ஒரு அம்சமாக காணப்பட்ட போதிலும், இது, நிறுவனங்களின் கூட்ட அறைகள் மற்றும் கலந்துரையாடல் அறைகளின் வகிபாகமாக செயற்படும் வகையில், வேலைத் தளத்தின் உற்பத்தி மற்றும் செயல்திறனை அதிகரிப்பது தொடர்பான இணையற்ற ஒத்துழைப்பு அனுபவத்தை வழங்கும் வகையிலான தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போர்டுகளை கொள்வனவு செய்யும் பாடசாலைகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களுக்கு, சுவர் இணைப்பு சட்டகங்கள் (Wall bracket) மற்றும் இரண்டு Touch Pen போன்ற இலவச இணைப்பு சாதனங்களை விசேட சலுகைகளாக வழங்கவுள்ளதாகவும் சிங்கர் அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக நம்பகமான சிறப்பம்சங்களுடன் ஒப்பிடமுடியாத சேவை வழங்கல்கள் தொடர்பில் புகழ்பெற்ற சிங்கர் நிறுவனம், இந்த ஒவ்வொரு தயாரிப்புக்கும் இரு ஆண்டுகள் எனும் விரிவான உத்தரவாதத்தை வழங்குகிறது. அத்துடன் இலவசமாக நிறுவுதல், நாடு முழுவதுமான விநியோக சேவைகள், விற்பனைக்குப் பின்னரான தரமான சேவைகளும் இதற்காக வழங்கப்படுகின்றன. சிங்கர் இணையத்தளமான www.singer.lk இனைப் பார்வையிடுவதன் மூலம் சிங்கரின் ஸ்மார்ட்போர்ட் வகைகள் தொடர்பில் அறியலாம் என்பதுடன் இத்தயாரிப்புகள் தொடர்பான மேலதிக விபரங்களை, சிங்கர் வாடிக்கையாளர் சேவை நிலையத்தை 011 5 400 400 எனும் தொலைபேசி வழியாக அழைத்து பெற்றுக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *