Latest News Tamil

இ-சுவாபிமானி விருதுகளுக்காக ICTA இற்கு இணை அனுசரணை வழங்கும் Huawei

உலகின் முன்னணி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) வழங்குனரான Huawei, சமூகத்தின் நல்வாழ்வுக்காக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப கருவிகள் மற்றும் அப்ளிகேஷன்களின் பயன்பாட்டின் மேன்மையை அங்கீகரிக்கும் இ-சுவாபிமானி டிஜிட்டல் சமூக தாக்க விருதுகள் நிகழ்வுக்காக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்திற்கு (ICTA) இணை அனுசரணை வழங்குகின்றது. இ-ஸ்வாபிமானி என்பது அரசாங்கத்தின் உச்ச ICT நிறுவனமான இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் ஒரு முயற்சியாகும். இது அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் செயல்படுகிறது.

சமூக மாற்றத்திற்கான “ஊக்கியாக அமையும் புத்தாக்கங்களை” பாராட்டும் ஒரு தளமாகத் திகழும் இ-ஸ்வாபிமானி,  சமூகத்தின் நலனுக்காக டிஜிட்டல் தீர்வுகளை கௌரவிக்கும் இலங்கையில் உள்ள ஒரே தேசிய விருதாகும்.

2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இ-சுவாபிமானி கடந்த ஆண்டுகளில் சிறந்த உள்ளூர் திறமைகளை வெற்றிகரமாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதுடன், மக்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக காரணிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதன் மூலம் அவர்களை அதிக உயரத்திற்கு செல்ல ஊக்குவிக்கிறது. சமூக நலன்  சார்ந்த டிஜிட்டல் அப்ளிகேஷன்கள் மற்றும் தீர்வுகளை அடையாளங்கண்டு, கொண்டாடுவதனால் இ-சுவாபிமானியின்  எண்ணக்கருவானது தனித்துவமானதென்பதுடன் புதுமையானதாகும்.

“இலங்கையின் சிறந்த ICT திறமைகளை அங்கீகரிக்கும் டிஜிட்டல் சமூக தாக்க விருதுகளான இ-சுவாபிமானிக்கு இணை அணுசரணை வழங்க Huawei  போன்ற உலகளாவிய முன்னணி ICTநிறுவனம் முன் வந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், அதே நேரத்தில் இளைய தலைமுறையினரையும், டிஜிட்டலுக்கு தயாராக இருப்பதற்கு ICT தொழில்நுட்பத்தின் புதிய அபிவிருத்தியுடன் தங்கள் திறன்களையும் வளர்த்துக் கொள்வதற்கு ஊக்குவிக்கின்றோம்.  இந்த தேசிய விருதுகளானது சமூகத்தின் தேவைகளுக்கு உதவும் பரந்த அளவிலான டிஜிட்டல் அப்ளிகேஷன்களின் வளர்ச்சிக்கு பெரும் ஆர்வத்தைத் தூண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் (ICTA), தலைவர் ஜயந்த டி சில்வா தெரிவித்தார்.

சீரான சமூக மாற்றத்தை  நோக்கமாகக் கொண்ட இ-சுவாபிமானி 2020 பல பிரிவுகளுக்கு விண்ணப்பங்களை கோருகின்றது. 26 வயதிற்குட்பட்டவர்களுக்கு இளைஞர் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சமுதாயத்திற்கான பங்களிப்புடன், ஒவ்வொரு பிரிவின் கீழும் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மூலோபாய அம்சங்களும் விண்ணப்பங்களில் மதிப்பீடு செய்யப்படும்.

“இது இலங்கையின் ICT திறன்கள், திறமை மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றின் மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் Huawei நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மேலும் உறுதி செய்யும். தொற்றுநோய்க்கு மத்தியில் அண்மைய மாதங்களில், அதற்கு பதிலளிக்கும் முகமாக பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கான அடித்தளத்தை இடுவதற்கு இலங்கை பல முயற்சிகளை மேற்கொண்டமை பாராட்டத்தக்கது. “தொற்றுநோயையும் மீறி இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. மேலும் திறமையான ICT திறமைகளுக்கான தேவை எப்போதும் அதிகரித்து வருகிறது. Huawei என்ற வகையில் நாம் ICTA போன்ற ICT தொழில்துறை பங்காளர்களுடன் இணைந்து போட்டித் தன்மையுடன் கூடிய நன்மையுடன் ICT திறமைகளை பயிற்றுவிப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான இந்த அழைப்புக்கு பதிலளிக்க எதிர்ப்பார்ப்பதுடன், இலங்கையில் டிஜிட்டல் மாற்றத்திற்கான முக்கிய வழிநடத்துனராக தொடர்ந்து இருப்போம்” என்று Huawei Sri Lanka இன் பிரதான நிறைவேற்று அதிகாரி லியாங் யி தெரிவித்தார்.

“இணைய புரோட்பேண்ட் அணுகலின் சிறந்த அனுபவத்தை வழங்குவதற்கும், டிஜிட்டல் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், இலங்கையின் எதிர்கால தலைமுறையினரின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தவும் இலங்கையின் ICT மாற்றத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் நாங்கள் பெருமையடைகின்றோம்,” என Huawei Sri Lanka இன் பிரதான நிறைவேற்று அதிகாரி லியாங் யி மேலும் குறிப்பிட்டார்.

தொற்றுநோயின் பின்னடைவுகளிலிருந்து நாடுகள் மீண்டு வரும் நிலையில், உலகளவில் அரசாங்கங்களும் தொழில்துறைகளும் ஒன்றிணைந்து திறமைகளை வளர்க்கவும், புத்தாக்கங்களை ஊக்குவிக்கவும் முன் வரவேண்டும். கொவிட் – 19 உலகெங்கிலும் டிஜிட்டல் தயார்நிலை மற்றும் இலங்கையை ஆதரிப்பதன் அவசியத்தை விளக்கியுள்ளதுடன், தொழில்நுட்ப புத்தாக்கங்கள் ஊடாக  செலவீனம் மற்றும் கவரேஜ் சார்ந்த செலவீனங்களை குறைப்பதைத் தொடரும் இணைப்பு, அப்ளிகேஷன்கள் மற்றும் திறன்கள் ஆகிய மூன்று முன்னுரிமைகள் மீது கவனம் செலுத்தும் உலகளாவிய முயற்சியான Tech4ALL உள்ளடங்களாக பலவற்றை இலங்கையில் இவ் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து அண்மைக்காலமாக Huawei அறிவித்துள்ளது. இந்த முயற்சியின் மூலம் Huawei தொழில்நுட்பச் சூழல் அமைப்பை மேம்படுத்துத்துவதுடன், பல்வேறு சமூகங்கள் மற்றும் தொழில்களுக்கான கூடுதல் அப்ளிகேஷன்களை உருவாக்க டெவலப்பர்களுக்கு உதவும். அதே நேரத்தில் டிஜிட்டல் திறன்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் Huawei அரசாங்கங்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் பிற தொழில்துறைகளுடன் இணைந்து செயல்படும்.

Huawei இலங்கையில் 1998 முதல் செயல்பட்டு வருவதுடன், உள்நாட்டின் பிரதான தொலைதொடர்பு நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் தொழில்துறை வாடிக்கையாளர்களுடன் விரிவான மற்றும் ஆழமான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது. இலங்கை மனித மூலதனம் நிறைந்த நாடென்பதுடன், பல்கலைக்கழக பட்டதாரிகள் மற்றும் நிறுவனங்களின் திறன்கள், செயல் வல்லமைக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க உயர் மட்ட தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், இளைஞர் திறமைகளை தொடர்ந்து உருவாக்க  Huawei அர்ப்பணிப்புடன் உள்ளது.

இலங்கையின் வளர்ச்சிக்காக ICTதிறமைகளை வளர்ப்பதற்கும்,  டிஜிட்டல் திறன்களின் அபிவிருத்திக்கு உள்நாட்டு தொழில்நுட்ப சூழல் கட்டமைப்பு மற்றும் பங்காளர்களுடனான நீண்டகால ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும் Huawei Sri Lanka இந்த ஆண்டு புதிய முயற்சிகளில் இறங்கியது. இலங்கை தனது தொலைநோக்கு பார்வையை பூர்த்தி செய்ய உதவும் முகமாக Huawei நிறுவனத்தின் நீண்ட கால டிஜிட்டல் உள்வாங்கல் முயற்சியான ‘TECH4ALL’ இன் ஓர் அங்கமாக படித்த மற்றும் திறமையான இளைஞர்கள் ICT களத்தில் தங்கள் திறமைகளை மேலும் மேம்படுத்துவதற்கும், எப்போதும் வளர்ந்து வரும் ICT துறையில் போட்டித்தன்மையுடன் இருப்பதற்கும் இலங்கையின் முன்னணி தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தமும் (MoU) அடங்கும். இந்த முயற்சிகள் இலங்கை மாணவர்களுக்கு எதிர்கால மற்றும் தொழில்துறைக்கு தயாராக இருப்பதற்கும், தகவல் தொழில்நுட்பத் துறையின் எதிர்கால கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். பல ஆண்டுகளாக Huawei, இலங்கையில் ICT திறன் கட்டமைப்பின் அபிவிருத்தியை 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட Huawei Seeds எதிர்காலத் திட்டம், திறமையான இளைஞர்களுக்கு உள்ளகப் பயிற்சி வழங்குதல் மற்றும் ICT திறன் தொழில்துறை பயிற்சி போன்ற செயற்திட்டங்களின் மூலம் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.

Huawei தொடர்பில்

1987 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட Huawei தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) உள்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி உலகளாவிய வழங்குநராகும். முழுமையாக இணைக்கப்பட்ட, அறிவார்ந்த உலகத்திற்காக ஒவ்வொரு நபருக்கும், வீடு மற்றும் நிறுவனத்துக்கும் டிஜிட்டலைக் கொண்டு வருவதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். Huawei இன் தயாரிப்புகளின் வரிசை, தீர்வுகள் மற்றும் சேவைகள் போட்டித்தன்மை மிக்கதுடன் பாதுகாப்பானது.  தொழில்நுட்ப சூழல் கட்டமைப்பு பங்காளர்களுடன் திறந்த ஒத்துழைப்பு மூலம், நாங்கள் எமது வாடிக்கையாளர்களுக்கு நீடித்த பெறுமதியை உருவாக்குகிறோம், மக்களை வலுப்படுத்துவதற்கும், வீட்டு வாழ்க்கையை வளப்படுத்துவதற்கும், அனைத்து வடிவங்கள் மற்றும் அளவிலான அமைப்புகளில் புதுமைகளை ஊக்குவிப்பதற்கும் உழைக்கிறோம். Huawei இல், புத்தாக்கமானது வாடிக்கையாளருக்கு முதலிடம் அளிக்கிறது. நாம் அடிப்படை ஆராய்ச்சிகளில் பெரிதும் முதலீடு செய்வதோடு, உலகை முன்னோக்கி நகர்த்துவதை நோக்கமாகக் கொண்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களில் கவனம் செலுத்துகின்றோம். நாம் சுமார் 194,000 ஊழியர்களைக் கொண்டுள்ளதுடன், மேலும் 170 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் செயல்படுவதோடு, உலகெங்கிலும் மூன்று பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு சேவையை வழங்குகின்றோம். 1987 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட Huawei அதன் ஊழியர்களுக்கு முழுவதும் சொந்தமான தனியார் நிறுவனமாகும். தயவு செய்து  ஒன்லைனுக்கு விஜயம் செய்யுங்கள்: https://www.huawei.com/en/

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *