Latest News Tamil

இலகுவான வீட்டு திருத்தப் பணிகளை எளிதாக்கும் FASTFIX செயலி

இறுதிப் பாவனையாளர்களுக்கான சேவை வழங்குனர்களுடன் எளிதாக ஒன்றினைக்கும் இலங்கையின் முதலாவது செயலியான FASTFIX  இன்று முதல் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இச் செயலி மூலம் வழங்கப்படும் சேவையை விரிவுபடுத்தும் முகமாக FASTFIX முழுவதும் உரித்தான துணை நிறுவனமாக Anton கை கோர்த்துள்ளது. இது குழாய் தொடர்பான பழுதுபார்த்தல் பணிகளை சௌகரியமாக முன் எடுப்பதற்கான வாய்ப்பினை வழங்குகின்றது. இந்த செயலியானது பொருத்தமானவர்களை தொடர்பு கொள்ளவும் அதற்குரிய சேவைகளை அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செய்து கொள்ளக்கூடியதாக உதவுகின்றது.

இந்த புத்தாக்க செயலியானது இரண்டு பதிப்புகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன; ஒன்று நுகர்வோருக்கானதும் மற்றொன்று சேவை வழங்குநர்களுக்கானதாகும். நுகர்வோர் ஒருவர் அருகிலுள்ள சேவை வழங்குநரைத் தெரிவு செய்யும் போது, ​​அந்த சேவை வழங்குநர் தனது worker செயலியில் ஓர் அறிவிப்பினை பெறுவார், பின்னர் இருவரும் செயலியில் வழங்கப்பட்டுள்ள  ஓடியோ அல்லது வீடியோ அழைப்பின் மூலம் தொடர்புகொள்ள முடியும். இந்த செயலியை குழாய் திருத்த பணிகளுக்காக மாத்திரமே உபயோகிக்க முடியும். எதிர்காலத்தில் மின்னியலாளர், தச்சர்கள், வளிச்சீராக்கி திருத்துநர் மற்றும் பல திறமையான தொழிலாளர்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு பல நிறுவனங்களுடன் கை கோர்க்கும் செயன்முறையில் FASTFIX  ஈடுபட்டுள்ளது.

இந்த செயலியின் வீடியோ அழைப்பு வசதியானது பாவனையாளர்கள் தங்கள் தேவையை சேவை வழங்குநரிடம் விளக்க உதவுவதுடன்,  பிரச்சினை சிறியதெனில் மெய்நிகர் முறையில் அதனை காண்பித்து திருத்திக் கொள்ள முடிவதுடன், கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், சேவை வழங்குநர்கள் தேவையான உபகரணங்களுடன் வாடிக்கையாளரின் இருப்பிடத்துக்கே சென்று அவசியமான திருத்த வேலைகளை முன்னெடுப்பர். இந்த  செயலியானது பாவனையாளர்கள் தங்கள் தகவல்களைப் பதிவு செய்யும் வசதியைக் கொண்டுள்ளமையினால், தொழிலாளர்கள் அவற்றைப் பெற்றுக்கொண்டு உரியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. மேலும் இரு தரப்பினரினதும் சௌகரியத்துக்கு ஏற்ப வருகை நேரங்களையும் திட்டமிட்டுக்கொள்ள முடியும்.

இந்த செயலி தொடர்பில் தனது கருத்துக்களை தெரிவித்த FASTFIX இன் செயற்பாடுகளுக்கான தலைவர் கிரிஷாந்தா பத்திராஜா, “FASTFIX செயலியை அறிமுகம் செய்வதில் நாங்கள் மிகவும் பெருமையடைவதுடன், குழாய் திருத்தலோ, மின்சாரம் தொடர்பான சிக்கலோ அல்லது வேறு எதுவும் பழுதுபார்த்தலோ, எந்த வீட்டுச் சேவை சார்ந்த பிரச்சினைகளுக்கும் மிகவும் சௌகரியமானதாக இது இருக்குமென நாம் நம்புகின்றோம். அனைவருமே அன்றாட பழுதுபார்ப்புகளில் அனுபவம் வாய்ந்தவர்கள் அல்ல, மேலும் இந்த வேலையை முன்னெடுக்க அது தொடர்பான அறிவு மற்றும் அனுபவமுள்ள ஒரு நிபுணரை நியமிப்பது பாதுகாப்பானது மற்றும் மிகவும் பொருத்தமானது. எனினும், சரியான வேலைக்கு சரியான நபரைக் கண்டுபிடிப்பது தற்போது மிகவும் கடினமானது, மேலும் வேலையைச் செய்வதற்கான விலைகளை பேசித் தீர்மானிக்கும் போது மக்கள் பெரும்பாலும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதுபோன்ற ஒரு செயன்முறைக்கு ஒரு செயலி உதவுமென யாரும் நினைத்ததில்லை. ஆனால் இப்போது FASTFIX செயலியை தரவிறக்கி, ஒரு நிபுணருடன் இணைந்து வீட்டுப் பிரச்சினைகளுக்கு வசதியாகவும் செலவு குறைந்த அளவிலும் தீர்வு காண்பது நம் விரல்களின் நுனியில் உள்ளது.” இந்தத் தளத்தில் உள்ள குழாய் திருத்துநர்கள் நன்கு பரிசோதிக்கப்படுவதுடன், தொழில்சார் நடத்தையை உறுதிப்படுத்த செயலியானது வழக்கமான பயிற்சியை உறுதி செய்யும் என்பதையும் அவர் மேலும் விளக்கினார்.

“பழுதுபார்க்க தேவையான பொருட்களைத் தேடும் செயற்பாட்டில் பாவனையாளர்களுக்கு மேலும் உதவும் நோக்கில் அருகிலுள்ள Anton தயாரிப்பு நிலையத்தைக் கண்டறியும் அம்சம் உள்ளிட்ட மேலதிக அம்சங்கள் இச் செயலியில் உள்ளடக்கப்படும். இச் செயலியின் மூலம் அவற்றை சிறப்பு விலையில்  கொள்வனவு செய்ய முடியும். மீண்டும் வேலைக்கு திரும்பும் தேவை கொண்ட நாளாந்த வருமானம் பெறுபவர்களுக்கு இந்த சேவையை விஸ்தரிப்பது மகிழ்ச்சிக்குரியது. குழாய் திருத்துநர்கள் மற்றும் இறுதிப் பாவனையாளர்களுக்கு, குறிப்பாக கொவிட்- 19 காலப்பகுதியில் இந்த சேவையை வழங்க FASTFIX உடன் இணைந்து  செயற்படுவதில் St. Anthony’s Industries மகிழ்ச்சியடைகிறது, “ என St. Anthony’s Industries Group இன் நிறைவேற்று பணிப்பாளர், ஜீவன் ஞானம் தெரிவித்தார்.

கொவிட் – 19 வேளையில் பெருமளவில் பாதிக்கப்பட்ட குழுக்களில் ஒன்றாக நாளாந்த வருமானம் பெறுபவர்கள் இருப்பதால் மிகப்பெரிய நிதிச் சிக்கலுக்கு அவர்கள் முகங்கொடுக்க வேண்டியிருந்தது. இந்த செயலியானது வேலை இழந்தவர்கள் வேலை தேடுவதற்கும், அன்றாட செலவீனத்தை குறைந்தபட்சம் ஈடுகட்டுவதற்கான வருமானத்தை அவர்கள் பெற்றுக்கொள்வதற்குமான தளத்தை வழங்கும். சேவைகளின் தரத்தைப் பொறுத்து, அவர்கள் தொடர்ச்சியாக வேலையைப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன்,  FASTFIX  செயலி மூலம் பெறும் வேலைகளால் அவர்கள் நிரம்பியிருப்பர். அந்த வகையில், இந்த செயலியானது சமூகத்தின் ஒரு பெரும் பகுதிக்கு முன்னேறவும், நிதி ரீதியாக நிலையானதாக இருக்கவும் பங்களிக்கிறது.

தொழிலாளர்கள் மேற்கொள்ளும் சேவைகளை மதிப்பிடுவதற்கான அம்சத்தையும் இந்த செயலியானது கொண்டுள்ளமையானது, சேவை வழங்குநர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான ஒரு வாய்ப்பாகும். மேலும், இது அவர்கள் தொடர்ந்து உயர் தரமான சேவையை வழங்க ஊக்குவிக்கின்றது. இந்தச் செயலியானது  தற்போது செயற்பாட்டில் உள்ளதுடன், கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு தனது சேவையை வழங்குகின்றது. தற்போது Android Play Store ஊடாக இதனை தரவிறக்கம் செய்ய முடிவதுடன்,  iOS பதிப்பு எதிர்வரும் சில மாதங்களில் வெளியாகவுள்ளது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *