Latest News Tamil

பெல்வத்த பால்பொருள் நிறுவனம் கொவிட் சவால்களைக் கடந்து தன் வரிக்கு முந்தைய இலாபத்தினை 148 வீதத்தினால் அதிகரித்துள்ளது

  • அத்தோடு, பால் பண்ணையாளர்களுக்கான வருடத்திற்கு வருட கொடுப்பனவை 70 வீதத்தால் அதிகரித்துள்ளது.

உள்நாட்டில் பல்வேறு வகையான பால்பொருட்களை உற்பத்தி செய்து, நாட்டின் அந்நிய செலாவணியையும் சேமிக்கும் இலங்கையின் முன்னணி பால்பொருள் நிறுவனமான பெல்வத்த பால்பொருள் நிறுவனமானது, வருடத்திற்கு வருட வரிக்கு முந்தைய இலாபத்தை (PBT) 148 வீதத்தால் அதிகரித்து 2020/2021இல் குறிப்பிடத்தக்க நிதியியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிதியொதுக்கீட்டின்போது எதிர்பார்க்கப்பட்ட இலாப இலக்கைவிட சற்று குறைந்த இலாபத்தையே இந்த நிறுவனம் 2020/2021இல் பெற்றுள்ளது. நிறுவனத்தின் மொத்த இலாபம் 180 வீதமாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் வரிக்கு முந்தைய இலாபம் 148 வீதத்தால் அதிகரித்துள்ளது. 2019/2021 நிதியாண்டில் பெல்வத்த நிறுவனம் வரிக்கு முந்தைய இலாபத்தில் இழப்பை எதிர்கொண்டிருந்த நிலையில், தற்போது பெற்றுக்கொண்ட இலாபம் நிறுவனத்திற்கு பாரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

குறிப்பாக, நாட்டில் நிலவும் கொவிட் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வருடத்திற்கு வருட மொத்த பால் பண்ணையாளர்களின் எண்ணிக்கையை 16 வீதத்தால் அதிகரித்து, மொத்த பால் பண்ணையாளர்களின் எண்ணிக்கையை 6500 ஆக உயர்த்துவதில் நிறுவனம் வெற்றிபெற்றுள்ளது. நிறுவனமானது, 2020/2021ஆம் ஆண்டில் பால் பண்ணையாளர்களுக்கு 3.18 பில்லியன் ரூபாய் செலுத்தியுள்ளது. இது 70 வீத வருடத்திற்கு வருட அதிகரிப்பாகும்.

அதிகளவில் விற்பனையான முதல் பத்து தயாரிப்புகளில் மூன்று பொருட்களைத் தவிர, ஏனைய ஏழு தயாரிப்புகளும் 2020/2021இல் வருடத்திற்கு வருட வளர்ச்சியைக் காட்டியுள்ளன.

2020/2021 காலப்பகுதியில் அதிகளவு விற்பனையாகும் தயாரிப்புகளின் வரிசையில் பெல்வத்த முழு ஆடைப் பால்மா காணப்பட்டதுடன், வருடா வருடம் அதன் வளர்ச்சி 76 வீதமாக காணப்பட்டது. உற்பத்திப் பொருள் வரிசைக் கிரமத்தில் இரண்டாவது மிக அதிக விற்பனையைக் கொண்டதாக பட்டர் காணப்பட்டதுடன், அது 42 வீத வருடத்திற்கு வருட வளர்ச்சியையும், மூன்றாவதாக அதிக விற்பனையுடன் கூடிய தயாரிப்பாக யோகட் காணப்பட்டதுடன், அது 49 வீத வருடத்திற்கு வருட வளர்ச்சியையும் கொண்டிருந்தன. ஏனைய வரிசைக் கிரமமான தயாரிப்புகளும் வருடா வருடம்  100 வீதத்தை விட அதிக வளர்ச்சியைக் காட்டியுள்ளன. நெய் இந்த உற்பத்தி வரிசைக் கிரம விற்பனையில் ஆறாவது இடத்தில் இருந்தபோதிலும், 2020/2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அனைத்து உற்பத்திகளையும் விட மிகவும் உயர்ந்த வளர்ச்சியைக் காட்டியிருப்பதுடன், பத்து மடங்கு வருடத்திற்கு வருட வளர்ச்சி (1070% வருடத்திற்கு வருட வளர்ச்சி)  அதிகரிப்பாக அமைந்துள்ளது.  

செயற்பாட்டுக் கண்ணோட்டத்தின் ஊடாக அவதானித்தால், நிறுவனமானது SAPஐ  அறிமுகப்படுத்துவதன் ஊடாக அதன் தானாக இயங்கும் திறனை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. அதேவேளை, நிறுவன வளத் திட்டமிடல் (ERP) தீர்வானது, அதன் செயற்திறனை அதிகரித்ததுடன், 2020/2021 ஆம் ஆண்டில் அதன் அடிமட்டத்திலும் செயற்பாட்டு வலூவூட்டல் திறனை அதிகரித்தது.

பெல்வத்த பால்பொருள் நிறுவனம் பற்றி:

பெல்வத்த பால்பொருள் நிறுவனமானது 2006ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பால் பதப்படுத்துதல், கால்நடை தீவனம் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற இலங்கையின் ஒரு வர்த்தக நாமம் என்ற வகையில், வெளிநாட்டு பால்பொருட்கள் இறக்குமதிக்கான அந்நிய செலாவணியை வெற்றிகரமாக சேமிக்கின்றது. பால்பொருள் உற்பத்திக்கு தரமான மூலப்பொருட்களின் தொடர்ச்சியான மற்றும் நம்பகமான சுழற்சியை நிறுவுவதற்கான நோக்கத்துடன் இந்த நிறுவனமானது இலங்கையில் கறவை மாடுகளை வளர்ப்பதை இலட்சியமாகக் கொண்டுள்ளது. ISO 22000:2018 தரச்சான்றிதழைப் பெற்ற பெல்வத்த பால்பொருள் நிறுவனமானது இலங்கை பால்பொருள் உற்பத்தித் துறையில் தற்போது செயற்படும் மிகவும் நவீனமயப்படுத்தப்பட்ட (Danish தொழிநுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது) தொழிற்சாலைக்கு உரித்துடையது.

#முற்றும்#

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *