ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து வாழ்க்கையின் தரத்தை ஒவ்வொரு அம்சங்களிலும் மேம்படுத்தும் ஸ்மார்ட் சாதனங்களை Huawei அறிமுகப்படுத்தி வருகின்றது.
Huaweiஇனால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களில், Huawei Y7a மிகவும் கட்டுப்படியாகும் விலையில் கிடைப்பதுடன், சிறப்பம்சங்கள் நிரம்பிய ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இது 48MP குவாட் கெமரா அமைப்பு, 5000mAh பாரிய பற்றரி, 4GB RAM + 128GB சேமிப்பகம் போன்ற உயர்ந்த அம்சங்களை மலிவு விலையில் வழங்குகிறது.
Huawei Y7a ஆனது, 6.67 அங்குல Full HD பெரிய திரையுடன், 90.3% திரைக்கு உடல் விகிதத்துடன் பார்வைச்சிதறல் இல்லாத அனுபவத்தைக் கொண்டுவருகிறது. Huawei Y7a Quad camera அம்சத்தை கொண்டதாக காணப்படுகின்றது. Huawei Y7a Quad camera ஆனது, 48MP (f/1.8 குவியம்), 8MP (அல்ட்ரா-வைட் ஆங்கிள் வில்லை, f/2.4 குவியம்), 2MP (ஆழத்திற்கான வில்லை, f/2.4 குவியம்) மற்றும் 2MP உருப் பெருக்கி வில்லை, f/2.4 குவியம்) ஆகியவற்றை கொண்டுள்ளது. Huawei Y7a ஆனது Kirin 710A புரசசரைக் கொண்டுள்ளது. 4GB RAM மூலம் இயக்கப்படும் இது வேகமான, தடங்கல்கள் அற்ற செயற்பாட்டினை வழங்குவதுடன், இதன் 128GB நினைவகமானது படங்கள், வீடியோக்கள், செயலிகள், கோப்புகள் போன்றவற்றை சேமித்து வைக்க போதுமான இடவசதியை வழங்குகின்றது. ஒரு பெரிய 5,000mAh பற்றரியினால் இயக்கப்படும் Huawei Y7a ஆனது, பாவனையாளர்கள் ஒரு தடவை சார்ஜ் செய்வதன் மூலம் தங்கள் ஸ்மார்ட்போன்கள் மின்சக்தி இன்றி செயலிழந்து போகாமல் தொடர்ந்து 2 நாட்களுக்கு பயன்படுத்த வழிவகுப்பதுடன், 22.5W வேகமான சார்ஜிங் வசதி இந்த பெரிய பற்றிரியை வேகமாக சார்ஜ் செய்ய உதவுகின்றது.
உடற்பயிற்சிக்கு உறுதியாக இருக்கும் நவீன அணியக்கூடிய தொழில்நுட்ப சானதங்களின் வரிசையில் Huawei நிறுவனத்தின் புதுமையான அணியக்கூடியன மற்றும் ஸ்மார்ட் பட்டிகள் உலகெங்கிலும் உள்ள பாவனையாளர்கள் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. Huawei Band 6 என்பது Huawei அணியக்கூடிய சாதனங்களின் வரிசையின் அண்மைய இணைப்பாகும். அதன் AMOLED முழு காட்சி முழு காட்சி திரையானது அதன் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும், அதே நேரத்தில் அதன் ஸ்டைலான வடிவமைப்பு வண்ணமயமான பட்டைகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கடிகார முகங்களுடன் மேலும் மெருகூட்டப்பட்டுள்ளது. Huawei Band 6, 1.47-இன்ச் முழு காட்சித் திரையுடன் 148% பாரிய பார்வையிடலுக்கான பகுதி மற்றும் 4-வழி தொடுகை கட்டுப்பாட்டு அமைப்பை வழங்குகிறது.
வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் அவற்றின் சௌகரியம் காரணமாக தற்போது அதிகம் விரும்பப்படும் ஹெட்போன் வகைகளாகும்.
Huawei FreeBuds Pro என்பது மிகவும் பிரபலமான ட்ரூ வயர்லெஸ் இயர்பட் ஆகும். இது Active Noise Cancellation (ANC) அம்சத்துடன் வருகிறது. FreeBuds Pro, ANC உடன் அல்ட்ரா பயன்முறை போன்ற பல்வேறு கேட்கும் முறைகளை கொண்டுள்ளது.இது பயணத்தின் போது இசையைக் கேட்பதற்கு மிகவும் பொருத்தமானது, வேலை செய்யும் இடம், நூலகம் அல்லது வேறு எந்த இரைச்சல் குழப்பமான இடத்திலும் இசையை கவனத்துடன் கேட்க பயனருக்கு உதவும் வசதியான பயன்முறையாகும். ANC உடனான பொது பயன்முறை, அதிக மக்கள் தொகை கொண்ட இடங்கள் உட்பட பெரும்பாலான சூழ்நிலைகளுக்கு ஏற்றது. அதன் பிரத்யேக குரல் பயன்முறையானது அழைப்புகளின் போது மனித குரல்கள் தனித்து கேட்கும் படி சுற்றுப்புற ஒலிகளைக் குறைக்கிறது, அதே நேரத்தில் பயனர் விழிப்புணர்வு பயன்முறைக்கு எளிதாக மாறலாம் மற்றும் சுற்றியுள்ளவற்றுடன் மீண்டும் இணைய முடியும்.
Huawei Band 6 மற்றும் Huawei FreeBuds Pro இரண்டையும் Huawei Y7a உடன் எளிதில் இணைத்து தடையற்ற பொழுதுபோக்கு, ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி திறன்களை தழுவிக்கொள்ள முடியும். உண்மையில், இசையைக் கேட்கும்போது உடற்பயிற்சிகளையும் செய்ய விரும்பும் ஒரு பயனர் மூன்று சாதனங்களையும் இணைத்து ஸ்மார்ட்போனை தள்ளி வைத்துவிட்டு வசதியாக உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம். Huawei Band 6ஐ புளூடூத் வழியாக Huawei Y7a உடன் இணைக்க முடியும் அல்லது Huawei AppGallery இருந்து தரவிறக்கம் செய்யக் கிடைக்கும் Huawei Support app உடன் இணைப்பதன் மூலம் இணைக்க முடியும்.
Huawei Y7a, ரூபா 39,999/- என்ற விலையிலும், Huawei Band 6, ரூபா 15,999/- விற்கும் , Huawei FreeBuds Pro ரூபா 34,499/-இற்கும் அனைத்து Huawei experience centers, நாடுமுழுவதிலும் உள்ள சிங்கர் காட்சியறைகள், Daraz.lk மற்றும் Singer.lk ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.