Latest News Tamil

ZenBook Flip 13 (UX363) இனை இலங்கையில் வெளியிட்ட ASUS

ASUS Sri Lanka தனித்துவமான நேர்த்தியான வடிவமைப்புடன் கூடிய ZenBook Flip 13 (UX363)  மடிக்கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது Intel Evo தளத்தில் தனித்துவமான மொபைல் அனுபவத்துடன்,  OLED தொடுதிரை, 11th Generation Intel Core புரசசர்கள் மற்றும் Intel Iris Xe கிராபிக்ஸ் உள்ளிட்ட அற்புதமான மேம்படுத்தலுடன் கூடியது.

முழு அளவிலான HDMI மற்றும் USB Type-A ports உள்ளடக்கிய உலகின் மிக மெல்லிய மாற்றத்தக்க மடிக்கணினி ZenBook Flip 13 என்பதுடன் அண்மைய Thunderbolt 4 USB-C ports இரண்டும் தடையற்ற இணைப்பை வழங்குகின்றன. 16 GB RAM மற்றும் 1 TB PCIe® 3.0 SSD வரையான புதிய புரசசர்கள் மற்றும் கிராபிக்ஸ் ஆகியவை 16 ஜிபி மின்னல் வேக செயல்திறனை உறுதி செய்கின்றன.

ZenBook Flip 13 இல் உள்ள WiFi 6 பாவனையாளர்கள் 4K UHD ஒன்லைன் வீடியோக்கள் மற்றும் தரவு பரிமாற்றங்களை 2.4 Gbps வரையான வேகத்தில் அனுபவித்து மகிழ உதவுகிறது. WiFi செயற்திறனானது ASUS WiFi Master Premium தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்படுவதுடன், இது ASUS WiFi Stabilizer, ASUS WiFi SmartConnect போன்ற சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது. வெறும் 13.9 mm மெல்லிய மற்றும் 1.3 கிலோ எடையுள்ள ZenBook Flip 13, எடுத்துச் செல்ல இலகுவானதுடன்,  மிகச்சிறந்த பல்துறைத்தன்மையுடன் கூடியது.

அதன் துல்லியமாக வடிவமைக்கப்பட்ட 360° ErgoLift hinge, மடிக்கணினி, டெப்லெட், கூடாரம், நின்ற நிலை அல்லது இடையில் எதுவும் என பல்துறை பயன்பாட்டு முறைகளுக்கு ஏற்றது. இதன் புதிய edge-to-edge  கீபோர்ட் மூலம் வசதியாக தட்டச்சு செய்வதற்கும். மேம்பட்ட சிஸ்டம் குளிரூட்டலுக்காகவும் உயர்தல் மற்றும் சாய்தல் அம்சங்களை கொண்டது.

ZenBook Flip 13 தெளிவான மற்றும் துல்லியமான காட்சிகளுக்கு நேர்த்தியான FHD OLED NanoEdge தொடுதிரையைக் கொண்டுள்ளது. எங்கள் OLED தொடுதிரை ஒரு சாதாரண LCD ஐ விட 1.6X மடங்கு அதிகமாக இருக்கும் வண்ண அளவைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் தீங்கு விளைவிக்கும் உமிழ்வை 70% வரை குறைக்க நீல-ஒளி விகிதத்தை நிர்வகிக்கிறது. இது பல மணிநேர பயன்பாட்டிற்குப் பிறகும் பயனரின் கண்களுக்கு அதிக அக்கறை அளிப்பதாக உறுதியளிக்கிறது.

மேலதிக ASUS Pen மற்றும் Windows Ink ஆகியவற்றுடன் இணைக்கும்போது NanoEdge திரை வழங்கும் அம்சங்களை கலைஞர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் விரும்புவார்கள். புதிதாக வடிவமைக்கப்பட்ட ASUS Pen, 4096 அழுத்த நிலைகளைக் கொண்டுள்ளது, மேலும் இயற்கையான உணர்வுள்ள ஸ்டைலஸ் உள்ளீட்டிற்கான மேம்பட்ட துல்லியத்தையும் உணர்திறனையும் உறுதிசெய்கிறது. இது ஆதரிக்கப்படும் எந்தவொரு செயலியிலும்  படைப்பாற்றல், குறிப்பு எடுப்பது மற்றும் எடிட்டிங் ஆகியவற்றிற்கான சரியான தெரிவாக அமைகிறது.

ZenBook Flip 13 இரட்டை-செயல்பாட்டு டச்பேட் – ASUS NumberPad 2.0, இது முந்தைய மொடலை விட 30% பெரியது மற்றும் எளிதான தரவு உள்ளீட்டிற்காக LED-ஒளிரும் எண் விசைப்பலகையை இணைக்கிறது. Touchpad இல் உள்ள ஒரு பிரத்யேக icon, நம்பர்பேட்டினை எளிதில் இயக்க அல்லது முடக்க அனுமதிக்கிறது, மேலும் அறிவுபூர்வமான மென்பொருள் நம்பர்பேட் செயல்படுத்தப்படும்போது கூட கர்சர் கட்டுப்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதிக்கிறது.

ஒரே சார்ஜில் 14 மணிநேர செயல்பாட்டை வழங்கக்கூடிய அதிக திறன் கொண்ட 67 Wh பற்றரியைக் கொண்ட ZenBook Flip 13, இன்றைய வேலை நிறைந்த வாழ்க்கை முறைகளுக்கு ஏற்றது. இதனோடு வழங்கப்படும் 65-watt சார்ஜருடன் ZenBook Flip 13, fast charging இனை ஆதரிக்கிறது. மேலும், ASUS USB-C Easy Charge பாவனையாளர்கள் பரந்த அளவிலான நியம USB-C அல்லது USB-C Power Delivery (PD) சார்ஜர்களைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.

ASUS ZenBook Flip 13 (UX363) தொடர்பான மேலதிக விபரங்களுக்கு www.asus.com/lk.

சிறப்பம்சங்கள் ஒரே பார்வையில்:

•              Silky-smooth power: Up to 11th Gen Intel® Core™ i7 processors with Intel® Iris® Xe graphics; up to 1 TB PCIe® 3.0 SSD; up to 16 GB RAM; Intel Evo™ verified

•              Precision OLED touchscreen: Vivid 13.3″ FHD OLED NanoEdge touchscreen supports ASUS Pen with 4096 pressure levels for intuitive input

•              Flexible performance, effortless mobility: 13.9 mm ultrathin laptop weighs 1.3 kg and includes full-size USB Type-A, HDMI and Thunderbolt 4 USB-C® ports

•              Flex with style: Elegant design with precision-engineered 360° ErgoLift hinge for versatile usage modes: laptop, stand, tent, tablet, or anything in between

•              Extreme battery life: High-capacity battery for up to 14 hours of autonomy, with fast-charging support and convenient ASUS USB-C® Easy Charge technology

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *