Latest News Tamil

One Galle Face இல் புதிய Premier Center இனைத் திறந்த Hutch

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவை வழங்குனரான Hutch, தனது புதிய Premier Center இனை கொழும்பின் மிகவும் மதிப்புமிக்க விற்பனை முகவரிகளில் ஒன்றான One Galle Face Mall  இல் ஆரம்பித்துள்ளது. Hutch Premier Center, முக்கிய அடையாளமாக மாறியுள்ள சமுத்திரத்தை நோக்கியவாறு அமைந்துள்ள இந்த விற்பனை மையத்தின் 4 ஆவது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது.

Hutch Premier Center, 2020 டிசம்பர் 29 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டதுடன், இதன் பிரதம விருந்தினராக திருமதி. யோகலதாகினி திருக்குமார், Hutch நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. திருக்குமார் நடராசா மற்றும் Hutch நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவத்தினரும் கலந்து கொண்டனர். ஒரு முழுமையான வாடிக்கையாளர் சேவை மையமான Hutch Premier Center, ஒரே கூரையின் கீழ் Hutch இன் பல தரப்பட்ட சேவைகளையும் வழங்கவுள்ளது.

இந்த நிலையமானது One Galle Faceஇன் பல வகையான அனுபவங்களுக்கான பெறுமதியான சேர்வையாகும். Hutch வாடிக்கையாளர்கள் One Galle Face இற்கு வரும் போது இந்த One Galle Faceஇற்கு வருகை தருவதன் மூலம் நட்பான தொந்தரவு இல்லாத சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட CK Hutchison Holdings Limited இன் இந்த உள்நாட்டு துணை நிறுவனமான Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd, இலங்கையில் உள்ள மொபைல் வலையமைப்பு சேவை வழங்குநர்களிடையே முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக தன்னை நிரூபித்தது. 2019 ஆம் ஆண்டு Etisalat நிறுவனத்தை கையகப்படுத்தியதன் பின்னர் HUTCH மொபைல் வலையமைப்பு வேகமாக வளர்ச்சியடைந்ததுடன், தற்போது 078 மற்றும் 072 ஆகிய இரு சந்தாதாரர்களுக்கும் சேவை வழங்குகின்றது. HUTCH இன் புரட்சிகரமான 4G விரிவாக்கமான ஒரு திருப்பு முனையாக அமைந்ததுடன், 4G வலையமைப்பு மையமாக அதனை முன்னிலைப்படுத்தியது. இந்த விரிவாக்கமானது HUTCH, “Bigger and Better” சேவை வழங்க உதவியது.

.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *