Latest News Tamil

CNCI சாதனையாளர் விருதுகள் 2021 இல் தொடர்ச்சியாக 3ஆவது வருடமாக சிறந்து விளங்கும் பெல்வத்தை!

இலங்கை தேசிய கைத்தொழில்துறைகள் சம்மேளனத்தினால் (CNCI) ஏற்பாடு செய்யப்பட்ட சாதனையாளர் விருதுகளுக்காக (Achiever Awards) இலங்கையிலுள்ள அனைவரினதும் நாக்கின் நுனியிலும் இருக்கும் முன்னணி பால் வர்த்தகநாமமான பெல்வத்தை (Pelwatte Diaries), தொடர்ந்தும் 3ஆவது வருடமாக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்று வரும் இவ்விருது வழங்கும் விழா, கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர், கடந்த 2022 ஜனவரி 12ஆம் திகதி கலதாரி ஹோட்டலில் 2021ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவின் மூலம் மீண்டும் நடாத்தப்பட்டிருந்தது.

Pelwatte Diaries, தொழில்துறை வெற்றியுடன் ஒலிக்கும் ஒரு பெயராக தற்போது மாறியுள்ள நிலையில், இவ்விழாவில் ஒரு உற்பத்தி நிறுவனம் பெறக்கூடிய மிகப் பெரிய கௌரவங்களில் ஒன்றான, Extra Large பிரிவில் தேசிய ரீதியிலான பாராட்டு (National Merit) விருதை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அது மாத்திரமன்றி, 8 மாகாணங்களுக்கும் மேல் வெற்றியை கொண்டு வந்து சேர்த்துள்ளதன் மூலம், Pelwatte Diaries ஆனது, மாகாண வெண்கல விருதையும் பெற்றுள்ளது.  இவ்வாறு பெல்வத்தை நிறுவனம் வெற்றிகரமான மாலைப் பொழுதைக் கொண்டாடிய நிலையில், அதற்கு Business Excellence Award (வணிக மேன்மை விருது) விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், அக்மால் விக்ரமநாயக்க, இந்த சாதனை குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “CNCI சாதனையாளர் விருதுகள், தொழில்துறை தரத்திற்கும் மேலாக பொருளாதாரத்திற்கும் எமது பங்குதாரர்களுக்கும் வழங்கிய பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட நிச்சயமற்ற நேரங்களில் வழங்கப்பட்ட சவாலுக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும், இந்த மகத்தான சாதனைகளை தொடர்ச்சியாக 3 வருடங்களாகப் பெற்றமை தொடர்பில், நிறுவனம் மற்றும் அதன் பின்புலத்தில் உள்ளவர்கள் தொடர்பிலும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.” என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கைத்தொழில்துறை தரத்தில் சிறந்து விளங்குகின்றதும், சமூகத்தின் விருப்பத்திற்குரியதுமான, உள்நாட்டிலேயே வளர்ந்து வரும் ஒரு வர்த்தகநாமம் எனும் வகையில், இவ்விருதுகள் பெல்வத்தையின் இலக்குகளுக்கு ஒரு சான்றாகும்”. என்றார்.

CNCI விருதுகள் ஆனவை, மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான (GDP) பங்களிப்பு, நிலைபேறான தன்மை, சூழல் பாதுகாப்பு, நிலைபேறான கைத்தொழில்மயமாக்கம் போன்ற சமூகப் பொருளாதார காரணிகளில் ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்களிப்புகளின் அடிப்படையில், நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய மிக இறுக்கமான தரநிலைகள் மற்றும் அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டதாகும். இதனடிப்படையில், அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அவை மேற்கொண்ட பணி தொடர்பில் கௌரவிக்கப்படுகின்றன.

இவ்விழாவில் Pelwatte Dairy நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் சுசந்த மல்வத்த, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமையாளர் சுனேத் குணதிலக, மனித வள முகாமையாளர் ஹர்ஷன் ஜீவகுமார ஆகியோர் கலந்துகொண்டனர்.

CNCI விருதுகளில் தனது 3ஆவது தொடர்ச்சியான கௌரவத்தை பெற்றுள்ள பெல்வத்தை நிறுவனம், அதனை 4ஆவது ஆண்டாகவும் தொடர்ந்து பெற எதிர்பார்ப்பதுடன், எதிர்வரும் ஆண்டில் நாட்டின் முன்னணி உள்நாட்டு பால் உற்பத்தியாளராக தனது பெயரை நிலைநிறுத்த எதிர்பார்ப்பதால், மேலும் பல பாராட்டுகளை நிறுவனம் எதிர்பார்க்கிறது. பால் உற்பத்திகளில் தேசத்திற்கு மிக உயர்ந்த தரத்தை வழங்குவதோடு, உள்நாட்டு கைத்தொழில்துறைகள் மற்றும் விவசாயிகளுக்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் நிலைத்து நிற்பதற்கான ஒரு தளத்தை வழங்குவதன் மூலம் இவை அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *