Latest News Tamil

உள்நாட்டு திரவ பால் தேவையை பூர்த்தி செய்யும் ஜனாதிபதியின் உறுதிமொழிக்கு Pelwatte Dairy ஆதரவு

இலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries, உள்நாட்டு பால் தேவையை பூர்த்தி செய்யவதுடன், உள்நாட்டு பாலுற்பத்தியாளர்களின் சமூக – பொருளாதார நிலையை உயர்த்தும் புதிய நோக்குடன் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

உள்நாட்டு பாலுற்பத்தியை மேம்படுத்துவதற்கும்,  அடுத்த தசாப்தத்தில் உள்நாட்டு திரவ பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அண்மைய உறுதிமொழியை ஆதரிக்கும் வகையில் இது அமைகின்றது. அரசாங்கத்தின் தேசிய கொள்கை கட்டமைப்பான ‘செழுமை மற்றும் மேன்மைக்கான நோக்கு’, அரச, தனியார் துறை மற்றும் சிறு பால் விவசாயிகளுடன் இணைந்து திரவ பாலுக்கான உள்ளூர் தேவையை பூர்த்தி செய்யும் குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்களை உள்ளடக்கவுள்ளது.

Pelwatte Dairy அனைத்து சிறு அளவிலான விவசாயிகளுக்கும் தனியார் பண்ணைகளுக்கும் உத்தரவாத கொள்வனவாளர் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் பால் பண்ணைத் துறையை ஆதரிப்பதில் உறுதியாக உள்ளது. மேலும் அவர்களை உயர்த்தும் பொருட்டு அவர்களின் தயாரிப்புகள் எப்போதும் போட்டித்தன்மையாக விலையிடப்படும்.

எங்கள் பெறுமதி சங்கிலியின் மிக முக்கியமான கூறுகள் விவசாயிகள். இந்த காரணத்தினாலேயே, Pelwatte Dairy Industries இல் இந்த ஏழை சமூகங்களின் சமூக-பொருளாதார தரத்தை உயர்த்துவதில் தீவிர கவனத்துடன் பால் விவசாயிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் மேம்படுத்துவதற்கும் நாங்கள் பெருமளவில் முதலீடு செய்கிறோம்.

“புல் வகைகளை வளர்த்தல், கறவை பசுக்களை இனப்பெருக்கம் செய்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் சேவைகளை மேம்படுத்தல் போன்ற அண்மையில் ஜனாதிபதி கலந்துரையாடிய முயற்சிகளை நாம் மனப்பூர்வமாக வரவேற்கின்றோம்.  பால் பண்ணைத் துறையை வலுவூட்டல் மற்றும் அதனோடு தொடர்புபட்ட சமூகங்களை நோக்கி பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதைப் பார்ப்பது மிகவும் திருப்தியளிக்கின்றது. Pelwatte அந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறது,” என Pelwatte Dairy Industries இன் முகாமைத்துவ பணிப்பாளர் அக்மால் விக்ரமநாயக்க தெரிவிக்கின்றார்.

வாடிக்கையாளரைப் பொருத்த வரையில், எப்போதும் உலகளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தரங்களுக்கு இணங்கும் மிக உயர்ந்த தரமான தயாரிப்புகளை வழங்க Pelwatte Dairy பாடுபடுகின்றது. தரம், சுவை மற்றும் ஆரோக்கியம் நிறுவனத்தின் மூன்று வழிகாட்டும் தூண்களாக இருப்பதால், புத்துணர்ச்சி எப்போதும் எமது தயாரிப்புகளின் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. பண்ணையிலிருந்து விற்பனை நிலையங்களுக்கு  48 மணி நேரத்திற்குள் அனைத்து தயாரிப்புகளையும்  வழங்கும் அதன் கொள்கையின் மூலம் இது உறுதி செய்யப்படுகிறது.

“உள்நாட்டு மற்றும் சிறிய வணிகங்களை ஆதரிக்கும் வலுவான பிரதிநிதி என்ற வகையில் எமது நோக்கம் உள்நாட்டு தயாரிப்புகள் தொடர்பில் இலங்கை நுகர்வோரின் பார்வையை மாற்றுவதுடன், எம்மைப் போன்ற உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனங்களின் பெறுமதி சேர் தயாரிப்புகள், பல கடந்த வருடங்களாக சந்தைக்கு இறக்குமதி செய்யப்படும் சர்வதேச தயாரிப்புகளுக்கு இணையானது அல்லது மேம்பட்டவை என்ற உள்நாட்டு பாலுற்பத்தி துறையின் யதார்த்தத்தை தெளிவுபடுத்துவதாகும்,” என விக்ரமநாயக்க மேலும் தெரிவித்தார்.

மேலும், உள்நாட்டு தொழில்துறைகளை ஆதரிக்க வேண்டியது, தொற்றுநோய்க்கு பின்னரான உலகில் மிகவும் அவசியமாகிறது. இது குறித்து விக்ரமநாயக்க மேலும் கூறியதாவது: “கொவிட் – 19 இலங்கை நுகர்வோருக்கு ஒரு உண்மையான கண் திறப்பாளராக இருந்ததுடன், சாத்தியமற்ற கொள்வனவு முறைகள், பகட்டான வாழ்க்கை முறைகள் மற்றும் மிகை நுகர்வுக் கலாசாராம் ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியது. எனவே, இறக்குமதியைக் குறைப்பதும், தேசத்தைத் தக்கவைக்க உள்நாட்டு தொழிற்துறைகளை மேம்படுத்துவதும் நிச்சயமாக இந்த நாளிலும், காலத்திலும் முன்னோக்கி செல்லும் பாதையாகும்.”

Pelwatte Dairy  இலங்கையில் பாலுற்பத்தித் தொழில்துறையின் நிலையான வளர்ச்சிக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் உள்ளது மற்றும் விவசாயிகளையும் அவர்களின் சமூகங்களையும் மேம்படுத்துவதன் மூலம் இந்த வளர்ச்சியை முன்னெடுக்க முயல்கிறது. ஆரம்பத்தில் இருந்தே அதன் இறுதி இலக்கு பால் உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்வதாகும். அண்மையில் ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, இந்த தேசிய இலக்கை அடைவதில் அரசாங்கம் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கைகோர்த்து செயல்பட நிறுவனம் மிகவும் ஆர்வமாக உள்ளது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *