நாட்டின் முன்னோடி நுகர்வோர் பொருட்கள் வர்த்தகநாமமாகவும் தையல் இயந்திரங்களை உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாகவும் திகழும் சிங்கர் வீட்டுத் தேவைகள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கான தையலை மேம்படுத்தும் நோக்கில் மின்சாரத்தை சேமிக்க உதவும் புதிய தையல் இயந்திர உற்பத்தி வடிவங்களை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சமீபத்திய இயந்திரங்கள் ஒரு தையல் தேவையை முடிக்க தேவையான அனைத்து வடிவங்களையும் உள்ளடக்கியதுடன் இப்போது தையல் துறையில் வீடு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தையல் தொழில் முயற்சிகளில் பயன்படுத்த ஏதுவாக திறம்பட வேலைப்பாடு கொண்டு பூர்த்தி செய்யப்பட்ட தையல் வேலைகளுடன் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்வதற்கு உங்களுக்கு இடமளிக்கின்றது. சிங்கரின் சமீபத்திய தையல் இயந்திரங்கள் கொண்டுள்ள தொழில்நுட்பங்கள் காரணமாக 70% வரை மின்சாரத்தை சேமிக்கும் வாய்ப்பு பாவனையாளர்கள் அனுபவிக்கக்கூடிய ஒரு தனித்துவமான நன்மையாகும்.
சிங்கரின் சமீபத்திய நேரடி இயக்கி (Direct Drive) தொழில்நுட்ப சிறப்பம்சம் கொண்ட இயந்திரங்கள் 70% வரை மின்சாரத்தை சேமிக்க இடமளிப்பது நுகர்வோர் அனுபவிக்கக்கூடிய ஒரு தனித்துவமான நன்மையாகும். இன்று தொழில் ரீதியாக தையல் துறையில் உள்ளவர்கள் மட்டுமல்ல பெரும்பாலான வீட்டு நுகர்வோர் தங்கள் தையல் தேவைகளை பூர்த்தி செய்ய அதிவேக தையல் இயந்திரங்களை வாங்க ஆசைப்படுகிறார்கள். தையல் இயந்திரங்களுக்கான தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு சிங்கர் 35 வரையான புதிய இயந்திர வடிவங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளரின் தேவைகளுக்கு ஏற்றவாறு சமீபத்திய தொழில்நுட்ப சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்த சிங்கர் அவ்வப்போது உலகப் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களுடன் கைகோர்த்து வருகிறது. நேரடி இயக்கி தொழில்நுட்பம் மின்சாரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல் கிளட்ச் மோட்டார் எந்திரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த சத்தம் குறைந்த வெப்பநிலை மற்றும் குறைந்த அதிர்வு ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
சந்தையில் உள்ள பல வகையான தையல் இயந்திரங்களை எடுத்துக்கொண்டால் தையல் வேலைகளுக்கு இரட்டை ஊசிகள் ஒற்றை ஊசி மற்றும் ஓவர்லாக் முறைமை கொண்டவையாக காணப்படுகின்றன. இந்த வகையான இயந்திரங்கள் தையல் கடைகள் மற்றும் தைத்த ஆடைகளை வழங்கும் சிறிய அளவிலான ஆடை தொழிற்சாலைகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் தையல் தொழில் விரிவடையும் போது அதிகமான மக்கள் உயர் தொழில்நுட்ப தையல் பயன்பாட்டை எளிதாக்க விரும்புகின்றனர்.
இதன் விளைவாக சிங்கர் நிறுவனம் எம்பிராய்டரி தையல் பொத்தான்கள் பொருத்தல் தையல் பொத்தான்கள் பதித்தல் உருகி ஸ்னாப் பொத்தான்கள் வக்கியூம் அயன் செய்தல் லேசர் வெப்ப பரிமாற்றம் மற்றும் தனித்தனியாக பொறிக்கக்கூடிய இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்று தையல் தொழில் ஆடைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை. தொழில்துறையில் உள்ளவர்கள் மற்றும் தொழில்துறையில் நுழைய விரும்புவோரின் தேவைகளுக்கு ஏற்ப பலவிதமான தையல் இயந்திரங்களை சிங்கர் வழங்குகிறது. சந்தையில் கிடைக்கும் ஒற்றை ஊசி (single needle) இயந்திரங்களிலிருந்து சமீபத்திய நேரடி இயக்கி தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ZOJE-MCZJ9513 இயந்திரத்தின் மூலமாகரூபவ் தையல் இயந்திரங்களுக்கான மின்சார செலவை 70% வரை குறைக்க முடியும் என்பதை சிங்கர் உறுதி செய்கிறது. இன்றுவரை சந்தையில் பயன்படுத்தப்படும் தையல் இயந்திரங்களில் அதிவேகம் கொண்டதாக ஒப்பீட்டளவில் குறைந்தளவு மின்சாரத்தை நுகரும் மோட்டருடன் நேரடி இயக்கி தொழில்நுட்பத்தை இணைத்து ZOJE வர்த்தகநாமத்தில் சமீபத்திய ஒற்றை ஊசி இயந்திர வடிவம் சந்தையில் வெளிவந்துள்ளது. இயந்திரத்தில் காலை வைக்கும் போது மட்டுமே அது மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. இது சமீபத்திய தொழில்துறை அதிவேக தையல் இயந்திரங்களின் எந்திரத்திலிருந்து வரும் சத்தம் மற்றும் வெப்ப வெளியீட்டைக் கட்டுப்படுத்துகிறது. அதிவேக தையல் இயந்திரங்களின் வேகக் கட்டுப்பாட்டை வழக்கமாக காலால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்பதால் பயிற்சி பெறாதவர்கள் அதை நாடுவதற்கு பின்நிற்கின்றனர். எனினும் மேற்குறிப்பிட்ட நன்மைகள் காரணமாக இந்த சமீபத்திய வடிவ தையல் இயந்திரத்திற்கு இன்று சந்தையில் பெரும் தேவை நிலவுகின்றது. இது தையலுக்கு போதுமான ஒளியை வழங்க இயந்திரத்தின் ஊசியின் அருகே பொருத்தப்பட்ட பல உயர்திறன் கொண்ட LED விளக்குகளையும் கொண்டுள்ளதால் கூடுதல் மின் விளக்குகள் இல்லாமல் தையல் பணிகளை மேற்கொள்ள முடியும்.
தேவைக்கேற்ப ஊசியை மேலே அல்லது கீழ் நோக்கி நகர்த்திக் கொள்ளவும் முடியும். வாடிக்கையாளர்களுக்கான சிங்கரின் வேகமான ஓவர்லாக் இயந்திரம் 2 ஊசிகள் மற்றும் 3, 4, 5 மற்றும் 6 நூல்கள் 3 ஊசிகள் கொண்ட தொழிற்பாடுகளுடன் நிமிடத்திற்கு 5000 முதல் 5500 தையல் வரை முன்னெடுக்கும் ஆற்றல் கொண்டவை. நேரடி இயக்கி தொழில்நுட்பத்தின் காரணமாக இந்த சமீபத்திய ஓவர்லாக் இயந்திரங்கள் 70% வரை மின்வலுவை மிச்சப்படுத்த முடியும் என்று சிங்கர் கூறுகிறது.
சமீபத்திய தையல் இயந்திர வடிவங்கள் மத்தியில் சிங்கர் அறிமுகப்படுத்திய MCZJ8000E ஒரு வழக்கமான இயந்திரமாக அல்லாமல் இயந்திரத்தை தானாக இயக்கும் திறனையும் கொண்டுள்ளது அதன் வேகத்தைக் குறைத்து தானாகவே நூலை வெட்டி விரும்பிய வடிவத்தை ஒரு குறிப்பிட்ட தூரத்தில் முன்கூட்டியே வடிவமைக்கும். கால்சட்டை மற்றும் சட்டைகளின் பைகளை எளிதில் மற்றும் மடிப்பதற்கு இந்த இயந்திரங்கள் இப்போது ஆடைத் தொழிலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. வீடு அல்லது தொழில்ரீதியாக தையலில் ஈடுபடுவோருக்கு இத்தகைய இயந்திரத்தின் நன்மைகள் அற்பமானவை அல்ல. சட்டைப்பைகளின் தையலை இலகுவாக்கும் SDY- JT 60-S, பையின் விளிம்புகளை தைக்கவும் SDY JT DK அதில் துளைகளை வெட்டவும் மற்றும் SDY JD- 50- Q இன் கைப்பிடியை தைக்கவும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது தவிர வாடிக்கையாளர்கள் தையல் தொழிலுக்குத் தேவையான எந்தவொரு கருவிகளான ஊசிகள் கத்தரிக்கோல் டிரிம்மர்கள் ஷட்டில் காக்ஸ் பாபின் போன்றவற்றை நாடளாவிய ரீதியில் சிங்கர் காட்சியறைகளில் கொள்வனவு செய்ய முடியும். அதே நேரத்தில் நுகர்வோர் சிங்கரிடமிருந்து சிறிது காலத்திற்கு முன்பு வாங்கிய தம்முடைய பழைய கிளட்ச் மோட்டர்களை அதிவேக மோட்டார் பொருத்தப்பட்ட இயந்திரங்களுடன் மாற்றுவதற்கான வாய்ப்பை இப்போது பெற்றுள்ளனர். சமீபத்திய தொழில்துறை அதிவேக இயந்திரத்தை வாங்க கட்டுபடியாகாத நுகர்வோருக்கு இது மிகப்பெரியதொரு நன்மை. நேரடி இயக்கி தொழில்நுட்பத்துடன் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு தையல் இயந்திரத்திற்கும் மின்சுற்று மற்றும் மோட்டாருக்கு மூன்று ஆண்டுகள் வரை பிரத்தியேக உத்தரவாதத்தை சிங்கர் வழங்குகிறது. கொள்வனவு செய்த இயந்திரங்களுக்கு ஒரு வருடம் இலவச பழுதுபார்ப்பையும் சிங்கர் வழங்குகிறது.
நாடளாவியரீதியில் உள்ள சிங்கர் சேவை மையங்கள் இந்த அதிவேக தொழில்துறை இயந்திரங்களை சரிசெய்ய பயிற்சி பெற்ற தொழில்நுட்பக் அணிகளைக் கொண்டுள்ளன மேலும் இயந்திரங்கள் தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அதைப் பற்றி கலந்துரையாடி ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள நாடளாவியரீதியிலுள்ள சிங்கர் சேவை மையங்களுக்கு பிரதிநிதி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் யூனியன் பிளேஸில் உள்ள சிங்கர் தையல் இயந்திர கிளையில் 16 தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய அணி இந்த இயந்திரங்களை தொடர்பான விடங்களை கையாள நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் சிங்கர் தையல் இயந்திர வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுவதும் சேவைகளை வழங்க 30 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவையும் சிங்கர் நியமித்துள்ளது. சிங்கரிடமிருந்து இயந்திரங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் சிங்கர் ஃபெஷன் அக்கடமி கிளைகளில் இலவச பயிற்சி அமர்வுகளில் கலந்து கொள்ளலாம் மற்றும் விரும்பினால் இயந்திரங்கள் குறித்த பயிற்சியையும் பெறலாம்.
சமீபத்திய இயந்திரங்களை பணக்கொடுப்பனவு அடிப்படையில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக சிங்கர் ஒரு தனித்துவமான தள்ளுபடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் நாடளாவியரீதியிலுள்ள அனைத்து காட்சியறைகளிலும் அவை கிடைக்கின்றன. 12 மாதங்கள் 15 மாதங்கள் மற்றும் 18 மாதங்களுக்கு வட்டி இல்லாத தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களையும் சிங்கர் வழங்குகிறது.
இயந்திரம் பற்றிய அனைத்து தகவல் விவரங்களையும் சிங்கர் அழைப்பு மையத்திற்கு 0115 400 400 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலமோ அல்லது www.singer.lk என்ற இணையதளத்தை அணுகுவதன் மூலமோ பெற்றுக்கொள்ள முடியும்.