Latest News Tamil

வீட்டிலிருந்து வேலை மற்றும் வீட்டிலிருந்து கல்வி கற்பவர்களுக்கு Huawei புதுமைபடைக்கும் டேப்லெட்கள்

வீட்டிலிருந்து வேலை (WFH) மற்றும் வீட்டிலிருந்து கல்வி (LFH) ஆகியவை எதிர்கால வாழ்க்கையை வடிவமைப்பதில் மிக முக்கியமானவை என்பதால் உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான Huawei , சமீபத்திய மாற்றங்களை அறிந்து அதன் கோரிக்கைகளை அதனை பூர்த்தி செய்து வருகின்றது. அந்த வகையில்   வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களுக்கும் வீட்டிலிருந்து கல்வி கற்பவர்களுக்குமான அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக புதுமைகளைக் கொண்டு வருகின்றது.


சீன தொழில்நுட்ப நிறுவனமான Huawei வேலை மற்றும் கற்றல் ஆகிய இரண்டினதும் அதிகரித்து வரும் தேவைகளுக்கு ஏற்ப பல அம்சங்கள் நிரம்பிய tablets களை அறிமுகப்படுத்தி வருகிறது. டேப்லெட்டுகளுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக, உங்களுக்கு எது பொருத்தமானது என்பதைப் புரிந்துகொள்வதற்காக Huawei சமீபத்தில் அறிமுகப்படுத்திய டேப்லெட் வரம்புகளைப் பற்றி விரிவாக பார்ப்போம்.


Huawei MatePad Pro என்பது ஒரு டேப்லெட்டில் ஒரு மடிக்கணினியின் நோக்கத்திற்கு உதவுகிறது மற்றும் 10.8- அங்குல Huawei Full view display உடன் வருவதடன் இது 90% திரைக்குமான விகிதத்தையும்  வழங்குகிறது. Huawei MatePad Pro ஆனது smart magnetic keyboard உடன் வருகின்றது. இது டேப்லெட்டில் செருகப்பட்டு நீங்கள் ஒரு உண்மையான மடிக்கணினியில் வேலை செய்வது போல் உணரலாம். இதன் மூலம் Word ஆவணங்களை வசதியாகத் திருத்தவும், பயணத்தின்போது விளக்கக்காட்சிகளை (presentations) உருவாக்கவும் அவற்றை வழங்கவும் உங்களுக்கு உதவுகின்றது.


MatePad Proவானது மின் புத்தகங்களைப் படித்தல், இணையத்தில் உலாவல், வீடியோ டுடோரியல்களைப் பார்ப்பது, video conferencesகளை நடத்தவது போன்றவற்றுக்கும் பயன்படுத்தலாம். அத்தோடு Huawei M-pencil ஆனது பயனர்களுக்கு எளிதில் திரையில் வரையவும், குறிப்புகளை குறித்துக்கொள்ளவும் உதவும் அதேவேளை எந்த சந்திப்பு நிமிடங்களையும் தவறவிடாமல் இருக்கவும் உதவுகின்றது.
Huawei MatePad Pro ஆனது Huawei Share மற்றும் Multi-Screen collaborationஐ ஆதரிக்கிறது. இது புதுமையான Multi-Screen collaboration அம்சம் உண்மையில் இரு சாதனங்களையும் ஒன்றிணைத்து கவனச்சிதறல்கள் மற்றும் தேவையை குறைப்பதால் ஸ்மார்ட்போனை வேலை செய்யும் போது அல்லது கற்றலின் போது அதிகபட்ச செயல்திறனைப் பெற பயனரை தடையின்றி இணைக்க அனுமதிக்கிறது.


வேலை மற்றும் கற்றல் நடவடிக்கைகளை ஆதரிக்கும் அம்சங்களைத் தவிர, MatePad Pro 13 எம்.பி பின்புற கெமரா மற்றும் 8 எம்.பி முன் கெமரா போன்ற மேம்பட்ட விவரக்குறிப்புகளுடன் வருகிறது. மேலும் மேம்பட்ட செயல்திறனுக்காக Kirin 990 Flagship chipset மூலம் இயக்கப்படுகிறது. Huawei MatePad 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் அதன் 7250mAh பெரிய பட்டரியானது 12 மணிநேர தொடர்ச்சியான பயன்பாட்டை எளிதில் வழங்குகிறது.
Huawei MatePad 10.4 அங்குல திரை கொண்ட மற்றொரு சக்திவாய்ந்த டேப்லெட் ஆகும். இந்த டேப்லெட் E-book mode, eye comfort mode மற்றும் திரையில் உள்ள குறிப்புகளை அதன் சுயமாக வரைந்து எடுக்கும் திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. MatePad அதன் பெரிய திரையுடன் படிக்க, இணையத்தில் உலாவல், ஆவணங்களைத் திருத்துதல், வீடியோக்களைப் பார்ப்பது, இணையவழி வகுப்புகளை அணுகுவது மற்றும் ஏனைய இணையத் தேவைகளுக்கான தோழறாக உங்களளோடு இருக்கின்றது.

அதன் புதுமையான multi window பயன்முறை ஒரு நேரத்தில் இரண்டு பணிகளுடன் ஒத்துழைக்க பயனரை அனுமதிக்கிறது. இது குறிப்பாக அலுவலக வேலைகளில் உங்கள் செயல்திறனை மேலும் மேம்படுத்துகிறதுடன் 7250mAh பெரிய பட்டரியுடன் வருகிறது, இது பயனருக்கு எந்த தடங்கலும் இல்லாமல் நீண்ட நேரம் பணிகளைத் தொடர உதவுகிறது. அத்தோடு MatePad ஆனது  Huawei Share மற்றும்  Multi-screen ஒத்துழைப்பை ஆதரிக்கிறது. இது வேலை செய்யும் போது அல்லது கற்றலின் போது செயல்திறனை மேம்படுத்துகின்றது.
Huawei MatePad T10 ஆனது 10.1 அங்குல முழு எச்.டி. திரை மற்றும் தெளிவான மற்றும் தெளிவான படங்களை உருவாக்கும் Huawei ClariVu™ தொழில்நுட்பத்துடன் வருகிறது. மின் புத்தகங்களைப் படிப்பது முதல் இணையத்தில் உலாவல் மற்றும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பது, சிறிய விளக்கக்காட்சிகளை உருவாக்குதல் மற்றும் docsகளை திருத்துவது வரை வெகு இலகுவாக கையாளலாம். அத்தோடு  Huawei MatePad T10 மூலம் வீட்டிலேயே தங்கி அலுவலக பணிகள் அல்லது கற்றல் நோக்கங்களுக்காக ஈடுபடுவோருக்கு அனைத்தையும் வழங்குகின்றது. மின் புத்தகத்தைப் படிக்கும்போது ஒரு குறிப்பிட்ட சொல் அல்லது வரையறைக்கு இணையத்தை உலாவ முடியும் என்பதால் அதன் dual window பயன்முறை செயல்திறனை இரட்டிப்பாக்குகிறது.
அதன் TÜV Rheinland சான்றளிக்கப்பட்ட Eye Comfort தொழில்நுட்பம் அதிக அளவிலான கண்களுக்கான ஆறுதலைத் தருகின்றது. இது பயனரை தொடர்ந்து ஒரு பணியில் ஈடுபட அனுமதிக்கிறது மற்றும் தனித்துவமான மின்-புத்தக பயன்முறையானது வாசிப்பு அனுபவத்தை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது. மேலும், அதன் இருண்ட பயன்முறை விருப்பம் இரவில் கண்களில் இருந்து அழுத்தத்தை வெளியிடுகிறது. எந்தவொரு அசெகரியமும் இல்லாமல் நீண்ட பயன்பாட்டிற்கு அனுமதிக்கும் மென்மையான காட்சியை வழங்குகிறது.


வீடியோக்களைப் பார்ப்பது, இணையத்தில் உலாவல், மின்னஞ்சல்களுக்கு பதிலளித்தல், ஆவணங்களைத் திருத்துதல் மற்றும் இது போன்ற அன்றாட பணிகளை அணுக 8 அங்குல பெரிய திரையுடன் வரும் மற்றொரு portable tablet ஆன Huawei MatePad T8 ஆகும். இது  2GB RAM மற்றும் 32GB சேமிப்பகத்துடன் வருகிறது. இது வேகமான மற்றும் மென்மையான செயல்திறனை வழங்கும் மற்றும் கோப்புகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சேமிக்க போதுமான சேமிப்பிடத்தை வழங்குகிறது. எல்லாவற்றிலும் மிகவும் மலிவு விலையில், வீட்டிலிருந்து கற்றலைத் தொடரும் மாணவர்களுக்கு Huawei MatePad T8 மிகவும் பொருத்தமானதாக பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் அவர்கள் இணையவழி  வகுப்புகளில் பங்கேற்கலாம் மற்றும் நீண்ட கால பேட்டரி மூலம் எளிதில் உதவக்கூடிய வீடியோ பயிற்சிகளையும் பார்க்கலாம்.


இந்தச் சாதனங்களானது வெவ்வேறு விலைகளில் கிடைக்கிறது. Huawei MatePad Pro ரூ. 159,999 / -, Huawei MatePad ரூ. 74,199 / – Huawei MatePad T10s ரூ. 48,999 / – மற்றும் Huawei MatePad T8 ரூ. 28,999 / – என்ற விலைகளில் வருகின்றது.  இந்த நான்கு டேப்லெட்டுகள் வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் மற்றும் கற்பவர்களின் தேவைகளுக்கு ஏற்றது. என்பதுடன் அனைத்து Huawei காட்சியறை மையங்களிலும், நாடு பூராகவும் உள்ள சிங்கர் காட்சியறைகளிலும் பெற்று்கொள்ளலாம். அத்தோடு Daraz.lk மற்றும் singer.lk ஆகிய இணைய வழி வணிக தளங்கள் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *