கடந்த சில தசாப்தங்களாக ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப பரப்பானது குறிப்பிடத்தக்களவு நிலைமாற்றமடைந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் வலையமைப்பு வேகமானது 1G இலிருந்து 4G வரை முன்னேறி வருவதால், ஸ்மார்ட்போன் பரப்பில் புரட்சிகர புத்தாக்கம் மற்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை நாங்கள் கண்டுள்ளோம். அடுத்த தலைமுறை 5G தொழில்நுட்பமானது முன்னைய தலைமுறைகளுடன் ஒப்பிடும்போது ஸ்மார்ட்போன் சந்தையில் அதன் வேகமான இணைப்பு வேகம், அதிக அலைவரிசை மற்றும் குறைந்த தாமதத்துடன் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டுவருகிறது.
எனவே, கையடக்க சாதனங்களில் அடுத்த தலைமுறை புரட்சிகர cellular 5G தொழில்நுட்பத்தின் அதிகரித்துவரும் அனுகூலத்துடன், ஸ்மார்ட்போன்கள் கிளவுட் அல்லது இணைய அடிப்படையிலான சேவைகளுக்கு மிகவும் நம்பகமான இணைய இணைப்பை நிறுவிக்கொள்ள முடியும். இது மட்டுமல்லாமல், 5G இன் மேம்பட்ட இணைப்பானது செயலிகளுக்கான லோடிங் நேரங்களை கணிசமாகக் குறைப்பதுடன், ஸ்மார்ட்போன்களின் ஒட்டுமொத்த செயல்திறனையும் மேம்படுத்துகிறது. இதன் மூலம் பாவனையாளர்களுக்கான முழு ஸ்மார்ட்போன் அனுபவத்தையும் பல வழிகளில் மாற்றும், உதாரணமாக, உயர் தெளிவுத்திறன் கொண்ட திரைப்படங்களை தரவிறக்குவது மற்றும் பெரிய கோப்புகளைப் பதிவேற்றுவது பல நிமிடங்களிலிருந்து இருந்து சில வினாடிகளாகக் குறையும். மேலும், இது சேர்வர்களின் செயற்பரப்பெல்லை மற்றும் குரலால்-இயக்கப்படும் தொழில்நுட்பத்தை விரிவாக்குவதற்கு உதவுமென்பதால் ஸ்மார்ட்போன் பரப்பில் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இது இயந்திரங்கள் மற்றும் ஸ்மார்ட் சாதனங்கள் மூலம் உலகை மெய்நிகர் வழியில் பிணைக்கிறது.
இலங்கையானது துரிதமாக 4G இலிருந்து 5G நோக்கி நகர்ந்து வருகின்றது. இப் பிராந்தியத்தின் அண்மைய கால முன்னேற்றங்களின் அடிப்படையில், இலங்கை பல சர்வதேச கேபிள்களுடன் இணைக்கப்பட்ட ஒரு தேசிய ஃபைபர் வலையமைப்பை உருவாக்கி வருகிறது. இந்த 45,000 கி.மீ தொலைத்தொடர்பு வலையமைப்பனது 5G உள்ளிட்ட நிலையான புரேட்பேண்ட் மற்றும் மொபைல் சேவைகளுக்கு முதுகெலும்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்லைன் வீடியோவின் அதிகரித்துவரும் பயன்பாடு மற்றும் இணைய வசதிகளுக்கான எளிய அணுகல் இப்பகுதியில் 5G இற்கான தேவையை மேலும் உயர்த்தியுள்ளது. இலங்கையானது அலைக்கற்றைக்கான ஏலத்துடன் 5G அபிவிருத்தியில் தனது தடத்தை ஸ்தாபித்து வருவதுடன், பிராந்தியத்தில் 5G சோதனைகளை முன்னெடுப்பதற்கு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.
எதிர்காலத்திற்கு தயாரான வர்த்தகநாமமான vivo, 2017 இல் இலங்கைக்கு வந்ததிலிருந்து தொடர்ச்சியாக புத்தாக்க எல்லைகளை விரிவுபடுத்தி வருகின்றது. தொடர்பாடல் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்களின் பரிணாம வளர்ச்சியையும் 5G தரங்களின் வளர்ச்சியையும் இது நெருக்கமாகப் பின்பற்றியுள்ளது. 5G அபிவிருத்தியிலும் ஒரு முன்னணி நிறுவனமாகவும், புதிய தொழில்நுட்பத்தின் தீவிர ஆதரவு நிறுவனமாகவும் திகழும் vivo, உலகளாவிய 5G தொழில்நுட்பத்திற்கு பிரதானமாக பங்களிப்பு செய்யும் நிறுவனமாகவும் இருந்து வருகின்றது. 2016 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், vivo 5G திட்டமிடல் மற்றும் முதலீட்டில் தனது முயற்சிகளை அதிகரித்ததுடன், 5G ஐ அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பம் மற்றும் தரப்படுத்தலின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தை ஸ்தாபித்தது. ஒக்டோபர் 2020 நிலவரப்படி, vivo 2,000 5G காப்புரிமைகளுக்கு விண்ணப்பித்துள்ளதுடன், 3GPP அமைப்புக்கு 4,000, 5G முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது.
vivoவின் முன்னோக்கிய மூலோபாயம் மற்றும் நிலையான முதலீடுகள் 5G தரநிலைகள் மற்றும் முக்கிய தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய நிறுவனத்துக்கு வழிவகுத்துள்ளன. 5G மொபைல்போன் சந்தையில், நுகர்வோருக்கு வளர்ந்து வரும் 5G மொபைல்போன்களின் வரிசை மற்றும் மேம்படுத்தப்பட்ட 5G அனுபவத்தை வழங்க vivo உறுதிபூண்டுள்ளது.
Benfen தத்துவத்தைப் பின்பற்றி சிறந்த தொழில்நுட்பத்தையும் இறுதி பாவனையாளர் அனுபவத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் vivo உறுதியாக உள்ளது. அதன் உறுதிப்பாட்டின் அடையாளமாக, 5G ஆதரவுடன் கூடிய 19 ஸ்மார்ட்போன்களைக் கொண்ட ஒரு தயாரிப்பு வரிசையை, அனைத்து விலை புள்ளிகளிலும் vivo உருவாக்கியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் நுகர்வோருக்கு அதிக தெரிவை வழங்குவதுடன், 5G இன் பொதுப்பயன்பாட்டை துரிதப்படுத்தும்.
அண்மையில், 5G மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றின் ஸ்மார்ட் கலவையுடன் கூடிய IQOO Pro 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியதுடன், சந்தையில் காணப்பட்ட விசேட தேவையைக் கருத்தில் கொண்டு இந்த பிரத்தியேக ஸ்மார்ட்போனை வெளியிட்டிருந்தது. எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்து ‘நுண்ணறிவுடன் கூடிய போன்களை’ உருவாக்க 5G தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்த vivo நன்கு தயார் நிலையில் உள்ளது. vivo தொழில்நுட்ப அபிவிருத்தி செயல்பாட்டில் புதிய வரையறைகளை தொடர்ந்து நிர்ணயித்து வருவதுடன், அதன் பாவனையாளர்களுக்கு எல்லையற்ற சாத்தியக்கூறுகளைக் கொண்ட ஒரு உலகத்தைத் தொடர்ந்து திறந்து வருகிறது.
இலங்கை சந்தை இன்னும் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் உள்ளதுடன், ஏனைய வளர்ந்த ஆசிய நாடுகளுக்கு இணையான ஊடுருவலைக் கொண்டுள்ளது. உறுதியான அபிவிருத்தி மற்றும் புத்தாக்கங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் தொழில்துறை நிபுணர்களினால் எதிர்பார்க்கப்படுகின்றன. விவொ விரைவில் அடுத்த தலைமுறை 5G ஸ்மார்ட்போன்களை நாட்டின் சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதும் போல, எங்கள் நோக்கம் சார்ந்த, அர்த்தமுள்ள புத்தாக்கங்களுடன் இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இந்த வர்த்தகநாமம் எதிர்பார்த்துள்ளது.