Latest News Tamil

ஆசிய பசிபிக் பிராந்திய தொடக்க தொகுதிகளுக்காக 3 வருடங்களில் 100 மில்லியன் டொலர்களை Huawei முதலீடு செய்கிறது

அண்மையில் சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங்கில் ஒரே நேரத்தில் இடம்பெற்ற, HUAWEI CLOUD Spark Founders Summit உச்சிமாநாட்டில், தொடக்க உதவிகளுக்காக (startup support) 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கான திட்டத்தை Huawei அறிவித்தது. ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் அதன் Spark திட்டத்தின் மூலம் இம்முதலீடுகள் மேற்கொள்ளப்படுமென Huawei தெரிவித்துள்ளது. இது எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் இப்பிராந்தியத்திற்கு ஒரு நிலையான தொடக்க சூழல் தொகுதி உருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிங்கப்பூர், ஹொங்கொங், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் அதன் தொடக்க மையங்களை உருவாக்க Huawei உதவி வருகின்றது. இத்திட்டம் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, வியட்நாம் ஆகிய மேலும் நான்கு தொடக்க மையங்களை (startup hubs) – Spark திட்ட விரைவுபடுத்தல் திட்டத்தின் மூலம் உருவாக்கி, 1,000 தொடக்கங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயற்படுமெனவும் இதில் 100 தொகுதிகளை மேலும் வளரச்சியூட்டுவதும் அடங்குமென இந்த உச்சிமாநாட்டில் Huawei அறிவித்தது.

இந்த உச்சிமாநாட்டில், உலகளாவிய ரீதியில் Huawei தொடக்கங்களுக்கு உதவும் வகையில், தனது Cloud-plus-Cloud ஒத்துழைப்பு மற்றும் கூட்டு புத்தாக்க கண்டுபிடிப்பு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, உலகளாவிய மற்றும் உள்ளூர் சேவைகள் மற்றும் வணிக தொகுதிகள், தொடக்கங்களின் வளர்ச்சிக்காக  cloud-plus-cloud collaboration ஒத்துழைப்பு மூலம் Huawei தொடர்ச்சியான முயற்சிகளால் அர்ப்பணித்து, அதன் முழுமையான வணிகத் துறைகளை இதற்காக பயன்படுத்துகிறது.

இந்த உச்சிமாநாட்டில் பல முக்கிய ஆசிய தொடக்கத்தினர், கல்வி நிறுவனங்கள், பல்வேறு தொழில்துறையாளர்கள், அரசாங்கங்கள், ஊடகங்களின் பிரதிநிதிகள், 50 இற்கும் மேற்பட்ட பிராந்திய உயர்மட்ட முதலீட்டாளர்கள் மற்றும் 300 இற்கும் மேற்பட்ட தொடக்க நிறுவுனர்கள் கலந்து கொண்டனர். இந்த தொடக்க சுற்றுச்சூழல் அமைப்பின் சமூக ரீதியான பெறுமதி தொடர்பிலும், தொடக்கங்கள் எவ்வாறு தொழில்நுட்ப மற்றும் தொகுதிகளின் கண்டுபிடிப்புகளை எவ்வாறு ஊக்குவிக்கலாம், உள்ளூர் சமூகங்களுக்கு அதனை எவ்வாறு பங்களிக்கலாம், சமூக பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்பது தொடர்பில் இந்நிகழ்வின் உரைகள் அமைந்ததோடு, அதில் கலந்து கொண்ட வளவாளர்களும் அது தொடர்பானவர்களாக இருந்தனர்.

இந்நிகழ்வில், ஆசியா பசிபிக் Spark திட்டத்தின் கீழ் மூன்று மேலதிக முன்முயற்சிகள் Huawei யினால் ஆரம்பிக்கப்பட்டது. Spark Developer Program, இது ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் HUAWEI CLOUD மூலம் இயக்கப்படும் ஒரு developer ecosystem தொகுதியை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது; Spark Pitstop Program, இது தயாரிப்பு வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கில் HUAWEI CLOUD இல் தொடக்கங்களை இணைத்து அதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது; Spark Innovation Program (SIP), இது Spark தொடக்க தொகுதி மூலம் நிறுவன ரீதியான கண்டுபிடிப்புகளை எளிதாக்குவதில் கவனம் செலுத்துகின்றது.

Huawei நிறுவனத்தின் சிரேஷ்ட பிரதித் தலைவரும், சபை உறுப்பினருமான கெத்தலின் சென் (Catherine Chen), சமூக மேம்பாட்டுக்கு தொடக்கங்கள் எவ்வளவு முக்கியமானது என்பது தொடர்பிலும், இவ்வாறான தொடக்கங்களுக்கு உதவியளிக்க Huawei என்னென்ன செய்கிறது என்பதையும் தெரிவித்து, உச்சிமாநாட்டைத் தொடங்கி வைத்தார்: “தொடக்கங்கள் மற்றும் சிறிய, நடுத்தர வணிகங்கள் என்பன, தற்காலத்தின் கண்டுபிடிப்பாளர்கள், மாற்றத்தை கொண்டுபவர்கள், முன்னோடிகளாவர். 34 ஆண்டுகளுக்கு முன்பு, வெறும் 5,000 டொலர்கள் எனும் பதிவு செய்யப்பட்ட மூலதனத்துடன் கூடிய ஒரு தொடக்க நிறுவனமாக Huawei இருந்தது. பெருமளவான தொடக்க நிறுவனங்களுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை, எமது அனுபவம் மற்றும் வளங்கள் மூலம் எவ்வாறு உதவலாம் என நாம் சமீபத்தில் சிந்தித்தோம். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் வணிக ரீதியான வெற்றியை அடைவதற்கும், மேலும் புதுமையான தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை உலகத்திற்கு வழங்குவதற்கும், டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றது.” என்றார்.

Huawei Cloud Business Unit இன் பிரதான நிறைவேற்று அதிகாரி Zhang Ping’an தெரிவிக்கையில், “2017 இல் HUAWEI CLOUD ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் cloud சேவையாக வளர்ந்துள்ளதுடன்,  எண்ணற்ற தொடக்கங்களின் வளர்ச்சியை ஊக்குவித்து வந்துள்ளது. கடந்த வருடம், நாம் Spark திட்டத்தை நாம் ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் ஆரம்பித்தோம். இத்திட்டத்தின் மூலம், நாம் உள்ளூராட்சிசபைகள், முன்னணி காபகங்கள், நன்கு அறியப்பட்ட மூலதன நிறுவனங்கள் (VC firms), சிறந்த பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பல பிராந்தியங்களில் தொடக்கங்களுக்கான ஆதரவுத் தளங்களை உருவாக்கி வருகிறோம். இப்போது 40 தொடக்கங்கள் எமது திட்டத்தில் பங்கேற்று வருகின்றன.” என்றார்.

Zhang தொடர்ந்தும் தெரிவிக்கையில், “இன்று முதல், cloud-plus-cloud ஒத்துழைப்பானது, தொடர்ச்சியான தொழில்நுட்ப புத்தாக்கங்கள், உலகளாவிய மற்றும் உள்ளூர் சேவைகள் மற்றும் உயர்தர வணிக தொகுதிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட நான்கு புதிய முயற்சிகள் மூலம் தொடக்கங்களுக்கான எமது ஆதரவை நாம் அதிகரித்து வருகிறோம். இன்று, நாம் Cloud-plus-Cloud ஒத்துழைப்பு மற்றும் கூட்டு புத்தாக்க கண்டுபிடிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் 40 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதிமிக்க வழங்கள் மூலம், தொடக்கங்களுக்கு எமது உதவிகளை வழங்குவோம். அதில் அரைவாசி முதலீடு HUAWEI CLOUD சேவை மூலம் பெறப்படுவதுடன், அடுத்த அரைவாசி Huawei Mobile Services (HMS) சேவைகளிலிருந்து பெறப்படுகின்றது. HMS தொகுதி அமைப்பில் 200 தொடக்கங்களுக்கு உதவியளிப்பதும், ஒரு பில்லியன் Huawei சாதன பயனர்களுடன் பணியாற்றும் உலகளாவிய developerகளுடன் எமது வளங்களின் வலையமைப்பை பகிர்ந்து கொள்ளவதுமே 2021 இல் எமது திட்டமாகும். இது தவிர, 100,000 HMS Cloud சார்ந்த டெவலப்பர்களுக்கு உதவியளிக்கும் வகையிலான, (HMS Developer Innovation Center) HMS டெவலப்பர் புத்தாக்க மையத்தையும் நாம் திறக்கவுள்ளோம்.

SGInnovate இன் பிரதான நிறைவேற்று அதிகாரி Dr. Lim Jui இதன்போது தெரிவிக்கையில், “புதிய வாய்ப்புகளை ஊக்குவிக்க நாம் ஒன்றாக இணையும்போதே, ஆழ்ந்த தொழில்நுட்ப பொருளாதாரத்தின் (Deep Tech Economy) உண்மையான தாக்கம் உணரப்படுகிறது. Huawei போன்ற கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், சிங்கப்பூரில் நம்பிக்கைக்குரியதும், திறமையானதுமான வளர்ந்து வரும் தொழில்நுட்ப தொடக்கங்களை உருவாக்குவது எனும் எமது இலக்கை அடைய வழிவகுத்து வருகின்றது.

Alfred Sit Wing-hang JP, ஹொங்கோங் அரசின் விசேட நிர்வாகப் பிராந்தியத்தின் புத்தக்காம் மற்றும் தொழில்நுட்பச் செயலாளர், தனது ஆரம்ப உரையில் தெரிவிக்கையில், “ஆசியாவில் நிறுவுனர்கள், முதலீட்டாளர்கள், பெரு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களை இணைப்பதன் மூலம், பிராந்தியத்தில் உள்ள புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப (I&T) சமூகத்தில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும், கருத்துக்களையும், அனுபவங்களையும் பரிமாறிக்கொள்ளவுமான பெறுமதிமிக்க தளத்தை இந்த உச்சிமாநாடு வழங்குகிறது. இது ஹொங்கொங்கை சர்வதேச I&T மையமாக உயர்வடைய ஹொங்கொங் SAR அரசின் திட்டத்துடன் இணைகிறது. இங்கு உலகளாவிய I&T திறமையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் கணிசமான வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான பரந்த வாய்ப்புகளைக் கொண்டிருக்கும்.” என்றார்.

முழுமையாக இணைக்கப்பட்ட, புத்திசாதுர்யமான உலகை நோக்கி நகரும் போது மேலும் பல தொடக்கங்கள் அடி முதல் நுனி வரை டிஜிட்டல் மயமாக்கலுக்கலை அடைகின்றன. HUAWEI CLOUD உட்கட்டமைப்பானது Huawei மொபைல் சேவைகளுடன் இணைந்து அனைத்து தொழில்துறைகளிலிருந்துமான தொடக்கங்களுக்கு உதவியளிக்கிறது. Huawei இன் Cloud சலுகைகள், டெவலப்பர்கள் மற்றும் கூட்டாளர்களுக்கு தங்களது கணக்குகள், மேம்பாட்டுத் தளங்கள், செயலிகளின் வழங்கல் மற்றும் செயல்பாட்டை ஒருங்கிணைக்க உதவுகின்றன. HMS தற்போது உலகின் மூன்றாவது பெரிய மொபைல் செயலி தொகுதியாகும். அத்துடன், பல தொடக்க நிறுவனங்கள் தங்கள் உலகளாவிய செல்வாக்கை விரிவாக்க அது உதவுகிறது. தற்போது, ​​170 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து 4.5 மில்லியன் டெவலப்பர்கள் HMS இல் தங்கி அதை நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்க நிறுவனங்களை Huawei முக்கிய பங்குதாரர்களாக அங்கீகரிக்கிறது. HUAWEI CLOUD Spark Founders Summit உச்சி மாநாட்டில், Huawei அதன் கண்டுபிடிப்பு ஆராய்ச்சித் திட்டங்களின் சமீபத்திய தரவுகளை தொடக்க நிறுவனங்கள் முன்னிலையில் வெளியிட்டது. ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூரில் உள்ள அரசாங்கங்கள், உயர்மட்ட முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் முன்னணி பல்கலைக்கழகங்களுடன் நெருங்கிய கூட்டாண்மையுடன் ஆதரவுத் தளங்களை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் மூலம், Huawei இற்கும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இருந்து 2,000 இற்கும் மேற்பட்ட பங்காளிகளுக்கும் இடையே திடமான உறவுகள் ஏற்பட்டுள்ளதை தரவுகள் காண்பிக்கின்றன.

HMS Developer Innovation Center (புத்தாக்க மையத்தை) உருவாக்கும் திட்டத்துடன், தொடர்ச்சியான பல அறிவிப்புகளை Huawei செய்திருந்தது. இந்த மையத்தின் மூலம், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 210 முன்னணி பல்கலைக்கழகங்களுடன் இணைந்து எதிர்கால திறமையாளர்களை ஊக்குவிப்பதை Huawei நோக்கமாகக் கொண்டுள்ளது.

Huawei ஆசியா பசிபிக் பிராந்தியத்தின் தலைவர் ஜெஃப்ரி லியு (Jeffery Liu) தனது கருத்தை தெரிவிக்கையில், “கடந்த இரண்டு தசாப்தங்களாக, நாம் ‘ஆசியா பசிபிக்கில், ஆசியா பசிபிக்கிற்காக’ (‘In Asia Pacific, For Asia Pacific’) இருப்பதில் உறுதியாக இருக்கிறோம். Huawei நிறுவனத்தின் உலகளாவிய வாடிக்கையாளர் தளம் மற்றும் அதன் முழு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி, Spark திட்டமானது எதிர்வரும் மூன்று வருடங்களில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடு செய்யும் என்பதுடன், மாற்றமடைந்து வரும் இப்பிராந்தியத்தில் புதிய மதிப்பை உருவாக்கும் ஒரு நிலைபேறான தொடக்க தொகுதி அமைப்பை நிறுவுவதற்கு விரிவான ஆதரவை வழங்கும்.” என்றார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் செயற்பட்டு வரும், தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தின் (ICT) முன்னணி உலகளாவிய சேவை வழங்குநர் எனும் வகையில் Huawei, இலங்கையின் அனைத்து முக்கிய தொலைத்தொடர்பு வலையமைப்பாளர்கள் மற்றும் இலங்கை முழுவதுமுள்ள இலங்கை மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. தொலைத்தொடர்பு வலையமைப்புகள், IT, ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் கிளவுட் சேவைகள் ஆகிய நான்கு முக்கிய களங்களில் ஒருங்கிணைந்த தீர்வுகளுடன், முழுமையாக இணைக்கப்பட்ட மற்றும் அறிவார்ந்த இலங்கையை நோக்கி ஒவ்வொரு தனிநபர், வீடுகள் மற்றும் நிறுவனத்திற்கும் டிஜிட்டல் தீர்வுகளை வழங்க நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.

1987 இல் நிறுவப்பட்ட Huawei நிறுவனம், தகவல் மற்றும் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) உள்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி உலகளாவிய வழங்குநராக உள்ளது. எம்மிடம் 194,000 இற்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளதோடு, நாம் 170 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இயங்கி வருகிறோம். இதன் மூலம் உலகம் முழுவதும் மூன்று பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு நாம் சேவையாற்றி வருகிறோம்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *