Latest News Tamil

புது வகை சலவைத்தூளான Diva Fresh Araliya வை அறிமுகப்படுத்தும் திவா



திவா, எப்போதும் ஒரு உண்மையான உள்ளூர் தன்மையை பிரதிபலிக்கும் தயாரிப்புகளை உருவாக்குவதையே விரும்புகிறது. குறிப்பாக வாசனையின் அடிப்படையில் அதனை மேற்கொள்கிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Diva Fresh Araliya (திவா ஃப்ரெஷ் அரலிய) சலவைத்தூளானது வேறுபட்ட அமைப்பைக் கொண்டதல்ல. Diva Fresh Araliya உண்மையான இலங்கை நறுமணத்துடன் வருவதுடன், ஆடைகளுக்கு சிறந்த புத்துணர்ச்சி மற்றும் தூய்மையை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து Diva Fresh தயாரிப்புகளும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதோடு, அவை நீண்ட நேரத்திற்கு நீடிக்கும் வாசனைத் திரவியங்களை கொண்டுள்ளன.

Hemas Consumer Brands நிறுவனத்தின் முதன்மையான சலவை வர்த்தக நாமமான திவா, ஒவ்வொரு குடும்பத்தின் சலவைத் தேவைகளுக்கும் ஒரு முழுமையான தீர்வை வழங்கும் நோக்கில் 2003ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இது துணி துவைப்பதில் உள்ள சலிப்பை புரிந்து கொண்ட ஒரு உண்மையான இலங்கை வர்த்தக நாமமாகும். இன்று வரை, இலங்கையிலுள்ள குடும்பங்களுக்கான சலவைத் தீர்வுகளை திவா உருவாக்கி வருவதுடன், Diva Fresh Araliyaவின் அறிமுகமும் இந்த அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.

Diva Fresh யில் உள்ள 3-in-1 (3 விடயங்களையும் ஒன்றாகக் கொண்ட) செயற்பாடான, Perfume Magic (நறுமணத்தின் மாயாஜாலம்) மூலம் சிறந்த நறுமணம் வழங்கப்படுகிறது; அதே நேரத்தில் Fibre Clean Technology (இழை தூய்மையாக்கும் தொழில்நுட்பம்) மற்றும் Optical Brighteners (ஒளியின் பிரகாசம்) ஆகியன ஆடைகளுக்கு அதிக சுத்தம் மற்றும் பிரகாசத்தை வழங்குகிறது. Diva Fresh குடும்பத்தின் ஏனைய வகைகளாக Rose, Sepalika, Jasmine, Purple Lotus, Lavender ஆகியன அடங்குகின்றன. இவை எலுமிச்சையுடன் ஒரு தனித்துவமான நறுமணத்தை வழங்குகிறது. Diva Fresh Araliya 1 கிலோகிராம் பொதிகளில் நாடு முழுவதும் கிடைக்கிறது. அத்துடன் Hemas E-store யிலும் (https://hemasestore.com/brand/diva/) ஒன்லைன் மூலம் அதனை கொள்வனவு செய்யலாம்.

END

Photo Caption 
Diva Fresh Araliya & Lime

Hemas Consumer பற்றி

வீடு மற்றும் தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, பல ஆண்டுகளாக வலுவான நோக்கம் கொண்ட தரக்குறியீடுகள் கொண்ட தயாரிப்புகள் மற்றும் முற்போக்கான நிலைபேறான தன்மையான நடைமுறைகள் மூலம், நுகர்வோர் இதயங்களை வென்றுள்ளது. Hemas Consumer Brands ஆனது உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளின் வரிசைகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தீர்வுகளை வழங்கி வருகிறது. வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட  புத்தாக்கம் மிக்க குழுக்கள் மூலம், உள்ளூர் தேவைகளை அறிந்து அதன் மூலம் சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவது தொடர்பில் அது பாராட்டைப் பெற்றுள்ளது. அந்த வகையில், அர்த்தமுள்ள சலுகைகளை உருவாக்கி, நம்பகமான கூட்டாண்மைகளை வளர்த்து, மேலும் சூழலுக்கு உகந்த உலகத்தை உருவாக்குவதன் மூலம் நாட்டின் அனைத்து பாகங்களிலுமுள்ள சமூகங்களின் வாழ்க்கையை சென்றடைகிறது.



Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *