உலகளாவிய முன்னோடி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, இன்று தனது புதிய நடுத்தர ஸ்மார்ட்போனான Y51 ஐ இலங்கையில் அறிமுகப்படுத்துவது தொடர்பில் அறிவித்துள்ளது. இளைஞர்களை மையப்படுத்திய Y வரிசையின் புதிய இணைப்பான இது, 8GB RAM + 128 GB ROM கொண்டு பல்வேறு செயலிகளை மிக இலகுவாகப் பயன்படுத்தத்தக்கவாறு அமையப்பெற்றுள்ளது. Al Triple camera அமைப்புடன், புதிய Y51 ஆனது பாவனையாளர்கள் இரவும் பகலும் மிகத் துல்லியமாக படங்களை எடுக்க உதவும் வகையில் Super night camera, stylish night filters முதலிய பல்வேறு உள்ளமைக்கப்பட்ட காட்சிப் படப்பிடிப்பு முறைகளுடனான 48 MP பிரதான பின்புற கெமராவைக் கொண்டுள்ளது.
நீடித்து நிலைக்கும் கெமரா மற்றும் செயலிகளின் பாவனை அனுபவத்தை வலுப்படுத்தும் பொருட்டு 18W Fast Charge தொழிநுட்பத்தைக் கொண்ட, பெரிய 5000mAh Battery பொருத்தப்பட்டதாக vivo Y51 வருகின்றது. இதற்கும் மேலதிகமாக, ஒரே நேரத்தில் கஷ்டமின்றி திரையை இயக்கக்கூடியதும், போனில் நுழையக் கூடியதுமான Side-Mounted Fingerprint Scanner அம்சத்தையும் உள்ளடக்கியதாகவுள்ளது.
vivo Sri Lankaவின் பிரதான நிறைவேற்று அதிகாரி Kevin Jiang இந்த வெளியீடு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “ஒவ்வொரு வெளியீட்டுடனும், vivo ஆனது பலமான மெமரி, சக்திவாய்ந்த செயலிகள், பாரிய மின்கலம், மேன்மையான கெமரான திறன்களுடன் கூடிய புதுமையான கைபேசிகளை விரும்பத்தக்க விலை வரிசையில் பல்வேறு நவநாகரீக வடிவமைப்புகளில் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகின்றது. Y51 உடன் இலங்கை இளைஞர்களின் உள்ளியல்பு மற்றும் இவையெல்லாவற்றையும் உள்ளடக்கிய வளர்ச்சியடைந்து ஸ்மார்ட்போனுக்கான தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் எமது இளைஞர்களை மையப்படுத்திய Y தொடரை நாம் மேம்படுத்தி வருகின்றோம். ஒரு புதிய கைப்பேசியை வாங்க முயற்சிப்பவர்களுக்கும், பழைய கைப்பேசியை தரமுயர்த்த விரும்புபவர்களுக்கும் Y51 ஆனது மிகப்பொருத்தமான தெரிவாக அமையும்,” என்றார்.
Y51, 8GB RAM + 128GB ROM உடன் Qualcomm® Snapdragon™ 6 Series மொபைல் தளத்தினால் வலுவூட்டப்படுவதனால் சக்திவாய்ந்த, நீண்ட நேரம் நீடிக்கும் செயற்பாட்டினை வழங்குகின்றது. மேலும் 18W Fast Charge உடன் கூடிய இதன் 5000mAh மின்கலம் மற்றும் AI power saving தொழில்நுட்பமானது ஒரு தடவை மின்னேற்றத்தில் 17.9 மணித்தியால online HD movie streaming அல்லது 9.9 மணித்தியால resource-intensive games இல் ஈடுபடும் சக்தியை வழங்குகின்றது. நாளாந்தம் தெளிவாக படம்பிடிப்பதற்காக 48MP கெமராவை Y51 கொண்டுள்ளது. இதன் AI triple கெமராவானது இரவோ பகலோ பாவனையாளர்கள் மிகத் தெளிவாக படம் பிடிக்க உள்ளமைக்கப்பட்ட பல தரபட்ட பயன்முறைகளை வழங்குகின்றது. Super Wide Angle Camera, Super Macro Camera மற்றும் Super Night Mode ஆகிய அம்சங்களுடன் இதன் பின்புற கெமரவானது பல புதுமைகளை முயற்சி செய்துபார்க்கும் சிறப்பம்சத்தைக் கொண்டது.
குறைந்த ஒளி நிலைகளில் கூட, புகைப்படங்களில் இரைச்சலைக் (Noise) குறைக்க சூப்பர் நைட் பயன்முறை multi-frame இரைச்சல் குறைப்பு வழிமுறையைப் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. இது கைதேர்ந்த படப்பிடிப்புக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்டைலிஷ் நைட் பிள்டர்களின் நான்கு தொகுப்புகள் மற்றும் நிலையான வீடியோக்களுக்கான Electronic Image Stabilization (EIS) தொழில்நுட்பத்துடன் வருகிறது. அதேசமயம் Y51 இல் உள்ள 16MP முன்பக்க கெமரா சூப்பர் நைட் செல்பி பயன்முறையுடன் வருகிறது, இது நிகழ்நேர முன்னோட்டங்களில் உங்கள் முகத்தில் ஒளி எவ்வாறு விழுகிறது என்பதைப் வியந்து பாராட்ட பாவனையாளர்களை அனுமதிக்கிறது. சுற்றுப்புற வெளிச்ச நிலைகளை தானாக சரிசெய்ய இது Aura திரை ஒளியையும், குறைந்த ஒளி நிலைகளில் சிறப்பான தரத்தைப் பெற இரைச்சல் இரத்துச்செய்யும் வழிமுறையையும் பயன்படுத்துகிறது.
Y51 ஓடியோ காட்சி அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட தனித்துவமான சூப்பர் ஆடியோ ஒலி விளைவுகளுடன் உள்ளமைக்கப்பட்ட ஓடியோ பூஸ்டரைக் கொண்டுள்ளது. எவ்வித தடங்கலும் இன்றி கேமிங்கில் ஈடுபட Multi-turbo 4.0 கேமிங் அனுபவத்துக்கு வலுவூட்டுகின்றது.Halo FullView™ திரையானது வீடியோக்கள் மற்றும் கேம்ஸ்களுக்கு விரிவான மற்றும் முழுமையான காட்சி அனுபவத்தை வழங்குகின்றது.
Titanium Sapphire மற்றும் Crystal Symphony ஆகிய நிறங்களில், அங்கீகரிக்கப்பட்ட vivo விற்பனையாளர்கள், Abans, Dialog மற்றும் Singhagiri காட்சியறைகளில் ரூ.52,990 என்ற விலையில் இந்த Y51 ஸ்மார்ட்போனைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த மொடலைக் கொள்வனவு ஒவ்வொரும் Dialog இடமிருந்து 40 GB டேட்டாவினைப் பெற்றுக்கொள்வதுடன், இது ஜனவரி 13 ஆம் திகதியிலிருந்து 2 மாதங்களுக்கு (மாதாந்தம் 20GB) செல்லுபடியாகும்.